அத்தியாயம்: 17, பாடம்: 10, ஹதீஸ் எண்: 2646

‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ الْمُسَيَّبِ ‏ ‏وَأَبِي سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ : ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏الْوَلَدُ لِلْفِرَاشِ ‏ ‏وَلِلْعَاهِرِ ‏ ‏الْحَجَرُ ‏


و حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ مَنْصُورٍ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَعَبْدُ الْأَعْلَى بْنُ حَمَّادٍ ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏أَمَّا ‏ ‏ابْنُ مَنْصُورٍ ‏ ‏فَقَالَ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏وَأَمَّا ‏ ‏عَبْدُ الْأَعْلَى ‏ ‏فَقَالَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ ‏ ‏أَوْ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ  ‏ ‏وَقَالَ ‏  ‏زُهَيْرٌ  ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدٍ ‏ ‏أَوْ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ ‏ ‏أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏وَقَالَ ‏ ‏عَمْرٌو ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏مَرَّةً ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدٍ ‏ ‏وَأَبِي سَلَمَةَ ‏ ‏وَمَرَّةً ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدٍ ‏ ‏أَوْ ‏ ‏أَبِي سَلَمَةَ ‏ ‏وَمَرَّةً ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏مَعْمَرٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “ஒரு பெண் பெற்றெடுத்த குழந்தை, அப்பெண் யாருடைய அதிகாரத்தின் கீழ் இருக்கின்றாளோ அவருக்கே உரியது. விபசாரம் செய்தவருக்கு இழப்புதான் ஏற்படும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 17, பாடம்: 10, ஹதீஸ் எண்: 2645

‏حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رُمْحٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَنَّهَا قَالَتْ : ‏

‏اخْتَصَمَ ‏ ‏سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ ‏ ‏وَعَبْدُ بْنُ زَمْعَةَ ‏ ‏فِي غُلَامٍ فَقَالَ ‏ ‏سَعْدٌ ‏ ‏هَذَا يَا رَسُولَ اللَّهِ ابْنُ أَخِي ‏ ‏عُتْبَةَ بْنِ أَبِي وَقَّاصٍ ‏ ‏عَهِدَ إِلَيَّ أَنَّهُ ابْنُهُ انْظُرْ إِلَى شَبَهِهِ وَقَالَ ‏ ‏عَبْدُ بْنُ زَمْعَةَ ‏ ‏هَذَا أَخِي يَا رَسُولَ اللَّهِ وُلِدَ عَلَى فِرَاشِ أَبِي مِنْ وَلِيدَتِهِ فَنَظَرَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِلَى شَبَهِهِ فَرَأَى شَبَهًا بَيِّنًا ‏ ‏بِعُتْبَةَ ‏ ‏فَقَالَ هُوَ لَكَ يَا ‏ ‏عَبْدُ ‏ ‏الْوَلَدُ لِلْفِرَاشِ ‏ ‏وَلِلْعَاهِرِ ‏ ‏الْحَجَرُ ‏ ‏وَاحْتَجِبِي مِنْهُ يَا ‏ ‏سَوْدَةُ بِنْتَ زَمْعَةَ ‏


قَالَتْ فَلَمْ يَرَ ‏ ‏سَوْدَةَ ‏ ‏قَطُّ ‏ ‏وَلَمْ يَذْكُرْ ‏ ‏مُحَمَّدُ بْنُ رُمْحٍ ‏ ‏قَوْلَهُ يَا ‏ ‏عَبْدُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ مَنْصُورٍ ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ نَحْوَهُ ‏ ‏غَيْرَ أَنَّ ‏ ‏مَعْمَرًا ‏ ‏وَابْنَ عُيَيْنَةَ ‏ ‏فِي حَدِيثِهِمَا الْوَلَدُ لِلْفِرَاشِ وَلَمْ يَذْكُرَا ‏ ‏وَلِلْعَاهِرِ ‏ ‏الْحَجَرُ

ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களும் அப்து பின் ஸம்ஆ (ரலி) அவர்களும் ஓர் இளைஞன் விஷயத்தில் முரண்பட்டனர்.

ஸஅத் (ரலி), “அல்லாஹ்வின் தூதரே! இந்த இளைஞன் என் சகோதரர் உத்பா பின் அபீவக்காஸின் மகன் ஆவான். என் சகோதரர் (தமது இறப்பின்போது) இந்த இளைஞன் தம்முடைய மகன் என்று என்னிடம் அறுதியிட்டுக் கூறினார். இந்த இளைஞன் அவரது சாயலில் இருப்பதைக் கூர்ந்து பாருங்கள்” என்று கூறினார்கள்.

