அத்தியாயம்: 33, பாடம்: 26, ஹதீஸ் எண்: 3474

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ:‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ الْخَيْلُ فِي نَوَاصِيهَا الْخَيْرُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ ‏”‏ ‏


وَحَدَّثَنَا قُتَيْبَةُ، وَابْنُ رُمْحٍ عَنِ اللَّيْثِ بْنِ سَعْدٍ، ح وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، وَعَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، ح وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي ح، وَحَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا يَحْيَى، كُلُّهُمْ عَنْ عُبَيْدِ اللَّهِ، ح وَحَدَّثَنَا هَارُونُ بْنُ سَعِيدٍ الأَيْلِيُّ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنِي أُسَامَةُ، كُلُّهُمْ عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏.‏ بِمِثْلِ حَدِيثِ مَالِكٍ عَنْ نَافِعٍ

“மறுமை நாள்வரை நன்மை, (இறைவழியில் பயணிக்கும்) குதிரைகளின் நெற்றிகளில் உள்ளது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 33, பாடம்: 25, ஹதீஸ் எண்: 3473

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم سَابَقَ بِالْخَيْلِ الَّتِي قَدْ أُضْمِرَتْ مِنَ الْحَفْيَاءِ وَكَانَ أَمَدُهَا ثَنِيَّةَ الْوَدَاعِ وَسَابَقَ بَيْنَ الْخَيْلِ الَّتِي لَمْ تُضْمَرْ مِنَ الثَّنِيَّةِ إِلَى مَسْجِدِ بَنِي زُرَيْقٍ وَكَانَ ابْنُ عُمَرَ فِيمَنْ سَابَقَ بِهَا


وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَمُحَمَّدُ بْنُ رُمْحٍ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنِ اللَّيْثِ بْنِ سَعْدٍ، ح وَحَدَّثَنَا خَلَفُ بْنُ هِشَامٍ، وَأَبُو الرَّبِيعِ، وَأَبُو كَامِلٍ قَالُوا حَدَّثَنَا حَمَّادٌ، – وَهُوَ ابْنُ زَيْدٍ – عَنْ أَيُّوبَ، ح وَحَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ أَيُّوبَ، ح وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي ح، وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، ح

وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَعُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، قَالاَ حَدَّثَنَا يَحْيَى، – وَهُوَ الْقَطَّانُ  – جَمِيعًا عَنْ عُبَيْدِ اللَّهِ، ح وَحَدَّثَنِي عَلِيُّ بْنُ حُجْرٍ، وَأَحْمَدُ بْنُ عَبْدَةَ، وَابْنُ أَبِي عُمَرَ، قَالُوا حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أُمَيَّةَ، ح وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي مُوسَى بْنُ عُقْبَةَ، ح وَحَدَّثَنَا هَارُونُ بْنُ سَعِيدٍ الأَيْلِيُّ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي أُسَامَةُ، – يَعْنِي ابْنَ زَيْدٍ – كُلُّ هَؤُلاَءِ عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، بِمَعْنَى حَدِيثِ مَالِكٍ عَنْ نَافِعٍ، ‏.‏ وَزَادَ فِي حَدِيثِ أَيُّوبَ مِنْ رِوَايَةِ حَمَّادٍ وَابْنِ عُلَيَّةَ قَالَ عَبْدُ اللَّهِ فَجِئْتُ سَابِقًا فَطَفَّفَ بِي الْفَرَسُ الْمَسْجِدَ ‏.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மெலிய வை(த்துப் பயிற்சியளி)க்கப்பட்ட குதிரைகளுக்கிடையே ‘அல்ஹஃப்யா’ எனுமிடத்திலிருந்து பந்தயம் வைத்தார்கள். ‘ஸனிய்யத்துல் வதா’ மலைக் குன்று அதன் பந்தய எல்லையாக இருந்தது. (போலவே,) மெலிய வைக்கப்படாத குதிரைகளுக்கிடையே ‘ஸனிய்யத்துல் வதா’விலிருந்து பனூ ஸுரைக் பள்ளிவாசல்வரை பந்தயம் வைத்தார்கள். அந்தப் போட்டியில் கலந்துகொண்டவர்களில் நானும் ஒருவன் ஆவேன்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)


குறிப்பு :

