و حَدَّثَنِي الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ قَالَا أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ عَنْ عَطَاءٍ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ أَنَّ عَائِشَةَ أَخْبَرَتْهُ قَالَتْ:
اسْتَأْذَنَ عَلَيَّ عَمِّي مِنْ الرَّضَاعَةِ أَبُو الْجَعْدِ فَرَدَدْتُهُ قَالَ لِي هِشَامٌ إِنَّمَا هُوَ أَبُو الْقُعَيْسِ فَلَمَّا جَاءَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبَرْتُهُ بِذَلِكَ قَالَ فَهَلَّا أَذِنْتِ لَهُ تَرِبَتْ يَمِينُكِ أَوْ يَدُكِ
ஆயிஷா (ரலி) என்னிடம், “என் பால்குடித் தந்தையின் சகோதரர் அபுல் ஜஅத் (ரலி) வந்து என் வீட்டிற்குள் நுழைய அனுமதி கேட்டார். நான் அதை மறுத்துவிட்டேன். பின்னர் நபி (ஸல்) வந்ததும் நடந்ததைத் தெரிவித்தேன்” என்று கூறினார்கள்.
அதற்கு நபி (ஸல், “உனது கை / வலக் கை, மண்ணைக் கவ்வட்டும்! நீ அவருக்கு அனுமதியளித்திருக்க வேண்டாமா?” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக உர்வா (ரஹ்)
குறிப்பு :
அவர் (ஆயிஷா (ரலி) அவர்களின் பால்குடித் தந்தையின் சகோதரர்) அபுல் குஐஸ் ஆவார்” என்று ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) கூறினார்கள்.