அத்தியாயம்: 43, பாடம்: 40, ஹதீஸ் எண்: 4350

حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ أَنَّ أَبَا يُونُسَ، سُلَيْمًا مَوْلَى أَبِي هُرَيْرَةَ حَدَّثَهُ عَنْ أَبِي هُرَيْرَةَ :‏

عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ ‏ “‏ كُلُّ بَنِي آدَمَ يَمَسُّهُ الشَّيْطَانُ يَوْمَ وَلَدَتْهُ أُمُّهُ إِلاَّ مَرْيَمَ وَابْنَهَا ‏”‏ ‏‏

“ஆதமின் பிள்ளை (மனிதன்) ஒவ்வொருவரையும், தாய் வயிற்றிலிருந்து அது பிறக்கும் நாளில் ஷைத்தான் தீண்டுகின்றான் – மர்யமையும் அவருடைய புதல்வரையும் தவிர” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 43, பாடம்: 40, ஹதீஸ் எண்: 4349

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏”‏ مَا مِنْ مَوْلُودٍ يُولَدُ إِلاَّ نَخَسَهُ الشَّيْطَانُ فَيَسْتَهِلُّ صَارِخًا مِنْ نَخْسَةِ الشَّيْطَانِ إِلاَّ ابْنَ مَرْيَمَ وَأُمَّهُ ‏”‏ ‏.‏ ثُمَّ قَالَ أَبُو هُرَيْرَةَ اقْرَءُوا إِنْ شِئْتُمْ ‏{‏ وَإِنِّي أُعِيذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ‏}‏


وَحَدَّثَنِيهِ مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، ح وَحَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، جَمِيعًا عَنِ الزُّهْرِيِّ، بِهَذَا الإِسْنَادِ وَقَالاَ ‏”‏ يَمَسُّهُ حِينَ يُولَدُ فَيَسْتَهِلُّ صَارِخًا مِنْ مَسَّةِ الشَّيْطَانِ إِيَّاهُ ‏”‏ ‏.‏ وَفِي حَدِيثِ شُعَيْبٍ ‏”‏ مِنْ مَسِّ الشَّيْطَانِ ‏”‏

“பிறக்கும் குழந்தை எதுவாயினும் அதை ஷைத்தான் தீண்டாமல் இருப்பதில்லை. ஷைத்தான் தீண்டுவதால் குழந்தை வீறிட்டழுகிறது – மர்யமின் மகனையும் அவருடைய தாயார் மர்யமையும் தவிர” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) சொன்னார்கள்.

பிறகு அபூஹுரைரா (ரலி), “வேண்டுமென்றால், இந்தக் குழந்தை(மர்யத்தை)யையும் இதன் வழித்தோன்றல்களையும் விரட்டப்பட்ட ஷைத்தானிடமிருந்து பாதுகாக்குமாறு உன்னிடம் நான் கோருகிறேன் (மர்யத்தின் தாய் இறைவனை வேண்டினார்) எனும் (3:36) இறைவசனத்தை ஓதிக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக ஸாயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்)


குறிப்பு :

ஷுஐப் (ரஹ்) வழி அறிவிப்பில், “குழந்தை பிறக்கும்போதே ஷைத்தான் அதைத் தீண்டுவதால் குழந்தை வீறிட்டழுகிறது” என்று (சிறு வித்தியாசத்துடன்) இடம்பெற்றுள்ளது.

மேலும், “மிம் மஸ்ஸத்திஷ் ஷைத்தான்” என்பதற்குப் பகரமாக “மிம் மஸ்ஸிஷ் ஷைத்தான்“ என்று (சிறிய மாற்றத்துடன்) காணப்படுகிறது.

அத்தியாயம்: 43, பாடம்: 40, ஹதீஸ் எண்: 4348

وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ قَالَ هَذَا مَا حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ:‏

عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَذَكَرَ أَحَادِيثَ مِنْهَا وَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ أَنَا أَوْلَى النَّاسِ بِعِيسَى ابْنِ مَرْيَمَ فِي الأُولَى وَالآخِرَةِ ‏”‏ ‏.‏ قَالُوا كَيْفَ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏”‏ الأَنْبِيَاءُ إِخْوَةٌ مِنْ عَلاَّتٍ وَأُمَّهَاتُهُمْ شَتَّى وَدِينُهُمْ وَاحِدٌ فَلَيْسَ بَيْنَنَا نَبِيٌّ ‏”‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நான் இம்மையிலும் மறுமையிலும் மர்யமின் மகன் ஈஸா அவர்களுக்கு மக்களிலேயே மிகவும் நெருக்கமானவன் ஆவேன்” என்று கூறினார்கள்.

அப்போது “அது எப்படி, அல்லாஹ்வின் தூதரே?” என்று மக்கள் கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நபிமார்களின் அன்னையர்கள் (வேறுபட்ட) பலராய் இருந்தாலும் அவர்கள் அனைவரும் தந்தைவழிச் சகோதரர்கள் ஆவர். அவர்கள் அனைவரது மார்க்கமும் ஒன்றே. எங்கள் (இருவர்) இடையே எந்த இறைத்தூதரும் இல்லை” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்)


குறிப்பு :

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) எங்களுக்கு அறிவித்த ஹதீஸ்களுள் இதுவும் ஒன்றாகும்” என்று அறிவிப்பாளர் ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) குறிப்பிடுகின்றார்.