இஸ்மாயீல் பின் உலய்யா (ரஹ்) மற்றும் ஹம்மாத் பின் ஸைத் (ரஹ்) வழி அறிவிப்பில், “நான் அந்தப் பயணத்தில் முந்தி வந்தேன். அப்போது நானிருந்த குதிரை அந்தப் பள்ளிவாசலைத் தாவிக் குதித்தது” என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 33, பாடம்: 24, ஹதீஸ் எண்: 3472

وَحَدَّثَنَا أَبُو الرَّبِيعِ الْعَتَكِيُّ، وَأَبُو كَامِلٍ قَالاَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ لاَ تُسَافِرُوا بِالْقُرْآنِ فَإِنِّي لاَ آمَنُ أَنْ يَنَالَهُ الْعَدُوُّ ‏”‏ ‏ قَالَ أَيُّوبُ فَقَدْ نَالَهُ الْعَدُوُّ وَخَاصَمُوكُمْ بِهِ


حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ يَعْنِي ابْنَ عُلَيَّةَ، ح وَحَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، وَالثَّقَفِيُّ، كُلُّهُمْ عَنْ أَيُّوبَ، ح وَحَدَّثَنَا ابْنُ رَافِعٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، أَخْبَرَنَا الضَّحَّاكُ، – يَعْنِي ابْنَ عُثْمَانَ – جَمِيعًا عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏.‏ فِي حَدِيثِ ابْنِ عُلَيَّةَ وَالثَّقَفِيِّ ‏”‏ فَإِنِّي أَخَافُ ‏”‏ ‏.‏ وَفِي حَدِيثِ سُفْيَانَ وَحَدِيثِ الضَّحَّاكِ بْنِ عُثْمَانَ ‏”‏ مَخَافَةَ أَنْ يَنَالَهُ الْعَدُوُّ ‏”‏

“குர்ஆன் பிரதியுடன் (எதிரியின் நாட்டுக்குப்) பயணம் செய்யாதீர்கள். ஏனெனில், எதிரிகளின் கைகளால் அதற்குத் தீமை விளையாது என்று ஐயம் கொள்ளாமல் என்னால் இருக்க முடியவில்லை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)


குறிப்பு :

“எதிரிகள் அதை எடுத்துவைத்துக்கொண்டு, உங்களுடன் குதர்க்கவாதம் செய்தனர்” என்று இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அய்யூப் (ரஹ்) கூறினார்.

இஸ்மாயீல் பின் உலய்யா (ரஹ்) மற்றும் அப்துல் வஹ்ஹாப் அஸ்ஸகஃபீ (ரஹ்) வழி அறிவிப்பில் “அதற்கு எதிரிகளின் கைகளால் ஏற்படும் தீமையை நான் அஞ்சுகின்றேன்” என்று இடம்பெற்றுள்ளது.

ஸுஃப்யான் பின் உயைனா மற்றும் அள்ளஹ்ஹாக் பின் உஸ்மான் (ரஹ்) வழி அறிவிப்பில், “எதிரிகளின் கைகளால் ஏற்படும் தீமையைப் பற்றிய அச்சமே இதற்குக் காரணம்” என்று இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 33, பாடம்: 24, ஹதீஸ் எண்: 3471

وَحَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا لَيْثٌ، ح وَحَدَّثَنَا ابْنُ رُمْحٍ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ :‏

عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ كَانَ يَنْهَى أَنْ يُسَافَرَ بِالْقُرْآنِ إِلَى أَرْضِ الْعَدُوِّ مَخَافَةَ أَنْ يَنَالَهُ الْعَدُوُّ

எதிரிகளின் கைகளால் குர்ஆன் பிரதிக்குத் தீங்கு ஏற்படக் கூடும் என்ற ஐயத்தின் காரணத்தால், எதிரியின் நாட்டுக்குக் குர்ஆன் பிரதியோடு பயணம் செய்வதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தடை செய்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 33, பாடம்: 24, ஹதீஸ் எண்: 3470

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ قَالَ :‏

نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يُسَافَرَ بِالْقُرْآنِ إِلَى أَرْضِ الْعَدُوِّ

குர்ஆன் பிரதியுடன் எதிரியின் நாட்டுக்குப் பயணம் செய்வதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தடை செய்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 33, பாடம்: 22, ஹதீஸ் எண்: 3468

حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ، وَابْنُ حُجْرٍ – وَاللَّفْظُ لاِبْنِ أَيُّوبَ – قَالُوا حَدَّثَنَا إِسْمَاعِيلُ، – وَهُوَ ابْنُ جَعْفَرٍ – أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، يَقُولُ :‏

