அத்தியாயம்: 33, பாடம்: 23, ஹதீஸ் எண்: 3469

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ :‏

عَرَضَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ أُحُدٍ فِي الْقِتَالِ وَأَنَا ابْنُ أَرْبَعَ عَشْرَةَ سَنَةً فَلَمْ يُجِزْنِي وَعَرَضَنِي يَوْمَ الْخَنْدَقِ وَأَنَا ابْنُ خَمْسَ عَشْرَةَ سَنَةً فَأَجَازَنِي ‏.‏ قَالَ نَافِعٌ فَقَدِمْتُ عَلَى عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ وَهُوَ يَوْمَئِذٍ خَلِيفَةٌ فَحَدَّثْتُهُ هَذَا الْحَدِيثَ فَقَالَ إِنَّ هَذَا لَحَدٌّ بَيْنَ الصَّغِيرِ وَالْكَبِيرِ ‏.‏ فَكَتَبَ إِلَى عُمَّالِهِ أَنْ يَفْرِضُوا لِمَنْ كَانَ ابْنَ خَمْسَ عَشْرَةَ سَنَةً وَمَنْ كَانَ دُونَ ذَلِكَ فَاجْعَلُوهُ فِي الْعِيَالِ ‏


وَحَدَّثَنَاهُ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، وَعَبْدُ الرَّحِيمِ بْنُ سُلَيْمَانَ ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، – يَعْنِي الثَّقَفِيَّ – جَمِيعًا عَنْ عُبَيْدِ اللَّهِ بِهَذَا الإِسْنَادِ غَيْرَ أَنَّ فِي حَدِيثِهِمْ وَأَنَا ابْنُ أَرْبَعَ عَشْرَةَ سَنَةً فَاسْتَصْغَرَنِي ‏.‏

நான் பதினான்கு வயதினனாக இருந்த போது, உஹுதுடைய நாளில் போருக்காக (ஆட்கள் தேர்வு நடந்த சமயம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் நின்றேன். ஆனால், (போரில் கலந்துகொள்ள) எனக்கு அவர்கள் அனுமதியளிக்கவில்லை. (அடுத்த ஆண்டு நடந்த) அகழ்ப் போரின் போது நான் அவர்களுக்கு முன் நின்றபோது நான் பதினைந்து வயதினனாக இருந்தேன். அப்போது (போரில் கலந்துகொள்ள) எனக்கு அனுமதியளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)


குறிப்பு :

“உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) கலீஃபாவாக இருந்தபோது அவர்களிடம் நான் சென்று, (இப்னு உமர் அவர்களின்) இந்த ஹதீஸை அவர்களுக்கு அறிவித்தேன். அவர்கள், ‘(அப்படியென்றால்) இதுதான் சிறியவருக்கும் பெரியவருக்கும் இடையே (வேறுபடுத்திக் காட்டும்) எல்லைக் கோடாகும்’ என்று கூறிவிட்டு, பதினைந்து வயதை அடைந்தவர்களுக்கு (இராணுவப் பணிக்கான ஊதியத் தொகையை) நிர்ணயிக்கும்படியும் அதைவிடக் குறைந்த வயது உடையவர்களைச் சிறுவர்களின் கணக்கில் சேர்த்துவிடும்படியும் தம் ஆளுநர்களுக்குக் கடிதம் எழுதினார்கள்” என்று இதன் அறிவிப்பாளர் நாஃபிஉ (ரஹ்) கூறுகின்றார்.

அப்துல் வஹ்ஹாப் அஸ்ஸகஃபீ (ரஹ்) வழி அறிவிப்பில், “நான் பதினான்கு வயதினனாக இருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னைச் சிறுவனாகக் கருதினார்கள்” என்று இப்னு உமர் (ரலி) கூறியதாக இடம்பெற்றுள்ளது.