அதற்கு அப்து பின் ஸம்ஆ (ரலி), “அல்லாஹ்வின் தூதரே! இந்த இளைஞன் என் சகோதரன் ஆவான். என் தந்தைக்குச் சொந்தமான அடிமைப் பெண்ணுக்கு இவன் பிறந்தான்” எனக் கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), அவ்விளைஞனிடம் உத்பாவின் தெளிவான சாயலைக் கண்டார்கள். எனினும், (அப்து பின் ஸம்ஆ (ரலி) அவர்களிடம்), “அப்தே! அவன் உமக்குரியவனே. ஒருவருடைய அதிகாரத்தின் கீழ் இருக்கும் (அடிமைப்) பெண் பெற்றெடுக்கும் குழந்தை, அவருக்கே உரியது. விபசாரம் செய்தவருக்கு இழப்புதான் ஏற்படும்” எனக் கூறினார்கள்.

பிறகு (தம் மனைவி ஸவ்தா (ரலி) அவர்களிடம்), “ஸவ்தாவே! இந்த இளைஞனிடத்தில் ஹிஜாபைப் பேணிக்கொள்” என்று கூறினார்கள். அதற்குப் பிறகு ஸவ்தா (ரலி) அவர்களை அந்த இளைஞன் ஒருபோதும் கண்டதில்லை.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்புகள் :

முஹம்மது பின் ரும்ஹு (ரஹ்) வழி அறிவிப்பில், நபி (ஸல்), “அப்தே!” என்று அழைத்தது இடம்பெறவில்லை.

மஅமர் (ரஹ்) மற்றும் இப்னு உயைனா (ரஹ்) ஆகியோர் வழி அறிவிப்புகளில் “விபச்சாரம் செய்தவருக்கு இழப்புதான் ஏற்படும்” என்னும் இறுதிக் குறிப்பு இடம்பெறவில்லை.

அன்னை ஸவ்தா (ரலி), அப்து பின் ஸம்ஆ (ரலி) அவர்களின் உடன்பிறந்த சகோதரி ஆவார்

அத்தியாயம்: 17, பாடம்: 9, ஹதீஸ் எண்: 2644

‏و حَدَّثَنِيهِ ‏ ‏يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدُ بْنُ الْحَارِثِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْخَلِيلِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ ‏ ‏قَالَ : ‏

أَصَابُوا ‏ ‏سَبْيًا ‏ ‏يَوْمَ ‏ ‏أَوْطَاسَ ‏ ‏لَهُنَّ أَزْوَاجٌ فَتَخَوَّفُوا فَأُنْزِلَتْ هَذِهِ الْآيَةُ ‏

          ‏وَالْمُحْصَنَاتُ ‏ ‏مِنْ النِّسَاءِ إِلَّا مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ


و حَدَّثَنِي ‏ ‏يَحْيَى بْنُ حَبِيبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدٌ يَعْنِي ابْنَ الْحَارِثِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سَعِيدٌ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَهُ

‘அவ்தாஸ்’ போர் நாளில் சில பெண்களை முஸ்லிம்கள் சிறை பிடித்தனர். அப்பெண்களுக்கு (ஏற்கெனவே) கணவர்கள் இருந்த காரணத்தால் (பெண் கைதிகளுடன் உடலுறவு கொள்ள) அஞ்சினர். இது தொடர்பாகவே “இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது. (இது) அல்லாஹ் உங்களுக்கு விதித்த சட்டமாகும்” எனும் (4:24) வசனம் அருளப்பெற்றது.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

அத்தியாயம்: 17, பாடம்: 9, ஹதீஸ் எண்: 2643

‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ بْنِ مَيْسَرَةَ الْقَوَارِيرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ بْنُ زُرَيْعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏صَالِحٍ أَبِي الْخَلِيلِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عَلْقَمَةَ الْهَاشِمِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ : ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَوْمَ ‏ ‏حُنَيْنٍ ‏ ‏بَعَثَ جَيْشًا إِلَى ‏ ‏أَوْطَاسَ ‏ ‏فَلَقُوا عَدُوًّا فَقَاتَلُوهُمْ فَظَهَرُوا عَلَيْهِمْ وَأَصَابُوا لَهُمْ ‏ ‏سَبَايَا ‏ ‏فَكَأَنَّ نَاسًا مِنْ ‏ ‏أَصْحَابِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏تَحَرَّجُوا مِنْ ‏ ‏غِشْيَانِهِنَّ ‏ ‏مِنْ أَجْلِ أَزْوَاجِهِنَّ مِنْ الْمُشْرِكِينَ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ فِي ذَلِكَ ‏

          ‏”وَالْمُحْصَنَاتُ ‏ ‏مِنْ النِّسَاءِ إِلَّا مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ“ ‏

‏أَيْ فَهُنَّ لَكُمْ حَلَالٌ إِذَا انْقَضَتْ عِدَّتُهُنَّ ‏


و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْأَعْلَى ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْخَلِيلِ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا عَلْقَمَةَ الْهَاشِمِيَّ ‏ ‏حَدَّثَ أَنَّ ‏ ‏أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ ‏ ‏حَدَّثَهُمْ ‏ ‏أَنَّ نَبِيَّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بَعَثَ يَوْمَ ‏ ‏حُنَيْنٍ ‏ ‏سَرِيَّةً ‏ ‏بِمَعْنَى حَدِيثِ ‏ ‏يَزِيدَ بْنِ زُرَيْعٍ ‏ ‏غَيْرَ أَنَّهُ قَالَ إِلَّا مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ مِنْهُنَّ فَحَلَالٌ لَكُمْ وَلَمْ يَذْكُرْ إِذَا انْقَضَتْ عِدَّتُهُنَّ ‏ ‏و حَدَّثَنِيهِ ‏ ‏يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدٌ يَعْنِي ابْنَ الْحَارِثِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ஹுனைன் போரின்போது ‘அவ்தாஸ்’ என்ற பகுதிக்கு ஒரு படையை அனுப்பினார்கள். எதிரிகளை எதிர்கொண்டு, போரிட்டு முஸ்லிம்கள் வெற்றி கொண்டனர். அவர்களுடைய பெண்கள் சிலரையும் சிறை பிடித்தனர். (சிறை பிடிக்கப்பட்ட) அப் பெண்களுக்கு இணைவைப்பாளர்களான கணவர்கள் இருந்தார்கள் என்பதால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்களில் சிலர் அப்பெண்களுடன் உடலுறவு கொள்வதைத் தவறாகக் கருதினர். இது தொடர்பாகவே, “இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது. (இது) அல்லாஹ் உங்களுக்கு விதித்த சட்டமாகும்” எனும் (4:24) வசனத்தை அல்லாஹ் அருளினான்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)


குறிப்பு :

கருவறியக் காத்திருக்கும் (இத்தா) காலம் முடிந்த பின்னர் அடிமைப் பெண்கள், அவர்களின் காப்பாளர்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களாக ஆகிவிடுவர்.

அபூபக்ரு பின் அபீஷைபா (ரஹ்), முஹம்மது பின் அல் முஸன்னா (ரஹ்), இப்னு பஷ்ஷார் (ரஹ்) ஆகியோர் வழி அறிவிப்பில், “(இத்தா) காலம் முடிந்த பின்னர் …” எனும் சொற்றொடர் இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 17, பாடம்: 8, ஹதீஸ் எண்: 2642

‏حَدَّثَنَا ‏ ‏هَنَّادُ بْنُ السَّرِيِّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو الْأَحْوَصِ ‏ ‏عَنْ ‏ ‏أَشْعَثَ بْنِ أَبِي الشَّعْثَاءِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏مَسْرُوقٍ ‏ ‏قَالَ  :‏

‏قَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏دَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَعِنْدِي رَجُلٌ قَاعِدٌ فَاشْتَدَّ ذَلِكَ عَلَيْهِ وَرَأَيْتُ الْغَضَبَ فِي وَجْهِهِ قَالَتْ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ أَخِي مِنْ الرَّضَاعَةِ قَالَتْ فَقَالَ ‏ ‏انْظُرْنَ إِخْوَتَكُنَّ مِنْ الرَّضَاعَةِ فَإِنَّمَا الرَّضَاعَةُ مِنْ الْمَجَاعَةِ ‏


و حَدَّثَنَاه ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏قَالَا ‏ ‏جَمِيعًا ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حُسَيْنٌ الْجُعْفِيُّ ‏ ‏عَنْ ‏ ‏زَائِدَةَ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏أَشْعَثَ بْنِ أَبِي الشَّعْثَاءِ ‏ ‏بِإِسْنَادِ ‏ ‏أَبِي الْأَحْوَصِ ‏ ‏كَمَعْنَى حَدِيثِهِ غَيْرَ أَنَّهُمْ قَالُوا مِنْ الْمَجَاعَةِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என் வீட்டிற்கு (ஒரு முறை) வந்தார்கள். அப்போது ஒருவர் என் வீட்டில் அமர்ந்திருந்தார். அது நபி (ஸல்) அவர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்திவிட்டது. கோபத்தை அவர்களது முகத்தில் கண்ட நான், “அல்லாஹ்வின் தூதரே! அவர் என் பால்குடிச் சகோதரர் ஆவார்” என்று கூறினேன். நபி (ஸல்), “உங்கள் பால்குடிச் சகோதரர்களைக் கூர்ந்து பார்த்து அறியுங்கள். ஏனெனில், பசியால்(தாய்ப் பால் அருந்தினால்)தான் பால்குடி உறவு ஏற்படும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)