كُنَّا نُبَايِعُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى السَّمْعِ وَالطَّاعَةِ يَقُولُ لَنَا ‏ “‏ فِيمَا اسْتَطَعْتَ ‏”‏

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அவர்களின் கட்டளைகளைச்) செவியுற்றுக் கீழ்ப்படிந்து நடப்போம் என உறுதிமொழி அளிக்கும்போது அவர்கள், “என்னால் இயன்றவரை…” என்று (சேர்த்துச் சொல்லுமாறு) கூறுவது வழக்கம்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 33, பாடம்: 23, ஹதீஸ் எண்: 3469

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ :‏

عَرَضَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ أُحُدٍ فِي الْقِتَالِ وَأَنَا ابْنُ أَرْبَعَ عَشْرَةَ سَنَةً فَلَمْ يُجِزْنِي وَعَرَضَنِي يَوْمَ الْخَنْدَقِ وَأَنَا ابْنُ خَمْسَ عَشْرَةَ سَنَةً فَأَجَازَنِي ‏.‏ قَالَ نَافِعٌ فَقَدِمْتُ عَلَى عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ وَهُوَ يَوْمَئِذٍ خَلِيفَةٌ فَحَدَّثْتُهُ هَذَا الْحَدِيثَ فَقَالَ إِنَّ هَذَا لَحَدٌّ بَيْنَ الصَّغِيرِ وَالْكَبِيرِ ‏.‏ فَكَتَبَ إِلَى عُمَّالِهِ أَنْ يَفْرِضُوا لِمَنْ كَانَ ابْنَ خَمْسَ عَشْرَةَ سَنَةً وَمَنْ كَانَ دُونَ ذَلِكَ فَاجْعَلُوهُ فِي الْعِيَالِ ‏


وَحَدَّثَنَاهُ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، وَعَبْدُ الرَّحِيمِ بْنُ سُلَيْمَانَ ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، – يَعْنِي الثَّقَفِيَّ – جَمِيعًا عَنْ عُبَيْدِ اللَّهِ بِهَذَا الإِسْنَادِ غَيْرَ أَنَّ فِي حَدِيثِهِمْ وَأَنَا ابْنُ أَرْبَعَ عَشْرَةَ سَنَةً فَاسْتَصْغَرَنِي ‏.‏

நான் பதினான்கு வயதினனாக இருந்த போது, உஹுதுடைய நாளில் போருக்காக (ஆட்கள் தேர்வு நடந்த சமயம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் நின்றேன். ஆனால், (போரில் கலந்துகொள்ள) எனக்கு அவர்கள் அனுமதியளிக்கவில்லை. (அடுத்த ஆண்டு நடந்த) அகழ்ப் போரின் போது நான் அவர்களுக்கு முன் நின்றபோது நான் பதினைந்து வயதினனாக இருந்தேன். அப்போது (போரில் கலந்துகொள்ள) எனக்கு அனுமதியளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)


குறிப்பு :

“உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) கலீஃபாவாக இருந்தபோது அவர்களிடம் நான் சென்று, (இப்னு உமர் அவர்களின்) இந்த ஹதீஸை அவர்களுக்கு அறிவித்தேன். அவர்கள், ‘(அப்படியென்றால்) இதுதான் சிறியவருக்கும் பெரியவருக்கும் இடையே (வேறுபடுத்திக் காட்டும்) எல்லைக் கோடாகும்’ என்று கூறிவிட்டு, பதினைந்து வயதை அடைந்தவர்களுக்கு (இராணுவப் பணிக்கான ஊதியத் தொகையை) நிர்ணயிக்கும்படியும் அதைவிடக் குறைந்த வயது உடையவர்களைச் சிறுவர்களின் கணக்கில் சேர்த்துவிடும்படியும் தம் ஆளுநர்களுக்குக் கடிதம் எழுதினார்கள்” என்று இதன் அறிவிப்பாளர் நாஃபிஉ (ரஹ்) கூறுகின்றார்.

அப்துல் வஹ்ஹாப் அஸ்ஸகஃபீ (ரஹ்) வழி அறிவிப்பில், “நான் பதினான்கு வயதினனாக இருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னைச் சிறுவனாகக் கருதினார்கள்” என்று இப்னு உமர் (ரலி) கூறியதாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 33, பாடம்: 21, ஹதீஸ் எண்: 3467

وَحَدَّثَنِي هَارُونُ بْنُ سَعِيدٍ الأَيْلِيُّ، وَأَبُو الطَّاهِرِ، قَالَ أَبُو الطَّاهِرِ أَخْبَرَنَا وَقَالَ هَارُونُ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، أَنَّ عَائِشَةَ، أَخْبَرَتْهُ عَنْ بَيْعَةِ النِّسَاءِ، قَالَتْ :‏

مَا مَسَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِيَدِهِ امْرَأَةً قَطُّ إِلاَّ أَنْ يَأْخُذَ عَلَيْهَا فَإِذَا أَخَذَ عَلَيْهَا فَأَعْطَتْهُ قَالَ ‏ “‏ اذْهَبِي فَقَدْ بَايَعْتُكِ ‏”‏

பெண்களின் உறுதிப் பிரமாணம் (பைஅத்) வாங்கும் முறை பற்றி அன்னை ஆயிஷா (ரலி) கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கை, (உறுதிமொழி வாங்கிய போது) எந்தப் பெண்ணையும் ஒருபோதும் தொட்டதில்லை. வாய்மொழியாகவே பெண்களிடம் உறுதிமொழி வாங்கினார்கள். அவ்வாறு உறுதிமொழி வாங்கியதும், “உன்னிடம் உறுதிமொழி பெற்றுக்கொண்டேன், நீ செல்லலாம்” என்று கூறுவார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்)

அத்தியாயம்: 33, பாடம்: 21, ஹதீஸ் எண்: 3466

حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ سَرْحٍ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ بْنُ يَزِيدَ قَالَ قَالَ ابْنُ شِهَابٍ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ :‏

كَانَتِ الْمُؤْمِنَاتُ إِذَا هَاجَرْنَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يُمْتَحَنَّ بِقَوْلِ اللَّهِ عَزَّ وَجَلَّ ‏{‏ يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا جَاءَكَ الْمُؤْمِنَاتُ يُبَايِعْنَكَ عَلَى أَنْ لاَ يُشْرِكْنَ بِاللَّهِ شَيْئًا وَلاَ يَسْرِقْنَ وَلاَ يَزْنِينَ‏}‏ إِلَى آخِرِ الآيَةِ ‏.‏ قَالَتْ عَائِشَةُ فَمَنْ أَقَرَّ بِهَذَا مِنَ الْمُؤْمِنَاتِ فَقَدْ أَقَرَّ بِالْمِحْنَةِ وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا أَقْرَرْنَ بِذَلِكَ مِنْ قَوْلِهِنَّ قَالَ لَهُنَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ انْطَلِقْنَ فَقَدْ بَايَعْتُكُنَّ ‏”‏ ‏.‏ وَلاَ وَاللَّهِ مَا مَسَّتْ يَدُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَدَ امْرَأَةٍ قَطُّ ‏.‏ غَيْرَ أَنَّهُ يُبَايِعُهُنَّ بِالْكَلاَمِ – قَالَتْ عَائِشَةُ – وَاللَّهِ مَا أَخَذَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى النِّسَاءِ قَطُّ إِلاَّ بِمَا أَمَرَهُ اللَّهُ تَعَالَى وَمَا مَسَّتْ كَفُّ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم كَفَّ امْرَأَةٍ قَطُّ وَكَانَ يَقُولُ لَهُنَّ إِذَا أَخَذَ عَلَيْهِنَّ ‏”‏ قَدْ بَايَعْتُكُنَّ ‏”‏ ‏ كَلاَمًا

இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் (மக்காவிலிருந்து மதீனாவுக்கு) நாடு துறந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தால், “நபியே! இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் வந்து, தாம் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்கமாட்டோம்; திருடமாட்டோம்; விபசாரம் செய்யமாட்டோம்… என்றெல்லாம் உறுதிப் பிரமாணம் அளித்தால், அதை ஏற்று, அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவீராக!” எனும் (60:12)  இறைவசனத்துக்கேற்ப அவர்களுக்குத் தேர்வு நடத்தப்படும்.

இறைநம்பிக்கை கொண்ட அப்பெண்களில் இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளிப்பவர், தேர்வில் வென்றுவிட்டார் என்று முடிவு செய்வார்கள். இந்த உறுதிமொழியை அப்பெண்கள் வாய்மொழியாக ஒப்புக்கொண்டுவிட்டால், அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உங்களிடம் உறுதிப் பிரமாணம் பெற்றுக்கொண்டேன், புறப்படுங்கள்!” என்று கூறுவார்கள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! (உறுதிப் பிரமாணம் வாங்கும்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கை, எந்தப் பெண்ணின் கையையும் ஒருபோதும் தொட்டதில்லை. வாய் மொழியாகவே அப்பெண்களிடம் உறுதிமொழி வாங்கினார்கள்.

