و حَدَّثَنِي أَحْمَدُ بْنُ مَنِيعٍ وَيَعْقُوبُ الدَّوْرَقِيُّ قَالَا حَدَّثَنَا هُشَيْمٌ أَخْبَرَنَا مَنْصُورٌ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ
كُنْتُ أُطَيِّبُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبْلَ أَنْ يُحْرِمَ وَيَوْمَ النَّحْرِ قَبْلَ أَنْ يَطُوفَ بِالْبَيْتِ بِطِيبٍ فِيهِ مِسْكٌ
நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் பூணுவதற்கு முன்பும், துல்ஹஜ் பத்தாம் நாளில் அவர்கள் கஅபாவைச் சுற்றுவதற்கு (தவாஃபுல் இஃபாளா செய்வதற்கு) முன்பும் கஸ்தூரி கலந்த நறுமணப் பொருளை அவர்களுக்கு நான் பூசிவந்தேன்.
அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)