அத்தியாயம்: 17, பாடம்: 15, ஹதீஸ் எண்: 2662

‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْمَلِكِ بْنُ أَبِي سُلَيْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ: ‏

‏تَزَوَّجْتُ امْرَأَةً فِي عَهْدِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَلَقِيتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ يَا ‏ ‏جَابِرُ ‏ ‏تَزَوَّجْتَ قُلْتُ نَعَمْ قَالَ بِكْرٌ أَمْ ‏ ‏ثَيِّبٌ ‏ ‏قُلْتُ ‏ ‏ثَيِّبٌ ‏ ‏قَالَ فَهَلَّا بِكْرًا تُلَاعِبُهَا قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ لِي أَخَوَاتٍ فَخَشِيتُ أَنْ تَدْخُلَ بَيْنِي وَبَيْنَهُنَّ قَالَ فَذَاكَ إِذَنْ ‏ ‏إِنَّ الْمَرْأَةَ تُنْكَحُ عَلَى دِينِهَا وَمَالِهَا وَجَمَالِهَا فَعَلَيْكَ بِذَاتِ الدِّينِ ‏ ‏تَرِبَتْ يَدَاكَ

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு பெண்ணை மணந்தேன். நபி (ஸல்) அவர்களை நான் சந்தித்தபோது என்னிடம், “ஜாபிரே! நீ மணமுடித்துவிட்டாயா?” என்று கேட்டார்கள். நான் “ஆம், (மணமுடித்துவிட்டேன்)” என்று கூறினேன். நபி (ஸல்), “(அவள்) கன்னிப் பெண்ணா?  கன்னி கழிந்த பெண்ணா?” என்று கேட்டார்கள். நான் “(அவள்) கன்னி கழிந்த பெண்” என்று கூறினேன். (அப்போது) நபி (ஸல்), “கன்னியாக இருந்தால் அவளுடன் நீ கொஞ்சிக் குலவி மகிழ்ந்திருக்கலாமே!” என்று கேட்டார்கள். அதற்கு நான், “அல்லாஹ்வின் தூதரே! எனக்குச் சகோதரிகள் சிலர் உள்ளனர். எனவே, (வயதில் சிறியவளான அனுபவமில்லாத கன்னிப் பெண்ணை மணந்தால்) அவள் எனக்கும் என் சகோதரிகளுக்கும் இடையில் நுழைந்து விரிசலை ஏற்படுத்தி விடுவாளோ என்று நான் அஞ்சினேன்” என்று கூறினேன். அப்போது நபி (ஸல்), “அப்படியென்றால், அ(வ்வாறு நீ செய்த)து சரிதான்!” என்று கூறிவிட்டு,

ஒரு பெண் (உலக வழக்கில்)

1.அவளது மார்க்க(நல்லொழுக்க)த்திற்காக. 2. அவளது செல்வத்திற்காக. 3. அவளது அழகிற்காக மணமுடிக்கப்படுகிறாள். மார்க்க(நல்லொழுக்க)ம் உடைய பெண்ணை மணந்துகொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

Share this Hadith: