அத்தியாயம்: 37, பாடம்: 7, ஹதீஸ் எண்: 3879

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ :‏

لَمَّا تَزَوَّجْتُ قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ أَتَّخَذْتَ أَنْمَاطًا ‏”‏ ‏.‏ قُلْتُ وَأَنَّى لَنَا أَنْمَاطٌ قَالَ ‏”‏ أَمَا إِنَّهَا سَتَكُونُ ‏”‏ ‏.‏ قَالَ جَابِرٌ وَعِنْدَ امْرَأَتِي نَمَطٌ فَأَنَا أَقُولُ نَحِّيهِ عَنِّي ‏.‏ وَتَقُولُ قَدْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ إِنَّهَا سَتَكُونُ ‏”‏‏


وَحَدَّثَنِيهِ مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، حَدَّثَنَا سُفْيَانُ، بِهَذَا الإِسْنَادِ وَزَادَ فَأَدَعُهَا ‏

எனக்கு மணமானபோது என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “படுக்கை விரிப்புகள் அமைத்துவிட்டாயா?” என்று கேட்டார்கள். நான் “எங்களிடம் படுக்கை விரிப்புகள் ஏது?” என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “தெரிந்துகொள்! விரைவில் அவை (உங்களிடம்) இருக்கும்” என்றார்கள்.

என் துணைவியிடம் படுக்கை விரிப்பொன்று இருக்கக் கண்டேன். நான் அவரிடம், “அதை என்னிடமிருந்து அப்புறப்படுத்து” என்று சொல்ல, அதற்கு என் துணைவி, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்), விரைவில் அவை (உங்களிடம்) இருக்கும் என்று சொன்னார்கள் அல்லவா?” என்று கேட்டார்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)


குறிப்பு :

அப்துர்ரஹ்மான் (ரஹ்) வழி அறிவிப்பில், “அவ்வாறாயின், (இருக்கட்டும்) அவற்றை நான் (அப்படியே) விட்டுவிடுகின்றேன்” என்று ஜாபிர் (ரலி) கூறியதாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 37, பாடம்: 7, ஹதீஸ் எண்: 3878

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَعَمْرٌو النَّاقِدُ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، – وَاللَّفْظُ لِعَمْرٍو – قَالَ عَمْرٌو وَقُتَيْبَةُ حَدَّثَنَا وَقَالَ إِسْحَاقُ أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرٍ قَالَ :‏

قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَمَّا تَزَوَّجْتُ ‏”‏ أَتَّخَذْتَ أَنْمَاطًا ‏”‏ ‏.‏ قُلْتُ وَأَنَّى لَنَا أَنْمَاطٌ قَالَ ‏”‏ أَمَا إِنَّهَا سَتَكُونُ ‏”‏

எனக்குத் திருமணமானபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னிடம், “படுக்கை விரிப்புகள் அமைத்துவிட்டாயா?” என்று கேட்டார்கள். நான், “எங்களிடம் படுக்கை விரிப்புகள் ஏது?” என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “தெரிந்துகொள். விரைவில் அவை (உங்களிடம்) இருக்கும்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 37, பாடம்: 6, ஹதீஸ் எண்: 3877

وَحَدَّثَنِي عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ، أَخْبَرَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ :‏

إِنَّمَا كَانَ فِرَاشُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم الَّذِي يَنَامُ عَلَيْهِ أَدَمًا حَشْوُهُ لِيفٌ


وَحَدَّثَنَاهُ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، ح وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، كِلاَهُمَا عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، بِهَذَا الإِسْنَادِ وَقَالاَ ضِجَاعُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ فِي حَدِيثِ أَبِي مُعَاوِيَةَ يَنَامُ عَلَيْهِ ‏.‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) படுத்துறங்கும் விரிப்பு, ஈச்ச நாரால் நிரப்பப் பெற்ற பதனிடப்பட்ட  தோலால் அமைந்திருந்தது.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

இப்னு நுமைர் (ரஹ்) வழி அறிவிப்பில், விரிப்பு என்பதைக் குறிக்க ‘ஃபிராஷ்’ என்பதற்குப் பதிலாக, ‘ளிஜாஉ’ எனும் சொல் இடம்பெற்றுள்ளது. அபூமுஆவியா (ரஹ்) வழி அறிவிப்பில், ‘படுத்துறங்கும் விரிப்பு’ எனும் சொல் இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 37, பாடம்: 6, ஹதீஸ் எண்: 3876

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ قَالَتْ :‏

كَانَ وِسَادَةُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم الَّتِي يَتَّكِئُ عَلَيْهَا مِنْ أَدَمٍ حَشْوُهَا لِيفٌ ‏‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சாய்ந்துகொள்ளும் தலையணை, பதனிடப்பட்ட தோலால் அமைந்திருந்தது. அதனுள் ஈச்ச நார் நிரப்பப்பெற்றிருந்தது.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 37, பாடம்: 6, ஹதீஸ் எண்: 3875

وَحَدَّثَنِي سُرَيْجُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ زَكَرِيَّاءَ بْنِ أَبِي زَائِدَةَ، عَنْ أَبِيهِ، ح وَحَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، حَدَّثَنَا ابْنُ أَبِي زَائِدَةَ، ح وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ زَكَرِيَّاءَ أَخْبَرَنِي أَبِي، عَنْ مُصْعَبِ بْنِ شَيْبَةَ، عَنْ صَفِيَّةَ بِنْتِ شَيْبَةَ، عَنْ عَائِشَةَ قَالَتْ :‏

خَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم ذَاتَ غَدَاةٍ وَعَلَيْهِ مِرْطٌ مُرَحَّلٌ مِنْ شَعَرٍ أَسْوَدَ ‏‏

ஒரு நாள் காலை நபி (ஸல்), கருப்பு முடியாலான கோடுபோட்ட ஆடை அணிந்து வெளியே புறப்பட்டார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 37, பாடம்: 6, ஹதீஸ் எண்: 3874

حَدَّثَنِي عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ، وَمُحَمَّدُ بْنُ حَاتِمٍ، وَيَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، جَمِيعًا عَنِ ابْنِ عُلَيَّةَ، قَالَ ابْنُ حُجْرٍ حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ أَيُّوبَ، عَنْ حُمَيْدِ بْنِ هِلاَلٍ، عَنْ أَبِي بُرْدَةَ قَالَ :‏

أَخْرَجَتْ إِلَيْنَا عَائِشَةُ إِزَارًا وَكِسَاءً مُلَبَّدًا فَقَالَتْ فِي هَذَا قُبِضَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ قَالَ ابْنُ حَاتِمٍ فِي حَدِيثِهِ إِزَارًا غَلِيظًا ‏


وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ أَيُّوبَ، بِهَذَا الإِسْنَادِ مِثْلَهُ وَقَالَ إِزَارًا غَلِيظًا ‏

எங்களிடம் கீழங்கி ஒன்றையும் (இரண்டை ஒன்றாகச் சேர்த்து) ஒட்டப்பட்ட மற்றொரு கெட்டியான ஆடையையும் எடுத்துக்காட்டி, “இவற்றை அணிந்திருந்த நிலையில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உயிர் பிரிந்தது” என்று ஆயிஷா (ரலி) சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அபூபுர்தா (ரலி)


குறிப்பு :

முஹம்மது பின் ஹாத்திம் (ரஹ்) வழி அறிவிப்பிலும் மஅமர் (ரஹ்) வழி அறிவிப்பிலும், “கெட்டியான கீழங்கியொன்றையும்“ என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 37, பாடம்: 6, ஹதீஸ் எண்: 3873

حَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ، حَدَّثَنَا حُمَيْدٌ، عَنْ أَبِي بُرْدَةَ قَالَ :‏

دَخَلْتُ عَلَى عَائِشَةَ فَأَخْرَجَتْ إِلَيْنَا إِزَارًا غَلِيظًا مِمَّا يُصْنَعُ بِالْيَمَنِ وَكِسَاءً مِنَ الَّتِي يُسَمُّونَهَا الْمُلَبَّدَةَ – قَالَ – فَأَقْسَمَتْ بِاللَّهِ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قُبِضَ فِي هَذَيْنِ الثَّوْبَيْنِ ‏

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றபோது, யமன் நாட்டில் தயாரிக்கப்பட்ட கெட்டியான கீழங்கி ஒன்றையும் ‘அல்முலப்பதா’ (ஒட்டாடை) எனச் சொல்லப்படும் மற்றோர் ஆடையையும் அவர்கள் எடுத்துக்காட்டி, “அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த இரண்டு ஆடைகளையும் அணிந்திருந்த நிலையில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உயிர் பிரிந்தது” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அபூபுர்தா (ரலி)

அத்தியாயம்: 37, பாடம்: 5, ஹதீஸ் எண்: 3872

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ قَالَ :‏

كَانَ أَحَبَّ الثِّيَابِ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم الْحِبَرَةُ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மிகவும் பிரியமானதாக யமன் நாட்டு(ப் பருத்தி)ச் சால்வையே இருந்தது.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 37, பாடம்: 5, ஹதீஸ் எண்: 3871

حَدَّثَنَا هَدَّابُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ قَالَ :‏

قُلْنَا لأَنَسِ بْنِ مَالِكٍ أَىُّ اللِّبَاسِ كَانَ أَحَبَّ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَوْ أَعْجَبَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ الْحِبَرَةُ

நாங்கள் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மிகவும் விருப்பமானதாக இருந்த ஆடை எது?” என்று கேட்டோம். “யமன் நாட்டு(ப் பருத்தியாலான) சால்வை“ என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) வழியாக கத்தாதா (ரஹ்)

அத்தியாயம்: 37, பாடம்: 4, ஹதீஸ் எண்: 3870

حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ حُنَيْنٍ عَنْ أَبِيهِ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ قَالَ :‏

نَهَانِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ التَّخَتُّمِ بِالذَّهَبِ وَعَنْ لِبَاسِ الْقَسِّيِّ وَعَنِ الْقِرَاءَةِ فِي الرُّكُوعِ وَالسُّجُودِ وَعَنْ لِبَاسِ الْمُعَصْفَرِ

என்னைத் தங்க மோதிரம் அணிய வேண்டாமென்றும், பட்டு கலந்த (எகிப்திய) பஞ்சாடை அணிய வேண்டாமென்றும், ருகூஉவிலும் ஸஜ்தாவிலும் குர்ஆனை ஓத வேண்டாமென்றும், செம்மஞ்சள் நிறச் சாயமிடப்பட்ட ஆடையை அணிய வேண்டாமென்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தடை செய்தார்கள்.

அறிவிப்பளர் : அலீ பின் அபீதாலிப் (ரலி)