அல்லாஹ் ஆணையிட்ட நிபந்தனை (வாசகங்களைத்) தவிர வேறெதையும் அப்பெண்களிடமிருந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (உறுதிமொழியாகப்) பெறவில்லை. (உறுதிமொழி வாங்கியபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கை, எந்தப் பெண்ணின் கையையும் ஒரு போதும் தொட்டதில்லை. அவர்களிடம் உறுதிமொழி வாங்கியதும் “உங்களிடம் உறுதிப் பிரமாணம் பெற்றுக்கொண்டேன்” என்று வார்த்தையால் மட்டுமே கூறுவார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 33, பாடம்: 20, ஹதீஸ் எண்: 3465

وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ خَلاَّدٍ الْبَاهِلِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَمْرٍو الأَوْزَاعِيُّ حَدَّثَنِي ابْنُ شِهَابٍ الزُّهْرِيُّ، حَدَّثَنِي عَطَاءُ بْنُ يَزِيدَ اللَّيْثِيُّ، أَنَّهُ حَدَّثَهُمْ قَالَ حَدَّثَنِي أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ :‏

أَنَّ أَعْرَابِيًّا سَأَلَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْهِجْرَةِ فَقَالَ ‏”‏ وَيْحَكَ إِنَّ شَأْنَ الْهِجْرَةِ لَشَدِيدٌ فَهَلْ لَكَ مِنْ إِبِلٍ ‏”‏ ‏.‏ قَالَ نَعَمْ ‏.‏ قَالَ ‏”‏ فَهَلْ تُؤْتِي صَدَقَتَهَا ‏”‏ ‏.‏ قَالَ نَعَمْ ‏.‏ قَالَ ‏”‏ فَاعْمَلْ مِنْ وَرَاءِ الْبِحَارِ فَإِنَّ اللَّهَ لَنْ يَتِرَكَ مِنْ عَمَلِكَ شَيْئًا ‏”‏


وَحَدَّثَنَاهُ عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، عَنِ الأَوْزَاعِيِّ، بِهَذَا الإِسْنَادِ ‏.‏ مِثْلَهُ غَيْرَ أَنَّهُ قَالَ ‏”‏ إِنَّ اللَّهَ لَنْ يَتِرَكَ مِنْ عَمَلِكَ شَيْئًا ‏”‏ ‏.‏ وَزَادَ فِي الْحَدِيثِ قَالَ ‏”‏ فَهَلْ تَحْلُبُهَا يَوْمَ وِرْدِهَا ‏”‏ ‏.‏ قَالَ نَعَمْ ‏.‏

கிராமவாசி ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நாடு துறப்பது (ஹிஜ்ரத்) பற்றிக் கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உனக்கு நாசம் தான்! ஹிஜ்ரத்தின் நிலை மிகவும் கடினமானது. உன்னிடம் ஒட்டகங்கள் இருக்கின்றனவா?” என்று கேட்டார்கள். அவர், “ஆம்” என்று விடையளித்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவற்றுக்குரிய ஸகாத்தை நீ கொடுத்துவருகிறாயா?” என்று கேட்டார்கள். அவர், “ஆம்” என்றார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அப்படியென்றால், நீ ஊர் விட்டு ஊர் சென்றுகூட வேலை செய்(து வாழலாம்). ஏனெனில், அல்லாஹ் உன் நற்செயல்க(ளின் பிரதி பலன்க)ளிருந்து எதையும் குறைக்கமாட்டான்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)


குறிப்பு :

முஹம்மது பின் யூஸுஃப் (ரஹ்) வழி அறிவிப்பில், ஏனெனில் எனும் சொல் இடம்பெறாமல், “… அல்லாஹ் உன் நற்செயல்க(ளின் பிரதிபலன்க)ளிலிருந்து எதையும் குறைக்க மாட்டான்” என்று இடம்பெற்றுள்ளது. மேலும் அந்த அறிவிப்பில், “அவ்வொட்டகங்கள் (நீர்நிலைகளுக்கு) நீரருந்தச் செல்லும் (முறை) நாளில் அவற்றின் பாலைக் கற(ந்து ஏழைகளுக்கு கொடு)க்கிறாயா?” என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கேட்டார்கள். அவர் “ஆம்” என்று பதிலளித்தார் எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.