அத்தியாயம்: 15, பாடம்: 77, ஹதீஸ் எண்: 2400

‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَكَّارِ بْنِ الرَّيَّانِ ‏ ‏وَسُرَيْجُ بْنُ يُونُسَ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِسُرَيْجٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ جَعْفَرٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏مُوسَى بْنُ عُقْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ: ‏

أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أُتِيَ وَهُوَ فِي مُعَرَّسِهِ مِنْ ‏ ‏ذِي الْحُلَيْفَةِ ‏ ‏فِي بَطْنِ الْوَادِي فَقِيلَ إِنَّكَ ‏ ‏بِبَطْحَاءَ ‏ ‏مُبَارَكَةٍ ‏

قَالَ ‏ ‏مُوسَى ‏ ‏وَقَدْ ‏ ‏أَنَاخَ ‏ ‏بِنَا ‏ ‏سَالِمٌ ‏ ‏بِالْمُنَاخِ مِنْ الْمَسْجِدِ الَّذِي كَانَ ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏يُنِيخُ بِهِ يَتَحَرَّى مُعَرَّسَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهُوَ أَسْفَلُ مِنْ الْمَسْجِدِ الَّذِي بِبَطْنِ الْوَادِي بَيْنَهُ وَبَيْنَ الْقِبْلَةِ وَسَطًا مِنْ ذَلِكَ

நபி (ஸல்) துல்ஹுலைஃபாவில் பள்ளத்தாக்கின் நடுவில் இரவின் இறுதி நேரத்தில் ஓய்வெடுக்கும் இடத்தில் (உறங்கிக்கொண்டு) இருந்தபோது, “வளமிக்க பள்ளத்தாக்கில் நீங்கள் இருக்கிறீர்கள்” என (கனவில்) கூறப்பட்டது.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)


குறிப்பு :

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஓய்வெடுக்கும் இடத்தைத் தேடியவராக அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) தமது ஒட்டகத்தை மண்டியிடவைத்து, ஓய்வெடுக்கும் பள்ளிவாசலுக்கருகில் உள்ள இடத்தில், ஸாலிம் (ரஹ்) அவர்களும் எங்கள் ஒட்டகங்களை மண்டியிடவைத்தார்கள். அந்த இடம் பள்ளத்தாக்கின் நடுவில் உள்ள பள்ளிவாசலுக்குக் கீழே இருந்தது. பள்ளிவாசலுக்கும் கிப்லாவுக்குமிடையே நடுவில் நபி (ஸல்) ஓய்வெடுத்த அந்த இடம் இருந்தது” என்று இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான மூஸா பின் உக்பா (ரஹ்) கூறுகிறார்.

Share this Hadith: