அத்தியாயம்: 15, பாடம்: 93, ஹதீஸ் எண்: 2466

‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ الْقَعْنَبِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُلَيْمَانُ بْنُ بِلَالٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ يَحْيَى ‏ ‏عَنْ ‏ ‏عَبَّاسِ بْنِ سَهْلٍ السَّاعِدِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي حُمَيْدٍ ‏ ‏قَالَ: ‏

خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي ‏ ‏غَزْوَةِ ‏ ‏تَبُوكَ ‏ ‏وَسَاقَ الْحَدِيثَ وَفِيهِ ثُمَّ أَقْبَلْنَا حَتَّى قَدِمْنَا ‏ ‏وَادِي الْقُرَى ‏ ‏فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنِّي مُسْرِعٌ فَمَنْ شَاءَ مِنْكُمْ فَلْيُسْرِعْ مَعِي وَمَنْ شَاءَ فَلْيَمْكُثْ فَخَرَجْنَا حَتَّى أَشْرَفْنَا عَلَى ‏ ‏الْمَدِينَةِ ‏ ‏فَقَالَ هَذِهِ ‏ ‏طَابَةُ ‏ ‏وَهَذَا ‏ ‏أُحُدٌ ‏ ‏وَهُوَ جَبَلٌ يُحِبُّنَا وَنُحِبُّهُ

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ‘தபூக்’ போருக்குப் புறப்பட்டோம். நாங்கள் (போரை முடித்துக்கொண்டு சிரியாவிற்கும் மதீனாவிற்கும் இடையே உள்ள) ‘வாதில் குரா’ எனும் இடத்திற்கு வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நான் மதீனாவுக்கு விரைந்து செல்லப் போகிறேன். எனவே, உங்களில் விரும்பியவர் என்னுடன் விரைந்து வரலாம். விரும்பியவர் (இங்குத்) தங்கி வரலாம்” என்று சொன்னார்கள். நாங்கள் புறப்பட்டு மதீனாவை நெருங்கியபோது, “இது தாபா (தூய நகரம்) ஆகும்; இது உஹுத் மலை; இது நம்மை நேசிக்கிறது. நாமும் அதை நேசிக்கின்றோம்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுமைத் அப்துர் ரஹ்மான் பின் ஸஅத் (ரலி)

Share this Hadith: