அத்தியாயம்: 15, பாடம்: 96, ஹதீஸ் எண்: 2477

‏حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏حُمَيْدٍ الْخَرَّاطِ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَبَا سَلَمَةَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏قَالَ ‏ ‏مَرَّ بِي ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏قَالَ: ‏

قُلْتُ لَهُ كَيْفَ سَمِعْتَ أَبَاكَ يَذْكُرُ فِي الْمَسْجِدِ الَّذِي أُسِّسَ عَلَى التَّقْوَى قَالَ قَالَ ‏ ‏أَبِي ‏ ‏دَخَلْتُ عَلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي بَيْتِ بَعْضِ نِسَائِهِ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَيُّ الْمَسْجِدَيْنِ الَّذِي أُسِّسَ عَلَى التَّقْوَى قَالَ فَأَخَذَ كَفًّا مِنْ ‏ ‏حَصْبَاءَ ‏ ‏فَضَرَبَ بِهِ الْأَرْضَ ثُمَّ قَالَ ‏ ‏هُوَ مَسْجِدُكُمْ هَذَا ‏ ‏لِمَسْجِدِ الْمَدِينَةِ ‏
‏قَالَ ‏ ‏فَقُلْتُ ‏ ‏أَشْهَدُ أَنِّي سَمِعْتُ أَبَاكَ هَكَذَا يَذْكُرُهُ


و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَسَعِيدُ بْنُ عَمْرٍو الْأَشْعَثِيُّ ‏ ‏قَالَ ‏ ‏سَعِيدٌ ‏ ‏أَخْبَرَنَا وَقَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَاتِمُ بْنُ إِسْمَعِيلَ ‏ ‏عَنْ ‏ ‏حُمَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِهِ وَلَمْ يَذْكُرْ ‏ ‏عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي سَعِيدٍ ‏ ‏فِي الْإِسْنَادِ

அப்துர் ரஹ்மான் பின் அபீஸயீத் அல்குத்ரீ (ரஹ்) என்னை (ஒரு முறை) கடந்து சென்றார்கள். அவர்களிடம் நான், “இறையச்சத்தின் மீது நிறுவப்பட்ட பள்ளிவாசல் (எனும் 9:108ஆவது வசனம்) குறித்து தங்கள் தந்தையிடமிருந்து நீங்கள் எவ்வாறு செவியுற்றீர்கள்?” என்று வினவினேன்.

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தம் துணைவியருள் ஒருவரது இல்லத்தில் இருந்தபோது அவர்களிடம் சென்று, அல்லாஹ்வின் தூதரே! (மஸ்ஜிதுந் நபவீ மற்றும் மஸ்ஜிதுல் குபா) இவ்விரு பள்ளிவாசல்களுள் இறையச்சத்தின் மீது நிறுவப்பட்ட பள்ளிவாசல் (என்று அல்லாஹ் குறிப்பிட்டுள்ளது) எது? என்று நான் கேட்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒரு கைப்பிடி சிறு கற்களை அள்ளி, அதைப் பூமியில் எறிந்தார்கள். பிறகு இதோ உங்களது இந்தப் பள்ளிவாசல்தான் என்று (மஸ்ஜிதுந் நபவீயைக் குறிப்பிட்டுச்) சொன்னார்கள்” என்று என் தந்தை (அபூஸயீத் அல்குத்ரீ – ரலி) கூறினார்கள் என அப்துர் ரஹ்மான் பின் ஸயீத் (ரஹ்) விடையளித்தார்கள், நான், “தங்கள் தந்தையிடமிருந்து நானும் இவ்வாறே செவியுற்றேன் என நான் உறுதிமொழிகின்றேன்” என்று கூறினேன்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல் குத்ரீ (ரலி) வழியாக அபூஸலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃபு (ரஹ்)


குறிப்பு :

ஹுமைத் (ரஹ்), அபூபக்ரு பின் அபீஷைபா (ரஹ்) ஆகியோர் வழி அறிவிப்பில் அப்துர் ரஹ்மான் பின் அபீஸயீத் (ரஹ்) பற்றிய குறிப்பு இடம்பெறவில்லை.

Share this Hadith: