حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى أَخْبَرَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ عَنْ أَبِي التَّيَّاحِ الضُّبَعِيِّ حَدَّثَنِي مُوسَى بْنُ سَلَمَةَ الْهُذَلِيُّ قَالَ انْطَلَقْتُ أَنَا وَسِنَانُ بْنُ سَلَمَةَ مُعْتَمِرَيْنِ قَالَ وَانْطَلَقَ سِنَانٌ مَعَهُ بِبَدَنَةٍ يَسُوقُهَا فَأَزْحَفَتْ عَلَيْهِ بِالطَّرِيقِ فَعَيِيَ بِشَأْنِهَا إِنْ هِيَ أُبْدِعَتْ كَيْفَ يَأْتِي بِهَا فَقَالَ لَئِنْ قَدِمْتُ الْبَلَدَ لَأَسْتَحْفِيَنَّ عَنْ ذَلِكَ قَالَ فَأَضْحَيْتُ فَلَمَّا نَزَلْنَا الْبَطْحَاءَ قَالَ انْطَلِقْ إِلَى ابْنِ عَبَّاسٍ نَتَحَدَّثْ إِلَيْهِ قَالَ فَذَكَرَ لَهُ شَأْنَ بَدَنَتِهِ فَقَالَ عَلَى الْخَبِيرِ سَقَطْتَ:
بَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِسِتَّ عَشْرَةَ بَدَنَةً مَعَ رَجُلٍ وَأَمَّرَهُ فِيهَا قَالَ فَمَضَى ثُمَّ رَجَعَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ أَصْنَعُ بِمَا أُبْدِعَ عَلَيَّ مِنْهَا قَالَ انْحَرْهَا ثُمَّ اصْبُغْ نَعْلَيْهَا فِي دَمِهَا ثُمَّ اجْعَلْهُ عَلَى صَفْحَتِهَا وَلَا تَأْكُلْ مِنْهَا أَنْتَ وَلَا أَحَدٌ مِنْ أَهْلِ رُفْقَتِكَ
و حَدَّثَنَاه يَحْيَى بْنُ يَحْيَى وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَعَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ يَحْيَى أَخْبَرَنَا وَقَالَ الْآخَرَانِ حَدَّثَنَا إِسْمَعِيلُ ابْنُ عُلَيَّةَ عَنْ أَبِي التَّيَّاحِ عَنْ مُوسَى بْنِ سَلَمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ بِثَمَانَ عَشْرَةَ بَدَنَةً مَعَ رَجُلٍ ثُمَّ ذَكَرَ بِمِثْلِ حَدِيثِ عَبْدِ الْوَارِثِ وَلَمْ يَذْكُرْ أَوَّلَ الْحَدِيثِ
நானும் ஸினான் பின் ஸலமா (ரஹ்) அவர்களும் உம்ராவிற்குச் சென்றோம். ஸினான் தம்முடன் ஒரு பலி ஒட்டகத்தை நடத்திக்கொண்டு வந்தார். அந்த ஒட்டகம் வழியில் களைத்துப்போய் நின்றுவிட்டது. ‘இது நடக்க இயலாமல் நின்றுவிட்டால், இதை எப்படி நான் கொண்டுசெல்வேன்’ என்று தெரியாமல் அவர் தவித்தார். மேலும், அவர் “நான் ஊருக்குச் சென்றதும் இதுதொடர்பாக விரிவாகக் கேட்டறிவேன்” என்று சொல்லிக்கொண்டார். இதற்கிடையில் முற்பகல் நேரம் ஆகிவிட்டது. நாங்கள் ‘அல்பத்ஹா’ எனும் இடத்தில் இறங்கித் தங்கினோம். அப்போது ஸினான் (ரஹ்), “இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் செல்லுங்கள். அவர்களிடம் இதைப் பற்றி நாம் பேசுவோம்” என்று கூறினார்கள். அவ்வாறே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் (சென்று) தமது பலி ஒட்டகத்தின் நிலை பற்றிக் கூறினார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி), “விவரம் தெரிந்தவரிடம்தான் வந்துசேர்ந்திருக்கின்றீர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பதினாறு பலி ஒட்டகங்களுடன் ஒருவரை (மக்காவிற்கு) அனுப்பிவைத்தார்கள். அவற்றைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பையும் அவரிடமே ஒப்படைத்தார்கள். அவர் (சிறிது தூரம்) சென்று விட்டுத் திரும்பிவந்து, “அல்லாஹ்வின் தூதரே! பலி ஒட்டகங்களில் ஒன்று களைத்துப் போய் (பயணத்தைத் தொடர முடியாமல்) நின்றுவிட்டால், அதை நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அதை (அந்த இடத்திலேயே) அறுத்துவிடுக!; அதன் (கழுத்தில் தொங்கவிடப்பட்டுள்ள) செருப்புகளில் அதன் இரத்தத்தைத் தோய்த்து அதை அதன் விலாப் பகுதியில் பதித்துவிடுக!. நீயும் உன் பயணக் குழுவினரில் எவரும் அதை உண்ண வேண்டாம்” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக மூஸா பின் ஸலமா அல்ஹுதலீ (ரஹ்)
குறிப்பு :
இஸ்மாயீல் பின் உலையா (ரஹ்) வழி அறிவிப்பு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பதினெட்டு பலி ஒட்டகங்களுடன் ஒருவரை அனுப்பிவைத்தார்கள் …” என்று தொடங்குகிறது