அத்தியாயம்: 39, பாடம்: 24, ஹதீஸ் எண்: 4071

حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالاَ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي نَافِعُ بْنُ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ عُثْمَانَ بْنِ أَبِي الْعَاصِ الثَّقَفِيِّ :‏

أَنَّهُ شَكَا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَجَعًا يَجِدُهُ فِي جَسَدِهِ مُنْذُ أَسْلَمَ ‏.‏ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ ضَعْ يَدَكَ عَلَى الَّذِي تَأَلَّمَ مِنْ جَسَدِكَ وَقُلْ بِاسْمِ اللَّهِ ‏.‏ ثَلاَثًا ‏.‏ وَقُلْ سَبْعَ مَرَّاتٍ أَعُوذُ بِاللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ”‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்,  தாம் இஸ்லாத்தைத் தழுவியது முதல் தமது உடலில் வலி ஏற்பட்டுள்ளதாக உஸ்மான் பின் அபில்ஆஸ் அஸ்ஸகஃபீ (ரலி) முறையிட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீர் உமது உடலில் வலியுள்ள இடத்தில் கையை வைத்து, பிஸ்மில்லாஹ் என மூன்று தடவை கூறிவிட்டு, ஏழு தடவை, ‘அவூது பில்லாஹி வ குத்ரத்திஹி மின் ஷர்ரி மா அஜிது வ உஹாதிரு’ என்று சொல்வீராக” என்றார்கள்.

(பொருள்: நான் அல்லாஹ்விடம் அவனது ஆற்றலை முன்வைத்து, நான் (தற்போது) உணர்கின்ற தீமையிலிருந்தும் (எதிர்காலத்தில் ஏற்பட்டுவிடக் கூடாது என) நான் அஞ்சுகின்ற தீமையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்.)

அறிவிப்பாளர் : உஸ்மான் பின் அபில்ஆஸ் (ரலி) வழியாக நாஃபிஉ பின் ஜுபைர் பின் முத்இம் (ரஹ்)

அத்தியாயம்: 39, பாடம்: 21, ஹதீஸ் எண்: 4060

وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا سُفْيَانُ عَنْ مَعْبَدِ بْنِ خَالِدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَدَّادٍ عَنْ عَائِشَةَ، قَالَتْ :‏ ‏

كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَأْمُرُنِي أَنْ أَسْتَرْقِيَ مِنَ الْعَيْنِ

கண்ணேறுக்காக ஓதிப்பார்த்துக்கொள்ளும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எனக்குக் கட்டளையிடுபவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 39, பாடம்: 23, ஹதீஸ் எண்: 4070

وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا هِشَامُ بْنُ حَسَّانَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَخِيهِ، مَعْبَدِ بْنِ سِيرِينَ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ :‏ ‏

نَزَلْنَا مَنْزِلاً فَأَتَتْنَا امْرَأَةٌ فَقَالَتْ إِنَّ سَيِّدَ الْحَىِّ سَلِيمٌ لُدِغَ فَهَلْ فِيكُمْ مِنْ رَاقٍ فَقَامَ مَعَهَا رَجُلٌ مِنَّا مَا كُنَّا نَظُنُّهُ يُحْسِنُ رُقْيَةً فَرَقَاهُ بِفَاتِحَةِ الْكِتَابِ فَبَرَأَ فَأَعْطَوْهُ غَنَمًا وَسَقَوْنَا لَبَنًا فَقُلْنَا أَكُنْتَ تُحْسِنُ رُقْيَةً فَقَالَ مَا رَقَيْتُهُ إِلاَّ بِفَاتِحَةِ الْكِتَابِ ‏.‏ قَالَ فَقُلْتُ لاَ تُحَرِّكُوهَا حَتَّى نَأْتِيَ النَّبِيَّ صلى الله عليه وسلم ‏.‏ فَأَتَيْنَا النَّبِيَّ صلى الله عليه وسلم فَذَكَرْنَا ذَلِكَ لَهُ ‏.‏ فَقَالَ ‏ “‏ مَا كَانَ يُدْرِيهِ أَنَّهَا رُقْيَةٌ اقْسِمُوا وَاضْرِبُوا لِي بِسَهْمٍ مَعَكُمْ” ‏


وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، حَدَّثَنَا هِشَامٌ، بِهَذَا الإِسْنَادِ ‏.‏ نَحْوَهُ غَيْرَ أَنَّهُ قَالَ فَقَامَ مَعَهَا رَجُلٌ مِنَّا مَا كُنَّا نَأْبِنُهُ بِرُقْيَةٍ

நாங்கள் (ஒரு பயணத்தில்) ஓரிடத்தில் இறங்கித் தங்கினோம். அப்போது ஒரு பெண் எங்களிடம் வந்து, “எங்கள் கூட்டத் தலைவரைத் தேள் கொட்டிவிட்டது. அவர் உடல் நலிவுற்றுள்ளார்.  ஓதிப் பார்ப்பவர் எவரேனும் உங்களிடையே இருக்கின்றாரா?” என்று கேட்டாள். அவளுடன் எங்களில் ஒருவர் சென்றார். அவருக்கு ஓதிப்பார்க்கத் தெரியும் என்று நாங்கள் நினைத்ததில்லை. அவர் ‘அல்ஃபாத்திஹா’ அத்தியாயத்தைக் கொண்டு ஓதிப்பார்த்ததில், அந்தத் தலைவர் குணமடைந்துவிட்டார். ஆகவே, அவருக்குச் சில ஆடுகளை  வழங்கியதோடு எங்களுக்குப் பருகுவதற்குப் பாலும் கொடுத்தனர்.

(அந்த நண்பர் திரும்பி வந்தபோது) அவரிடம், “உமக்கு நன்றாக ஓதிப்பார்க்கத் தெரியுமா?” என்று கேட்டோம். அவர், “அவருக்கு நான் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தைத்தான் ஓதிப் பார்த்தேன்” என்று சொன்னார். அவரிடம் நான், “நபி (ஸல்) அவர்களிடம் செல்லும்வரை (ஆடுகளை) எதுவும் செய்துவிடாதீர்கள்” என்று சொன்னேன்.

நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்றபோது, அதைப் பற்றி அவர்களிடம் சொன்னோம். அப்போது அவர்கள் “அது, ஓதிப்பார்க்கத் தக்க அத்தியாயம் என்று உமக்கு எப்படித் தெரியும்? அந்த ஆடுகளைப் பங்கிட்டுக்கொள்ளுங்கள்; அதில் ஒரு பங்கை எனக்கும் ஒதுக்குங்கள்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல் குத்ரீ (ரலி)


குறிப்பு :

ஹிஷாம் (ரஹ்) வழி அறிவிப்பில், “அவளுடன் எங்களில் ஒருவர் எழுந்து சென்றார். அவருக்கு ஓதிப்பார்க்கத் தெரியும் என்று நாங்கள் நினைத்ததுகூட இல்லை” என இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 39, பாடம்: 23, ஹதீஸ் எண்: 4069

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ، أَخْبَرَنَا هُشَيْمٌ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ أَبِي الْمُتَوَكِّلِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ :‏ ‏

أَنَّ نَاسًا مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم كَانُوا فى سَفَرٍ فَمَرُّوا بِحَىٍّ مِنْ أَحْيَاءِ الْعَرَبِ فَاسْتَضَافُوهُمْ فَلَمْ يُضِيفُوهُمْ ‏.‏ فَقَالُوا لَهُمْ هَلْ فِيكُمْ رَاقٍ فَإِنَّ سَيِّدَ الْحَىِّ لَدِيغٌ أَوْ مُصَابٌ ‏.‏ فَقَالَ رَجُلٌ مِنْهُمْ نَعَمْ فَأَتَاهُ فَرَقَاهُ بِفَاتِحَةِ الْكِتَابِ فَبَرَأَ الرَّجُلُ فَأُعْطِيَ قَطِيعًا مِنْ غَنَمٍ فَأَبَى أَنْ يَقْبَلَهَا ‏.‏ وَقَالَ حَتَّى أَذْكُرَ ذَلِكَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم ‏.‏ فَأَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَذَكَرَ ذَلِكَ لَهُ ‏.‏ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ وَاللَّهِ مَا رَقَيْتُ إِلاَّ بِفَاتِحَةِ الْكِتَابِ ‏.‏ فَتَبَسَّمَ وَقَالَ ‏”‏ وَمَا أَدْرَاكَ أَنَّهَا رُقْيَةٌ ‏” ثُمَّ قَالَ ‏”‏خُذُوا مِنْهُمْ وَاضْرِبُوا لِي بِسَهْمٍ مَعَكُمْ” ‏


حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، وَأَبُو بَكْرِ بْنُ نَافِعٍ كِلاَهُمَا عَنْ غُنْدَرٍ، مُحَمَّدِ بْنِ جَعْفَرٍ عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي بِشْرٍ، بِهَذَا الإِسْنَادِ وَقَالَ فِي الْحَدِيثِ فَجَعَلَ يَقْرَأُ أُمَّ الْقُرْآنِ وَيَجْمَعُ بُزَاقَهُ وَيَتْفُلُ فَبَرَأَ الرَّجُلُ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்களில் சிலர் ஒரு பயணத்தின் போது ஓர் அரபுக் குலத்தாரைக் கடந்துசென்றார்கள். அவர்கள் அக்குலத்தாரிடம் (பசிக்கு) விருந்தளிக்குமாறு கோரியும் அவர்கள் விருந்தளிக்க முன்வரவில்லை. (அக்குலத்தாரின் தலைவனுக்குத் தேள் கொட்டிவிட்டது). அப்போது அவர்கள் (நபித்தோழர்களிடம்) “உங்களிடையே ஓதிப்பார்ப்பவர் யாராவது இருக்கின்றாரா? ஏனெனில், (எங்கள்) குலத் தலைவரைத் தேள் கொட்டிவிட்டது” என்று கூறினர்.

அப்போது நபித்தோழர்களில் ஒருவர், “ஆம்“ என்று கூறிவிட்டு, அவரிடம் சென்று, ‘அல்ஃபாத்திஹா’ அத்தியாயத்தினால் ஓதிப்பார்த்தார். உடனே அவர் குணமடைந்தார். (ஓதிப்பார்த்த நபித்தோழருக்கு) ஓர் ஆட்டு மந்தை (சன்மானமாகக்) கொடுக்கப்பட்டது. அத்தோழர் அதை ஏற்க மறுத்துவிட்டார். “நபி (ஸல்) அவர்களிடம் இது பற்றிக் கூ(றி அனுமதிபெ)றாத வரை (நான் ஏற்கமாட்டேன்)” என்று கூறிவிட்டார்.

அவ்வாறே அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தெரிவித்தார். “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! அல்ஃபாத்திஹா மூலமாகத்தான் நான் ஓதிப்பார்த்தேன்” என்று கூறினார்.

அதைக் கேட்டு நபி (ஸல்) புன்னகைத்தார்கள். மேலும், “அது ஓதிப்பார்க்கத் தகுந்தது என்பது உமக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டு விட்டு, “அவர்களிடமிருந்து அ(ந்தச் சன் மானத்)தைப் பெற்றுக்கொள்ளுங்கள். உங்களுடன் எனக்கும் அதில் ஒரு பங்கு கொடுங்கள்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)


குறிப்பு :

ஷுஅபா (ரஹ்) வழி அறிவிப்பில்,  “அந்த நபித்தோழர் ‘குர்ஆனின் அன்னை’ எனப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை ஊதித் தமது எச்சிலைக் கூட்டி (தேள் கொட்டிய இடத்தில்) உமிழ்ந்தார். உடனே அவர் வலி நீங்கி குணமடைந்தார்” என்று அபூபிஷ்ரு (ரஹ்) கூறியதாக இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 39, பாடம்: 22, ஹதீஸ் எண்: 4068

حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرٍ عَنْ أَبِيهِ، عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ الأَشْجَعِيِّ قَالَ :‏ ‏

كُنَّا نَرْقِي فِي الْجَاهِلِيَّةِ فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ كَيْفَ تَرَى فِي ذَلِكَ فَقَالَ ‏ “‏ اعْرِضُوا عَلَىَّ رُقَاكُمْ لاَ بَأْسَ بِالرُّقَى مَا لَمْ يَكُنْ فِيهِ شِرْكٌ ‏”‏ ‏

நாங்கள் அறியாமைக் காலத்தில் ஓதிப் பார்த்துவந்தோம். எனவே (நபியவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! இது குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?” என்று கேட்டோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (எங்களிடம்), “நீங்கள் ஓதிப்பார்க்கும் சொற்களை என்னிடம் சொல்லிக்காட்டுங்கள். (அதில் இறைவனுக்கு) இணை கற்பிக்கும் சொற்கள் இல்லையானால் ஓதிப்பார்த்தலில் எந்தக் குற்றமும் இல்லை” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அவ்ஃபு பின் மாலிக் அல்அஷ்ஜஈ (ரலி)

