حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عِيسَى بْنِ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ:
وَقَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجَّةِ الْوَدَاعِ بِمِنًى لِلنَّاسِ يَسْأَلُونَهُ فَجَاءَ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ لَمْ أَشْعُرْ فَحَلَقْتُ قَبْلَ أَنْ أَنْحَرَ فَقَالَ اذْبَحْ وَلَا حَرَجَ ثُمَّ جَاءَهُ رَجُلٌ آخَرُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ لَمْ أَشْعُرْ فَنَحَرْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ فَقَالَ ارْمِ وَلَا حَرَجَ قَالَ فَمَا سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ شَيْءٍ قُدِّمَ وَلَا أُخِّرَ إِلَّا قَالَ افْعَلْ وَلَا حَرَجَ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) விடைபெறும் ஹஜ்ஜின்போது மக்களின் கேள்விகளுக்கு விடையளித்தவாறு மினாவில் நின்றுகொண்டிருந்தார்கள். அப்போது அவர்களிடம் ஒருவர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் தெரியாமல் பலியிடுவதற்கு முன்பே தலைமுடியையை மழித்துவிட்டேன்” என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “குற்றமில்லை. (இப்போது) பலியிடுவீராக!” என்றார்கள். பின்னர் மற்றொருவர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! தெரியாமல் நான் கல்லெறிவதற்கு முன்பே அறுத்துப் பலியிட்டுவிட்டேன்” என்றார். அதற்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “குற்றமில்லை. (இப்போது) கல்லெறிவீராக!” என்றார்கள். அன்றைய நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முந்திச் செய்யப்பட்டது என்றோ, அல்லது பிந்திச் செய்யப்பட்டது என்றோ கேட்கப்பட்ட (இத்தகைய) கேள்விகள் அனைத்திற்கும் “குற்றமில்லை. (இப்போது) செய்யுங்கள்” என்றே விடையளித்தார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ் (ரலி)