حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ الْهَمْدَانِيُّ حَدَّثَنَا أَبِي وَوَكِيعٌ وَابْنُ بِشْرٍ عَنْ إِسْمَعِيلَ عَنْ قَيْسٍ قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ يَقُولُ:
كُنَّا نَغْزُو مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْسَ لَنَا نِسَاءٌ فَقُلْنَا أَلَا نَسْتَخْصِي فَنَهَانَا عَنْ ذَلِكَ ثُمَّ رَخَّصَ لَنَا أَنْ نَنْكِحَ الْمَرْأَةَ بِالثَّوْبِ إِلَى أَجَلٍ ثُمَّ قَرَأَ عَبْدُ اللَّهِ ”يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُحَرِّمُوا طَيِّبَاتِ مَا أَحَلَّ اللَّهُ لَكُمْ وَلَا تَعْتَدُوا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ“
و حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا جَرِيرٌ عَنْ إِسْمَعِيلَ بْنِ أَبِي خَالِدٍ بِهَذَا الْإِسْنَادِ مِثْلَهُ وَقَالَ ثُمَّ قَرَأَ عَلَيْنَا هَذِهِ الْآيَةَ وَلَمْ يَقُلْ قَرَأَ عَبْدُ اللَّهِ و حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ إِسْمَعِيلَ بِهَذَا الْإِسْنَادِ قَالَ كُنَّا وَنَحْنُ شَبَابٌ فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ أَلَا نَسْتَخْصِي وَلَمْ يَقُلْ نَغْزُو
அப்துல்லாஹ் பின் மஸ்உத் (ரலி), “எங்களுடன் துணைவியர் எவரும் இல்லாத நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் ஓர் அறப்போரில் கலந்துகொண்டிருந்தோம். நாங்கள் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்) ‘நாங்கள் காயடித்து (ஆண்மை நீக்கம் செய்து) கொள்ளலாமா?‘ என்று கேட்டோம். அதற்கு அவர்கள் அப்படிச் செய்ய வேண்டாமென்று எங்களைத் தடுத்தார்கள். அதன் பிறகு ஆடையை(மணக்கொடையாக)க் கொடுத்துப் பெண்களை ஒரு குறிப்பிட்ட காலம்வரை மணமுடித்துக்கொள்ள எங்களுக்கு அனுமதியளித்தார்கள்” என்று கூறிவிட்டு, “நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த தூயவற்றைத் தடை செய்யப்பட்டவையாக ஆக்கிவிடாதீர்கள்! வரம்பு மீறாதீர்கள்! அல்லாஹ் வரம்பு மீறுவோரை நேசிக்க மாட்டான்” (5:87) எனும் வசனத்தை அப்துல்லாஹ் பின் மஸ்உத் (ரலி) ஓதிக் காட்டினார்கள்.
அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத் (ரலி) வழியாக கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்)
குறிப்புகள் :
இஸ்மாயீல் பின் அபீகாலித் (ரஹ்) வழி அறிவிப்பில், “ …(5:87 ஆவது) வசனத்தை ஓதிக்காட்டினார்கள்” என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் பெயர் குறிப்பிடாமல் இடம்பெற்றுள்ளது.
அபூபக்ரு பின் அபீஷைபா (ரஹ்) வழி அறிவிப்பில் “ … நாங்கள் இளைஞர்களாயிருந்தோம். ‘அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் காயடித்து (ஆண்மை நீக்கம் செய்து) கொள்ளலாமா?’ என்று கேட்டோம் …” என இடம்பெற்றுள்ளது. ஆனால், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஓர் அறப்போரில் கலந்து கொண்டிருந்தோம்” எனும் (ஆரம்பக்) குறிப்பு இடம்பெறவில்லை.