அத்தியாயம்: 39, பாடம்: 21, ஹதீஸ் எண்: 4067

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ قَالَ :‏ ‏

نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الرُّقَى فَجَاءَ آلُ عَمْرِو بْنِ حَزْمٍ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ كَانَتْ عِنْدَنَا رُقْيَةٌ نَرْقِي بِهَا مِنَ الْعَقْرَبِ وَإِنَّكَ نَهَيْتَ عَنِ الرُّقَى ‏.‏ قَالَ فَعَرَضُوهَا عَلَيْهِ ‏.‏ فَقَالَ ‏ “‏ مَا أَرَى بَأْسًا مَنِ اسْتَطَاعَ مِنْكُمْ أَنْ يَنْفَعَ أَخَاهُ فَلْيَنْفَعْهُ ‏”‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஓதிப்பார்க்க வேண்டாமெனத் தடை விதித்திருந்தார்கள். அப்போது அம்ரு பின் ஹஸ்மு குடும்பத்தார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! தேள்கடிக்காக ஓதிப்பார்க்கும் வழக்கம் எங்களிடம் இருந்து வந்தது. (ஆனால்,) நீங்களோ ஓதிப்பார்க்க வேண்டாமெனத் தடை விதித்துவிட்டீர்கள்!” என்று கூறினர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), அ(வர்கள் ஓதிப்பார்த்துவ)ந்த வாசகத்தைக் கூறுமாறு கேட்டார்கள். அவர்கள் அ(ந்த வாசகத்)தைக் கூறியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நான் (இதில்) குறையெதையும் காணவில்லை. உங்களில் ஒருவரால் தம் சகோதரருக்குப் பயனளிக்க முடியுமானால் பயனளிக்கட்டும்!” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)

அத்தியாயம்: 39, பாடம்: 21, ஹதீஸ் எண்: 4066

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو سَعِيدٍ الأَشَجُّ قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ قَالَ :‏ ‏

كَانَ لِي خَالٌ يَرْقِي مِنَ الْعَقْرَبِ فَنَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الرُّقَى – قَالَ – فَأَتَاهُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّكَ نَهَيْتَ عَنِ الرُّقَى وَأَنَا أَرْقِي مِنَ الْعَقْرَبِ ‏.‏ فَقَالَ ‏ “‏ مَنِ اسْتَطَاعَ مِنْكُمْ أَنْ يَنْفَعَ أَخَاهُ فَلْيَفْعَلْ ” ‏


وَحَدَّثَنَاهُ عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، بِهَذَا الإِسْنَادِ مِثْلَهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஓதிப்பார்ப்பதற்குத் தடை விதித்திருந்தார்கள்.  என் தாய் மாமன் ஒருவர் தேள்கடிக்கு ஓதிப்பார்ப்பவராக இருந்தார். எனவே, அவர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் ஓதிப்பார்க்க வேண்டாமெனத் தடை செய்திருக்கின்றீர்கள். நான் தேள்கடிக்காக ஓதிப்பார்ப்பவனாக இருக்கின்றேன்” என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உங்களில் ஒருவரால் தம் சகோதரருக்குப் பயனளிக்க முடிந்தால் அவ்வாறே செய்யட்டும்!” என்று அனுமதி அளித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)

அத்தியாயம்: 39, பாடம்: 21, ஹதீஸ் எண்: 4065

وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ :‏ ‏

أَرْخَصَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي رُقْيَةِ الْحَيَّةِ لِبَنِي عَمْرٍو ‏


قَالَ أَبُو الزُّبَيْرِ وَسَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ لَدَغَتْ رَجُلاً مِنَّا عَقْرَبٌ وَنَحْنُ جُلُوسٌ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ أَرْقِي قَالَ ‏ “‏ مَنِ اسْتَطَاعَ مِنْكُمْ أَنْ يَنْفَعَ أَخَاهُ فَلْيَفْعَلْ ‏”

وَحَدَّثَنِي سَعِيدُ بْنُ يَحْيَى الأُمَوِيُّ حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، بِهَذَا الإِسْنَادِ ‏.‏ مِثْلَهُ غَيْرَ أَنَّهُ قَالَ فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ أَرْقِيهِ يَا رَسُولَ اللَّهِ وَلَمْ يَقُلْ أَرْقِي ‏

