و حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى وَسَعِيدُ بْنُ مَنْصُورٍ وَأَبُو الرَّبِيعِ وَخَلَفُ بْنُ هِشَامٍ وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ يَحْيَى أَخْبَرَنَا و قَالَ الْآخَرُونَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ مَنْصُورٍ عَنْ إِبْرَاهِيمَ عَنْ الْأَسْوَدِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ
كَأَنِّي أَنْظُرُ إِلَى وَبِيصِ الطِّيبِ فِي مَفْرِقِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ مُحْرِمٌ وَلَمْ يَقُلْ خَلَفٌ وَهُوَ مُحْرِمٌ وَلَكِنَّهُ قَالَ وَذَاكَ طِيبُ إِحْرَامِهِ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இஹ்ராம் பூண்டிருந்தபோது அவர்களது தலைமுடி வகிட்டில் நறுமணப் பொருள் ஒளிர்ந்ததை இப்போதும் என் மனக்கண்ணால் காண்கின்றேன்.
அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)
குறிப்பு : கலஃப் பின் ஹிஷாம் (ரஹ்) அறிவிப்பில், “அவர்கள் இஹ்ராம் பூண்டிருந்தபோது …” எனும் சொற்றொடர் இடம்பெறவில்லை. அதற்குப் பகரமாக “அது அவர்கள் இஹ்ராம் பூண்டபோது பூசிய நறுமணமாகும்” என்று இடம்பெற்றுள்ளது.