و حَدَّثَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي ابْنُ طَاوُسٍ عَنْ أَبِيهِ:
أَنَّهُ سَمِعَ ابْنَ عُمَرَ يُسْأَلُ عَنْ رَجُلٍ طَلَّقَ امْرَأَتَهُ حَائِضًا فَقَالَ أَتَعْرِفُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ قَالَ نَعَمْ قَالَ فَإِنَّهُ طَلَّقَ امْرَأَتَهُ حَائِضًا فَذَهَبَ عُمَرُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرَهُ الْخَبَرَ فَأَمَرَهُ أَنْ يُرَاجِعَهَا
قَالَ لَمْ أَسْمَعْهُ يَزِيدُ عَلَى ذَلِكَ لِأَبِيهِ
“ஒருவர் தம் மனைவியை, அவள் மாதவிடாயிலிருந்தபோது மணவிலக்குச் செய்துவிட்டால் (சட்டம் என்ன)?” என்று அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “அப்துல்லாஹ் பின் உமர் யார் என்று உமக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். அதற்கு அவர்கள், “அவர், அவருடைய மனைவியை, அவள் மாதவிடாயிலிருந்தபோது மணவிலக்குச் செய்துவிட்டார். ஆகவே, (அவருடைய தந்தை) உமர் (ரலி), நபி (ஸல்) அவர்களிடம் சென்று இச்செய்தியைத் தெரிவித்தார்கள். அப்போது நபி (ஸல்), “உங்கள் மகன் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ளட்டும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) வழியாக தாவூஸ் பின் கைஸான் (ரஹ்)
குறிப்புகள் :
இந்த ஹதீஸில் இப்னு உமர் (ரலி), தம்மைப் பற்றி ‘அவர்‘ என்று படர்க்கையாகக் குறிப்பிடுகின்றார்.
இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான அப்துல்லாஹ் பின் தாவூஸ் (ரஹ்) கூறுவதாவது:
(இந்த ஹதீஸை, இந்த அளவு மட்டுமே என் தந்தை தாவூஸ் (ரஹ்) அவர்களிடமிருந்து நான் செவியுற்றேன்) அவர்கள் இதை விடக் கூடுதலாக வேறொன்றும் கூறியதை நான் செவியுற்றதில்லை.