அத்தியாயம்: 15, பாடம்: 55, ஹதீஸ் எண்: 2292

‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَمُحَمَّدُ بْنُ رُمْحٍ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏أَنَّ ‏ ‏عَبْدَ اللَّهِ ‏ ‏قَالَ: ‏

‏حَلَقَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَحَلَقَ طَائِفَةٌ مِنْ أَصْحَابِهِ وَقَصَّرَ بَعْضُهُمْ قَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏إِنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏رَحِمَ اللَّهُ الْمُحَلِّقِينَ مَرَّةً ‏ ‏أَوْ مَرَّتَيْنِ ‏ ‏ثُمَّ قَالَ وَالْمُقَصِّرِينَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஹஜ்ஜுச் சடங்குகளின் இறுதியாக) தமது தலைமுடியை மழித்தார்கள். அவர்களுடைய தோழர்களில் பலரும் மழித்துக்கொண்டனர். வேறுசிலர் (சிறிதளவு) முடியைக் குறைத்துக்கொண்டனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “மழித்துக்கொள்பவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!” என்று ஓரிரு முறை பிரார்த்தித்தார்கள். பிறகு, “குறைத்துக்கொண்டவர்களுக்கும் (அருள் புரிவானாக)” என்று பிரார்த்தித்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

Share this Hadith: