அத்தியாயம்: 16, பாடம்: 24, ஹதீஸ் எண்: 2612

‏و حَدَّثَنَا ‏ ‏خَلَفُ بْنُ هِشَامٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَالِكُ بْنُ أَنَسٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ نَوْفَلٍ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏عَنْ ‏ ‏جُدَامَةَ بِنْتِ وَهْبٍ الْأَسَدِيَّةِ: ‏

‏أَنَّهَا سَمِعَتْ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏لَقَدْ هَمَمْتُ أَنْ أَنْهَى عَنْ ‏ ‏الْغِيلَةِ ‏ ‏حَتَّى ذَكَرْتُ أَنَّ ‏ ‏الرُّومَ ‏ ‏وَفَارِسَ ‏ ‏يَصْنَعُونَ ذَلِكَ فَلَا يَضُرُّ أَوْلَادَهُمْ ‏


قَالَ ‏ ‏مُسْلِم ‏ ‏وَأَمَّا ‏ ‏خَلَفٌ ‏ ‏فَقَالَ عَنْ ‏ ‏جُذَامَةَ الْأَسَدِيَّةِ ‏ ‏وَالصَّحِيحُ مَا قَالَهُ ‏ ‏يَحْيَى ‏ ‏بِالدَّالِ

“பாலூட்டிக்கொண்டிருக்கும் காலத்தில் மனைவியுடன் உடலுறவு கொள்ள வேண்டாமெனத் தடை விதிக்கலாமா என எண்ணினேன். ரோமர்களும் பாரசீகர்களும் அவ்வாறு செய்தும், அவர்களுடைய குழந்தைகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமலிருப்பதை நினைத்துப் பார்த்தேன். (எனவே, தடை விதிக்கும் எண்ணத்தைக் கைவிட்டேன்)” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜுதாமா பின்த்து வஹ்பு அல் அஸதிய்யா (ரலி)


குறிப்பு :

“இந்த ஹதீஸின் மூல அறிவிப்பாளரான நபித் தோழி ‏جُدَامَةَ (ரலி) அவர்களின் பெயரை இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான கலஃப் (ரஹ்),جُذَامَةَ  என்று பிழையாகக் குறிப்பிடுகின்றார். இதன் வேறோர் அறிவிப்பாளரான யஹ்யா (ரஹ்) அவர்களின் கூற்றுப்படி அவரது பெயர் جُدَامَةَ என்பதே சரியானதாகும்“ என்று இமாம் முஸ்லிம் (ரஹ்) கூறுகின்றார்கள்.

Share this Hadith: