و حَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ نَافِعٍ الْعَبْدِيُّ حَدَّثَنَا بَهْزٌ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ:
أَنَّ نَفَرًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَأَلُوا أَزْوَاجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ عَمَلِهِ فِي السِّرِّ فَقَالَ بَعْضُهُمْ لَا أَتَزَوَّجُ النِّسَاءَ وَقَالَ بَعْضُهُمْ لَا آكُلُ اللَّحْمَ وَقَالَ بَعْضُهُمْ لَا أَنَامُ عَلَى فِرَاشٍ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ فَقَالَ مَا بَالُ أَقْوَامٍ قَالُوا كَذَا وَكَذَا لَكِنِّي أُصَلِّي وَأَنَامُ وَأَصُومُ وَأُفْطِرُ وَأَتَزَوَّجُ النِّسَاءَ فَمَنْ رَغِبَ عَنْ سُنَّتِي فَلَيْسَ مِنِّي
நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் சிலர் நபியவர்களின் துணைவியரிடம் (சென்று), நபியவர்கள் தனிமையில் செய்யும் வழிபாடுகள் குறித்து வினவினர். அவர்களில் ஒருவர், “நான் பெண்களை மணமுடிக்கமாட்டேன்” என்று சொன்னார். மற்றொருவர் “நான் புலால் உண்ண மாட்டேன்” என்றார். இன்னொருவர், “நான் படுக்கையில் உறங்கமாட்டேன்” என்றார். (இதை அறிந்த) நபி (ஸல்), அல்லாஹ்வை வாழ்த்திப் போற்றிவிட்டு, “சிலருக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் இப்படியெல்லாம் கூறுகின்றனர். ஆனால், நான் (இரவில்) தொழுகின்றேன்; உறங்கவும் செய்கின்றேன். நோன்பு நோற்கின்றேன்; நோன்பை நோற்காமல் விடுகின்றேன். பெண்களை மணந்து கொண்டுமிருக்கின்றேன். என் வழிமுறையை எவர் புறக்கணிக்கின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்” என்றார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)