அத்தியாயம்: 15, பாடம்: 49, ஹதீஸ் எண்: 2280

‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَكْرٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَطَاءٌ ‏ ‏أَنَّ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏قَالَ: ‏

بَعَثَ بِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِسَحَرٍ ‏ ‏مِنْ ‏ ‏جَمْعٍ ‏ ‏فِي ‏ ‏ثَقَلِ ‏ ‏نَبِيِّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قُلْتُ أَبَلَغَكَ أَنَّ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏قَالَ بَعَثَ بِي بِلَيْلٍ طَوِيلٍ قَالَ لَا إِلَّا كَذَلِكَ ‏ ‏بِسَحَرٍ ‏ ‏قُلْتُ لَهُ فَقَالَ ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏رَمَيْنَا الْجَمْرَةَ قَبْلَ الْفَجْرِ وَأَيْنَ صَلَّى الْفَجْرَ قَالَ لَا إِلَّا كَذَلِكَ

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (அதிகாலைக்கு முந்தைய) ஸஹர் நேரத்திலேயே தம் பயணச் சாமான்களுடன் என்னை (முஸ்தலிஃபாவிலிருந்து மினாவிற்கு) அனுப்பிவைத்தார்கள்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) சொன்னார்கள் என அதாஉ (ரஹ்) கூறினார்கள். நான் (இப்னு ஜுரைஜ்), அதாஉ (ரஹ்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (இரவு நன்கு இருக்கவே) நீண்ட இரவில் என்னை (மினாவிற்கு) அனுப்பிவைத்தார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள் எனும் செய்தி தங்களுக்கு எட்டியதா?” என்று கேட்டேன். அதற்கு அதாஉ (ரஹ்) “இல்லை; மேற்கண்டவாறு ஸஹர் நேரத்திலேயே என்னை அனுப்பிவைத்தார்கள் என்று மட்டுமே கூறினார்கள்” என்றார்கள். நான் அவரிடம், “இப்னு அப்பாஸ் (ரலி), நாங்கள் ஃபஜ்ருக்கு முன்பே ஜம்ராவில் கல்லெறிந்தோம் என்று கூறினார்களா?, ஃபஜ்ரை எங்கு தொழுவித்தார்கள்?” என்று கேட்டேன். அதற்கு அதாஉ (ரஹ்), “இல்லை; மேற்கண்டவாறு மட்டுமே கூறினார்கள்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்)

Share this Hadith: