அத்தியாயம்: 16, பாடம்: 22, ஹதீஸ் எண்: 2603

‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَاذُ بْنُ مُعَاذٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ عَوْنٍ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ بِشْرٍ الْأَنْصَارِيِّ ‏ ‏قَالَ ‏ ‏فَرَدَّ الْحَدِيثَ حَتَّى ‏ ‏رَدَّهُ إِلَى ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏قَالَ: ‏

‏ذُكِرَ ‏ ‏الْعَزْلُ ‏ ‏عِنْدَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏وَمَا ‏ ‏ذَاكُمْ قَالُوا الرَّجُلُ تَكُونُ لَهُ الْمَرْأَةُ تُرْضِعُ ‏ ‏فَيُصِيبُ مِنْهَا ‏ ‏وَيَكْرَهُ أَنْ تَحْمِلَ مِنْهُ وَالرَّجُلُ تَكُونُ لَهُ الْأَمَةُ ‏ ‏فَيُصِيبُ مِنْهَا ‏ ‏وَيَكْرَهُ أَنْ تَحْمِلَ مِنْهُ قَالَ فَلَا عَلَيْكُمْ أَنْ لَا تَفْعَلُوا ‏ ‏ذَاكُمْ فَإِنَّمَا هُوَ الْقَدَرُ ‏


قَالَ ‏ ‏ابْنُ عَوْنٍ ‏ ‏فَحَدَّثْتُ بِهِ ‏ ‏الْحَسَنَ ‏ ‏فَقَالَ وَاللَّهِ لَكَأَنَّ هَذَا زَجْرٌ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏حَجَّاجُ بْنُ الشَّاعِرِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُلَيْمَانُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَوْنٍ ‏ ‏قَالَ ‏ ‏حَدَّثْتُ ‏ ‏مُحَمَّدًا ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏بِحَدِيثِ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ بِشْرٍ ‏ ‏يَعْنِي حَدِيثَ ‏ ‏الْعَزْلِ ‏ ‏فَقَالَ ‏ ‏إِيَّايَ حَدَّثَهُ ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ بِشْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْأَعْلَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامٌ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏مَعْبَدِ بْنِ سِيرِينَ ‏ ‏قَالَ ‏ ‏قُلْنَا ‏ ‏لِأَبِي سَعِيدٍ ‏ ‏هَلْ سَمِعْتَ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَذْكُرُ فِي ‏ ‏الْعَزْلِ ‏ ‏شَيْئًا قَالَ نَعَمْ وَسَاقَ الْحَدِيثَ ‏ ‏بِمَعْنَى حَدِيثِ ‏ ‏ابْنِ عَوْنٍ ‏ ‏إِلَى قَوْلِهِ الْقَدَرُ

நபி (ஸல்) செவிபட ‘அஸ்லு’ பற்றிப் பேசப்பட்டது. அப்போது அவர்கள் (குறுக்கிட்டு), “அது என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “பாலூட்டும் தம் மனைவியுடன் உடலுறவு கொள்ள விரும்பும் ஒருவர், அதனால் அவள் (மீண்டும்) கருவுற்றுவிடுவதை விரும்பாமல் இருக்கலாம். (அவ்வாறே) தம் அடிமைப் பெண்ணோடு உறவு கொள்ள விரும்பும் ஒருவர், அதனால் அவள் கருவுறுவதை விரும்பாமல் இருக்கலாம். (அப்போது ‘அஸ்லு’ச் செய்துகொள்வார்)” என்று விடையளித்தனர். நபி (ஸல்) அவர்கள், “அவ்வாறு செய்யாவிட்டால் உங்கள்மீது பழியேதுமில்லை. அதுவெல்லாம் விதியாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)


குறிப்பு :

இந்த ஹதீஸை நான் ஹஸன் பின் அபில் ஹஸன் யஸார் (ரஹ்) அவர்களிடம் அறிவித்தபோது அவர்கள், “ஆனால் … அல்லாஹ்வின் மீதாணையாக! இது (அஸ்லுச் செய்வதைக்) கண்டிப்பது போல உள்ளது” என்று கூறினார்கள் என்று இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான அப்துல்லாஹ் பின் அவ்னு (ரஹ்) கூறுகிறார்.

மஅபத் பின் ஸீரீன் (ரஹ்) அறிவிப்பில், “நாங்கள் அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் அஸ்லு பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறிய ஹதீஸ் எதையேனும் நீங்கள் செவியுற்றுள்ளீர்களா?’ என்று கேட்டோம். அதற்கு அவர்கள் மேற்காணும் (2603) ஹதீஸில் உள்ளதைப் போன்று “ … அதுவெல்லாம் விதியாகும்” என்பதுவரை அறிவித்தார்கள்” என இடம்பெற்றுள்ளது.

Share this Hadith: