அத்தியாயம்: 16, பாடம்: 9, ஹதீஸ் எண்: 2544

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّزَّاقِ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِابْنِ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏ابْنَ أَبِي مُلَيْكَةَ ‏ ‏يَقُولُ قَالَ ‏ ‏ذَكْوَانُ ‏ ‏مَوْلَى ‏ ‏عَائِشَةَ ‏ ‏سَمِعْتُ ‏ ‏عَائِشَةَ ‏ ‏تَقُولُ: ‏

سَأَلْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ ‏ ‏الْجَارِيَةِ ‏ ‏يُنْكِحُهَا أَهْلُهَا ‏ ‏أَتُسْتَأْمَرُ ‏ ‏أَمْ لَا فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَعَمْ ‏ ‏تُسْتَأْمَرُ ‏ ‏فَقَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏فَقُلْتُ لَهُ فَإِنَّهَا ‏ ‏تَسْتَحْيِي فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَذَلِكَ إِذْنُهَا إِذَا هِيَ سَكَتَتْ

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “ஒரு கன்னிப் பெண்ணை அவளுடைய வீட்டார் மணமுடித்துக்கொடுக்கும் போது அவளிடம் அனுமதி பெற வேண்டுமா, இல்லையா?” என்று கேட்டேன். அதற்கு, “ஆம்; அவளிடம் அனுமதி பெற வேண்டும்” என்றார்கள். நான், “அவள் வெட்கப்படுவாளே?” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவள் மௌனமாக இருந்தால், அதுவே அவளது சம்மதம்தான்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

Share this Hadith: