அத்தியாயம்: 20, பாடம்: 6, ஹதீஸ் எண்: 2778

‏و حَدَّثَنِي ‏ ‏حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بِشْرُ بْنُ الْمُفَضَّلِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَاصِمٌ وَهُوَ ابْنُ مُحَمَّدٍ الْعُمَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَاقِدٌ يَعْنِي أَخَاهُ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏سَعِيدُ ابْنُ مَرْجَانَةَ ‏ ‏صَاحِبُ ‏ ‏عَلِيِّ بْنِ حُسَيْنٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏يَقُولُ: ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَيُّمَا امْرِئٍ مُسْلِمٍ أَعْتَقَ امْرَأً مُسْلِمًا اسْتَنْقَذَ اللَّهُ بِكُلِّ عُضْوٍ مِنْهُ عُضْوًا مِنْهُ مِنْ النَّارِ ‏

‏قَالَ ‏ ‏فَانْطَلَقْتُ حِينَ سَمِعْتُ الْحَدِيثَ مِنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏فَذَكَرْتُهُ ‏ ‏لِعَلِيِّ بْنِ الْحُسَيْنِ ‏ ‏فَأَعْتَقَ عَبْدًا لَهُ قَدْ أَعْطَاهُ بِهِ ‏ ‏ابْنُ جَعْفَرٍ ‏ ‏عَشْرَةَ آلَافِ دِرْهَمٍ ‏ ‏أَوْ أَلْفَ دِينَارٍ

“ஒரு முஸ்லிம், மற்றொரு முஸ்லிமான அடிமையை விடுதலை செய்தால், (விடுதலை செய்யப்பட்ட) அந்த முஸ்லிமின் ஒவ்வோர் உறுப்புக்கும் பகரமாக (விடுதலை செய்தவரின்) ஓர் உறுப்பை அல்லாஹ் நரகத்திலிருந்து காப்பாற்றுவான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவித்ததை நான் கேட்டேன்.

இந்த ஹதீஸை அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து செவியுற்ற நான், அதை அலீ பின் ஹுஸைன் (ரஹ்) அவர்களிடம் தெரிவித்தேன். அதைக் கேட்ட அலீ (ரஹ்), உடனே தம் அடிமை ஒருவரை விடுதலை செய்துவிட்டார்கள். அந்த அடிமைக்கு (விலையாக) அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் பின் அபீதாலிப் (ரலி) பத்தாயிரம் திர்ஹம்களை, அல்லது ஆயிரம் தீனாரை அலீ பின் ஹுஸைன் (ரஹ்) அவர்களிடம் கொடுத்திருந்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக ஸயீத் பின் அப்தில்லாஹ் இப்னு மர்ஜானா (ரஹ்)

Share this Hadith: