அத்தியாயம்: 15, பாடம்: 46, ஹதீஸ் எண்: 2255

‏و حَدَّثَنِي ‏ ‏سُرَيْجُ بْنُ يُونُسَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ ‏ ‏عَنْ ‏ ‏مُوسَى بْنِ عُقْبَةَ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ ‏ ‏قَالَ: ‏

قُلْتُ ‏ ‏لِأَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏غَدَاةَ ‏ ‏عَرَفَةَ ‏ ‏مَا تَقُولُ فِي التَّلْبِيَةِ هَذَا الْيَوْمَ قَالَ سِرْتُ هَذَا الْمَسِيرَ مَعَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَأَصْحَابِهِ ‏ ‏فَمِنَّا الْمُكَبِّرُ وَمِنَّا الْمُهَلِّلُ وَلَا يَعِيبُ أَحَدُنَا عَلَى صَاحِبِهِ

நான் அரஃபா நாளின் காலையில் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், “இன்றைய தினத்தில் தல்பியா கூறுவதைப் பற்றித் தாங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நான் நபி (ஸல்) அவர்களுடனும் நபித்தோழர்களுடனும் (பயணம்) சென்றிருக்கிறேன். அப்போது எங்களில் சிலர் தக்பீர் கூறிக்கொண்டிருப்பர்; வேறுசிலர் தல்பியா கூறிக்கொண்டிருப்பர். எங்களில் யாரும் எவரையும் குறை கூறமாட்டார்கள்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) வழியாக முஹம்மது பின் அபீபக்ரு அஸ்ஸகஃபீ (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 46, ஹதீஸ் எண்: 2254

‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ أَبِي بَكْرٍ الثَّقَفِيِّ: ‏

أَنَّهُ سَأَلَ ‏ ‏أَنَسَ بْنَ مَالِكٍ ‏ ‏وَهُمَا ‏ ‏غَادِيَانِ ‏ ‏مِنْ ‏ ‏مِنًى ‏ ‏إِلَى ‏ ‏عَرَفَةَ ‏ ‏كَيْفَ كُنْتُمْ تَصْنَعُونَ فِي هَذَا الْيَوْمِ مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ كَانَ ‏ ‏يُهِلُّ ‏ ‏الْمُهِلُّ ‏ ‏مِنَّا فَلَا يُنْكَرُ عَلَيْهِ وَيُكَبِّرُ الْمُكَبِّرُ مِنَّا فَلَا يُنْكَرُ عَلَيْهِ

நானும் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களும் மினாவிலிருந்து அரஃபாவிற்குப் போகும்போது, நான் அனஸ் (ரலி) அவர்களிடம், “நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தபோது இந்த நாளில் என்ன செய்தீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி), “அன்று எங்களில் சிலர் தல்பியா கூறிக்கொண்டிருந்தனர்; அதற்கு ஆட்சேபம் தெரிவிக்கப்படவில்லை. வேறுசிலர் தக்பீர் கூறிக்கொண்டிருந்தனர்; அதற்கும் ஆட்சேபம் தெரிவிக்கப்படவில்லை” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) வழியாக முஹம்மது பின் அபீபக்ரு அஸ்ஸகஃபீ (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 46, ஹதீஸ் எண்: 2253

‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏وَهَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏وَيَعْقُوبُ الدَّوْرَقِيُّ ‏ ‏قَالُوا أَخْبَرَنَا ‏ ‏يَزِيدُ بْنُ هَارُونَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏عُمَرَ بْنِ حُسَيْنٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ أَبِي سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ: ‏

كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي غَدَاةِ ‏ ‏عَرَفَةَ ‏ ‏فَمِنَّا الْمُكَبِّرُ وَمِنَّا الْمُهَلِّلُ فَأَمَّا نَحْنُ فَنُكَبِّرُ قَالَ قُلْتُ وَاللَّهِ لَعَجَبًا مِنْكُمْ كَيْفَ لَمْ تَقُولُوا لَهُ مَاذَا رَأَيْتَ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَصْنَعُ

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), “நாங்கள் அரஃபா தினத்தன்று காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது எங்களில் சிலர் தக்பீர் சொல்லிக்கொண்டிருந்தனர். வேறுசிலர் தல்பியா சொல்லிக்கொண்டிருந்தனர். நாங்களோ தக்பீர் சொல்லிக்கொண்டிருந்தோம்” என்று கூறினார்கள்.

நான் எனக்கு இந்தச் செய்தியை அறிவித்த இப்னு உமர் (ரலி) அவர்களின் மகனாரான அப்துல்லாஹ் (ரஹ்) அவர்களிடம், “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களைக் கண்டு வியப்படைகின்றேன்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அப்போது என்ன செய்தார்கள் என்று நீங்கள் பார்க்கவில்லையா? என உங்கள் தந்தையிடம் எப்படி வினவாமலிருந்தீர்கள்?” என்று கேட்டேன்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) வழியாக அப்துல்லாஹ் பின் அபீ ஸலமா (ரஹ்)


குறிப்பு :

இந்த ஹதீஸை அப்துல்லாஹ் பின் அபீ ஸலமா (ரஹ்) அவர்களுக்கு அறிவித்தவர், நபித் தோழர் இப்னு உமர் (ரலி) அவர்களின் மகனான அப்துல்லாஹ் (ரஹ்) ஆவார். அரபியர்களிடம் அரிதாகத் தந்தைக்கும் மகனுக்கும் ஒரே பெயர் இருப்பதுண்டு.

“இப்னு உமர்+ஸஃபிய்யா பின்த் அபீஉபைதா மஸ்ஊத் அஸ்ஸகபிய்யா தம்பதியருக்கு நான்காவது மகனாகப் பிறந்தவர் அப்துல்லாஹ் (ரஹ்)“ என்று ‘தபக்காத்துல் குப்ரா’(1420/4)வில் இமாம் இப்னு ஸஅத் அத்தபரீ (ரஹ்) அவர்களும் “இப்னு உமர் (ரலி) அவர்களின் மூத்த மகன் அப்துல்லாஹ் (ரஹ்)“ என்று யஸீத் இப்னு ஹாரூன் (ரஹ்) கூறியதாக ‘இஸாபா‘(6616)வில் இமாம் அஸ்கலானீ (ரஹ்) அவர்களும் பதிவு செய்துள்ளனர்.

 

அத்தியாயம்: 15, பாடம்: 46, ஹதீஸ் எண்: 2252

‏حَدَّثَنَا ‏ ‏أَحْمَدُ بْنُ حَنْبَلٍ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ يَحْيَى الْأُمَوِيُّ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏قَالَا ‏ ‏جَمِيعًا ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ أَبِي سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ: ‏

غَدَوْنَا ‏ ‏مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنْ ‏ ‏مِنًى ‏ ‏إِلَى ‏ ‏عَرَفَاتٍ ‏ ‏مِنَّا الْمُلَبِّي وَمِنَّا الْمُكَبِّرُ

நாங்கள் (அரஃபா நாள்) காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மினாவிலிருந்து அரஃபாவிற்குச் சென்றோம். அப்போது எங்களில் சிலர் தல்பியா (லப்பைக்…) கூறிக்கொண்டிருந்தனர். வேறுசிலர் தக்பீர் (அல்லாஹு அக்பர்) கூறிக்கொண்டிருந்தனர்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)