நபி (ஸல்) பாம்புக்கடிக்கு ஓதிப் பார்ப்பதற்கு ‘பனூ அம்ரு’ குலத்தாருக்கு அனுமதியளித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)


குறிப்புகள் :

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தபோது எங்களில் ஒருவரைத் தேள் கொட்டிவிட்டது. அப்போது ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! நான் ஓதிப் பார்க்கட்டுமா?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உங்களில் ஒருவர் தம் சகோதரருக்குப் பயனளிக்க முடிந்தால் அவ்வாறே செய்யட்டும்” என்றார்கள் என ஜாபிர் (ரலி) கூறியதை நான் கேட்டேன் என்பதாக இதன் அறிவிப்பாளரான அபுஸ்ஸுபைர் (ரஹ்) கூறுகின்றார்.

ஸயீத் (ரஹ்) வழி அறிவிப்பில், “மக்களில் ஒருவர், அல்லாஹ்வின் தூதரே! நான் ஓதிப்பார்க்கட்டுமா? என்று கேட்கவில்லை. மாறாக, அவருக்கு நான் ஓதிப்பார்க்கட்டுமா என்று கேட்டார்” என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 39, பாடம்: 21, ஹதீஸ் எண்: 4064

حَدَّثَنِي عُقْبَةُ بْنُ مُكْرَمٍ الْعَمِّيُّ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ وَأَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ :‏ ‏

رَخَّصَ النَّبِيُّ صلى الله عليه وسلم لآلِ حَزْمٍ فِي رُقْيَةِ الْحَيَّةِ وَقَالَ لأَسْمَاءَ بِنْتِ عُمَيْسٍ ‏”‏ مَا لِي أَرَى أَجْسَامَ بَنِي أَخِي ضَارِعَةً تُصِيبُهُمُ الْحَاجَةُ ‏” قَالَتْ لاَ وَلَكِنِ الْعَيْنُ تُسْرِعُ إِلَيْهِمْ ‏.‏ قَالَ ‏”‏ ارْقِيهِمْ ‏” قَالَتْ فَعَرَضْتُ عَلَيْهِ فَقَالَ ‏”‏ ارْقِيهِمْ ” ‏

நபி (ஸல்) பாம்புக்கடிக்கு ஓதிப் பார்த்துக்கொள்ள, ‘ஹஸ்மு’ குடும்பத்தாருக்கு அனுமதியளித்தார்கள். மேலும், அஸ்மா பின்த்தி உமைஸ் (ரலி) அவர்களிடம், “என் சகோதரர் (ஜஅஃபரின்) மக்களுடைய உடல்கள் மெலிந்திருக்கக் காண்கின்றேனே ஏன்? அவர்கள் வறுமையில் வாடுகின்றனரா?” என்று கேட்டார்கள்.

அதற்கு அஸ்மா (ரலி), “இல்லை; கண்ணேறு அவர்களை வேகமாகப் பாதிக்கிறது” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்), “அவர்களுக்கு ஓதிப்பார்ப்பீராக!” என்று கூறினார்கள். நான் அவர்களிடம் (ஒரு துஆவை) எடுத்துரைத்தேன். நபி (ஸல்) “(அதையே) அவர்களுக்கு ஓதிப் பார்ப்பீராக” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 39, பாடம்: 21, ஹதீஸ் எண்: 4063

حَدَّثَنِي أَبُو الرَّبِيعِ، سُلَيْمَانُ بْنُ دَاوُدَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَرْبٍ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْوَلِيدِ، الزُّبَيْدِيُّ عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ زَيْنَبَ بِنْتِ أُمِّ سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم :‏ ‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لِجَارِيَةٍ فِي بَيْتِ أُمِّ سَلَمَةَ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم رَأَى بِوَجْهِهَا سَفْعَةً فَقَالَ ‏ “‏ بِهَا نَظْرَةٌ فَاسْتَرْقُوا لَهَا ‏” يَعْنِي بِوَجْهِهَا صُفْرَةً ‏

நபி (ஸல்) என் வீட்டிலிருந்த ஒரு சிறுமியின் முகத்தில் மஞ்சள் நிறத்தில் படர்தாமரை இருப்பதைப் பார்த்துவிட்டு, “இவளுக்குக் கண்ணேறு பட்டிருக்கிறது. எனவே, இவளுக்கு ஓதிப்பாருங்கள்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை உம்மு ஸலமா (ரலி)