அத்தியாயம்: 16, பாடம்: 24, ஹதீஸ் எண்: 2614

‏حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِابْنِ نُمَيْرٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ الْمَقْبُرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَيْوَةُ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عَيَّاشُ بْنُ عَبَّاسٍ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا النَّضْرِ ‏ ‏حَدَّثَهُ عَنْ ‏ ‏عَامِرِ بْنِ سَعْدٍ ‏ ‏أَنَّ ‏ ‏أُسَامَةَ بْنَ زَيْدٍ: ‏

‏أَخْبَرَ وَالِدَهُ ‏ ‏سَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ ‏ ‏أَنَّ رَجُلًا جَاءَ إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ إِنِّي ‏ ‏أَعْزِلُ ‏ ‏عَنْ امْرَأَتِي فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِمَ تَفْعَلُ ذَلِكَ فَقَالَ الرَّجُلُ أُشْفِقُ عَلَى وَلَدِهَا أَوْ عَلَى أَوْلَادِهَا فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَوْ كَانَ ذَلِكَ ضَارًّا ضَرَّ ‏ ‏فَارِسَ ‏ ‏وَالرُّومَ ‏


و قَالَ ‏ ‏زُهَيْرٌ ‏ ‏فِي رِوَايَتِهِ إِنْ كَانَ لِذَلِكَ فَلَا مَا ضَارَ ذَلِكَ ‏ ‏فَارِسَ ‏ ‏وَلَا ‏ ‏الرُّومَ

ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “நான் என் மனைவியுடன் (உறவு கொள்ளும்போது) அஸ்லுச் செய்கின்றேன்” என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “ஏன் செய்கின்றாய்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “அவளுடைய (மற்ற) குழந்தை / குழந்தைகள் மீது பரிவுகாட்டு(வதற்காகவே அவ்வாறு செய்)கின்றேன் என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அது (மற்ற) குழந்தை/களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாயிருந்தால், பாரசீகர்க(ளின் குழந்தை)களுக்கும் ரோமர்க(ளின் குழந்தை)களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்குமே!” என்றார்கள்.

அறிவிப்பாளர் : உஸாமா பின் ஸைத் (ரலி) வழியாக ஸஅத் பின் அபீ வக்காஸ் (ரலி)


குறிப்பு :

ஸுஹைர் பின் ஹர்பு (ரஹ்) வழி அறிவிப்பில், “இக்காரணத்திற்காகவே நீ அவ்வாறு செய்கிறாய் எனில், (இனி) வேண்டாம். (ஏனெனில்) அது பாரசீகர்களுக்கும் ரோமர்களுக்கும் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்த வில்லை!” என்று கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.

இத்துடன் அத்தியாயம் 16 நிறைவடைந்தது, அல்ஹம்து லில்லாஹ்!

Share this Hadith: