حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى وَاللَّفْظُ لِحَرْمَلَةَ قَالَ أَبُو الطَّاهِرِ حَدَّثَنَا وَقَالَ حَرْمَلَةُ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي يُونُسُ عَنْ ابْنِ شِهَابٍ حَدَّثَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ أَنَّ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبَرَتْهُ:
أَنَّ رِفَاعَةَ الْقُرَظِيَّ طَلَّقَ امْرَأَتَهُ فَبَتَّ طَلَاقَهَا فَتَزَوَّجَتْ بَعْدَهُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ الزَّبِيرِ فَجَاءَتْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّهَا كَانَتْ تَحْتَ رِفَاعَةَ فَطَلَّقَهَا آخِرَ ثَلَاثِ تَطْلِيقَاتٍ فَتَزَوَّجْتُ بَعْدَهُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ الزَّبِيرِ وَإِنَّهُ وَاللَّهِ مَا مَعَهُ إِلَّا مِثْلُ الْهُدْبَةِ وَأَخَذَتْ بِهُدْبَةٍ مِنْ جِلْبَابِهَا قَالَ فَتَبَسَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَاحِكًا فَقَالَ لَعَلَّكِ تُرِيدِينَ أَنْ تَرْجِعِي إِلَى رِفَاعَةَ لَا حَتَّى يَذُوقَ عُسَيْلَتَكِ وَتَذُوقِي عُسَيْلَتَهُ وَأَبُو بَكْرٍ الصِّدِّيقُ جَالِسٌ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَخَالِدُ بْنُ سَعِيدِ بْنِ الْعَاصِ جَالِسٌ بِبَابِ الْحُجْرَةِ لَمْ يُؤْذَنْ لَهُ قَالَ فَطَفِقَ خَالِدٌ يُنَادِي أَبَا بَكْرٍ أَلَا تَزْجُرُ هَذِهِ عَمَّا تَجْهَرُ بِهِ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ الزُّهْرِيِّ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ أَنَّ رِفَاعَةَ الْقُرَظِيَّ طَلَّقَ امْرَأَتَهُ فَتَزَوَّجَهَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الزَّبِيرِ فَجَاءَتْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ رِفَاعَةَ طَلَّقَهَا آخِرَ ثَلَاثِ تَطْلِيقَاتٍ بِمِثْلِ حَدِيثِ يُونُسَ
ரிஃபாஆ அல்குறழீ (ரலி) தம் மனைவியை முழுமையாக மண விலக்குச் செய்துவிட்டார்கள். அவருக்குப் பிறகு அப்துர் ரஹ்மான் பின் அஸ்ஸபீர் (ரலி) அவர்களை அவர் மணமுடித்திருந்தார். அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் ரிஃபாஆ (ரலி) அவர்களிடம் (மனைவியாக) இருந்தேன். என்னை அவர் மூன்று தலாக்குகளில் இறுதித் தலாக்கும் சொல்லிவிட்டார். அவருக்குப் பிறகு நான் அப்துர் ரஹ்மான் பின் அஸ்ஸபீர் என்பாரை மணந்துகொண்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! அவருக்கு (இன உறுப்பு என்று) இருப்பதெல்லாம் இதோ இந்த மேலங்கியின் குஞ்சத்தைப் போன்றதுதான்” என்று கூறித் தமது மேலங்கியின் குஞ்சத்தைப் பிடித்துக் காட்டினார். இதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) புன்னகைத்தார்கள். பிறகு, “நீ (முதல் கணவர்) ரிஃபாஆவிடமே திரும்பச் செல்ல விரும்புகிறாய் போலும். (இரண்டாவது கணவர்) உன்னிடம் (இல்லற) இன்பத்தைச் சுவைக்காத வரையிலும், நீ அவரிடம் (இல்லற) இன்பத்தைச் சுவைக்காத வரையிலும் அது முடியாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அப்போது (என் தந்தை) அபூபக்ரு அஸ்ஸித்தீக் (ரலி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் அமர்ந்திருந்தார்கள். காலித் பின் ஸயீத் பின் அல்ஆஸ் (ரலி) தமக்கு உள்ளே வர அனுமதி கிடைக்காததால் அறையின் வாசலில் உட்கார்ந்திருந்தார். அபூபக்ரு (ரலி) அவர்களை காலித் (ரலி) விளித்து, “அபூபக்ரே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முன்னிலையில் (நாணமில்லாமல்) பகிரங்கமாக இப்படிப் பேசக் கூடாதென நீங்கள் இப்பெண்ணைக் கண்டிக்கக் கூடாதா?” என்று கேட்டார்கள்.
அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)
குறிப்பு :
மஅமர் (ரஹ்) வழி அறிவிப்பு, “ரிஃபாஆ அல்குறழீ (ரலி) தம் மனைவியை மணவிலக்குச் செய்து விட்டார்கள். பின்னர் அவரை அப்துர் ரஹ்மான் பின் அஸ்ஸபீர் மணந்துகொண்டார். இந்நிலையில் அப்பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! ரிஃபாஆ என்னை மூன்று தலாக்குகளில் இறுதித் தலாக்கும் சொல்லிவிட்டார் …” என்று கூறியதாக ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.