و حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ قُهْزَاذَ حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْحَسَنِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَبِي حَفْصَةَ عَنْ الزُّهْرِيِّ عَنْ عِيسَى بْنِ طَلْحَةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ:
سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَتَاهُ رَجُلٌ يَوْمَ النَّحْرِ وَهُوَ وَاقِفٌ عِنْدَ الْجَمْرَةِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي حَلَقْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ فَقَالَ ارْمِ وَلَا حَرَجَ وَأَتَاهُ آخَرُ فَقَالَ إِنِّي ذَبَحْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ قَالَ ارْمِ وَلَا حَرَجَ وَأَتَاهُ آخَرُ فَقَالَ إِنِّي أَفَضْتُ إِلَى الْبَيْتِ قَبْلَ أَنْ أَرْمِيَ قَالَ ارْمِ وَلَا حَرَجَ قَالَ فَمَا رَأَيْتُهُ سُئِلَ يَوْمَئِذٍ عَنْ شَيْءٍ إِلَّا قَالَ افْعَلُوا وَلَا حَرَجَ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘நஹ்ரு’டைய (துல்ஹஜ் பத்தாவது) நாளில் ‘ஜம்ரத்துல் அகபா’விற்கு அருகில் நின்றுகொண்டு இருந்தபோது அவர்களிடம் ஒருவர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் கல்லெறிவதற்கு முன் தலைமுடியை மழித்துவிட்டேன்” என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “குற்றமில்லை; (இப்போது) கல்லெறிவீராக!” என்றார்கள். மற்றொருவர் வந்து, “நான் கல்லெறிவதற்கு முன் அறுத்துப் பலியிட்டுவிட்டேன்” என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “குற்றமில்லை; (இப்போது) கல்லெறிவீராக!” என்றார்கள். இன்னொருவர் வந்து, “நான் கல்லெறிவதற்கு முன் கஅபாவுக்குத் திரும்பிச் சென்று (தவாஃபுல் இஃபாளா செய்து)விட்டேன்” என்றார். அதற்கு, “குற்றமில்லை; (இப்போது சென்று) கல்லெறிவீராக!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) விடையளித்தார்கள்.
அன்றைய நாளில் அவர்களிடம் கேட்கப்பட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் அவர்கள், “குற்றமில்லை. (இப்போது) செய்யுங்கள்” என்று விடையளித்ததை நான் கண்டேன்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ் (ரலி)