அத்தியாயம்: 43, பாடம்: 40, ஹதீஸ் எண்: 4347

وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، عُمَرُ بْنُ سَعْدٍ عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ أَنَا أَوْلَى النَّاسِ بِعِيسَى الأَنْبِيَاءُ أَبْنَاءُ عَلاَّتٍ وَلَيْسَ بَيْنِي وَبَيْنَ عِيسَى نَبِيٌّ ‏”‏

“நான் ஈஸா (அலை) அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவன் ஆவேன். நபிமார்கள் அனைவரும் தந்தைவழிச் சகோதரர்கள் ஆவர். எனக்கும் ஈஸா அவர்களுக்குமிடையே வேறெந்த இறைத்தூதரும் இல்லை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 43, பாடம்: 40, ஹதீஸ் எண்: 4346

حَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ أَنَّأَخْبَرَهُ أَنَّ أَبَا هُرَيْرَةَ قَالَ :‏

سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ “‏ أَنَا أَوْلَى النَّاسِ بِابْنِ مَرْيَمَ الأَنْبِيَاءُ أَوْلاَدُ عَلاَّتٍ وَلَيْسَ بَيْنِي وَبَيْنَهُ نَبِيٌّ ‏”‏

“நான் மர்யமின் மகனுக்கு மிகவும் நெருக்கமானவன் ஆவேன். நபிமார்கள் அனைவரும் தந்தைவழிச் சகோதரர்கள் ஆவர். எனக்கும் ஈஸா அவர்களுக்குமிடையே வேறு எந்த இறைத்தூதரும் இல்லை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 43, பாடம்: 39, ஹதீஸ் எண்: 4345

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ قَالَ هَذَا مَا حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ:‏

عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ فَذَكَرَ أَحَادِيثَ مِنْهَا وَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ فِي يَدِهِ لَيَأْتِيَنَّ عَلَى أَحَدِكُمْ يَوْمٌ وَلاَ يَرَانِي ثُمَّ لأَنْ يَرَانِي أَحَبُّ إِلَيْهِ مِنْ أَهْلِهِ وَمَالِهِ مَعَهُمْ ‏”‏ ‏‏

قَالَ أَبُو إِسْحَاقَ الْمَعْنَى فِيهِ عِنْدِي لأَنْ يَرَانِي مَعَهُمْ أَحَبُّ إِلَيْهِ مِنْ أَهْلِهِ وَمَالِهِ وَهُوَ عِنْدِي مُقَدَّمٌ وَمُؤَخَّرٌ

“முஹம்மதின் உயிர் கையிலுள்ளன்மீது ஆணையாக! நிச்சயமாக என்னை நீங்கள் காண முடியாத ஒரு நாள் உங்களிடம் வரும். (நான் இறந்துபோயிருப்பேன்). உங்களில் ஒருவருக்கு என்னை (அப்போது) பார்ப்ப(தற்கு வாய்ப்புக் கிடைப்ப)து, அவருடைய குடும்பத்தாரையும் செல்வங்கள் அனைத்தையும்விட அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருக்கும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்)


குறிப்புகள் :

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) எங்களுக்கு அறிவித்த ஹதீஸ்களுள் இதுவும் ஒன்றாகும்” என்று அறிவிப்பாளர் ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) குறிப்பிடுகின்றார்.

“என்னைப் பொருத்தவரை இந்த ஹதீஸின் பொருளாவது: அவர்களுடன் என்னையும் அவர் பார்ப்பதானது, அவருடைய குடும்பத்தாரையும் செல்வங்களையும்விட அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருக்கும். இந்த ஹதீஸின் வாசகங்கள், முன் பின்னாக இடம்பெற்றுள்ளது என்பதே என் கருத்தாகும்” என்று அபூஇஸ்ஹாக் (ரஹ்) கூறுகின்றார்.

அத்தியாயம்: 43, பாடம்: 38, ஹதீஸ் எண்: 4344

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَمْرٌو النَّاقِدُ، كِلاَهُمَا عَنِ الأَسْوَدِ بْنِ عَامِرٍ، – قَالَ أَبُو بَكْرٍ حَدَّثَنَا أَسْوَدُ بْنُ عَامِرٍ، – حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، وَعَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ :‏

أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم مَرَّ بِقَوْمٍ يُلَقِّحُونَ فَقَالَ ‏”‏ لَوْ لَمْ تَفْعَلُوا لَصَلُحَ ‏”‏ ‏.‏ قَالَ فَخَرَجَ شِيصًا فَمَرَّ بِهِمْ فَقَالَ ‏”‏ مَا لِنَخْلِكُمْ ‏”‏ ‏.‏ قَالُوا قُلْتَ كَذَا وَكَذَا قَالَ ‏”‏ أَنْتُمْ أَعْلَمُ بِأَمْرِ دُنْيَاكُمْ ‏”‏ ‏

நபி (ஸல்) பேரீச்ச மரங்களுக்கு மகரந்தச் சேர்க்கை செய்துகொண்டிருந்த மக்களைக் கடந்து சென்றபோது, “நீங்கள் (இவ்வாறு) செய்யாமலிருந்தால் நன்றாயிருக்குமே!” என்று சொன்னார்கள். ஆகவே, (அவர்கள் மகரந்தச் சேர்க்கை செய்வதை விட்டுவிட்டனர். அதனால் அந்த மகசூலில்) நன்றாகத் தேறாத கனிகளே காய்த்தவேளை, அவர்களைக் கடந்து நபி (ஸல்) சென்றார்கள். அப்போது, “உங்கள் (பேரீச்ச) மரங்களுக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். மக்கள், “நீங்கள் இப்படி இப்படிச் சொன்னீர்கள். (அதனால் நாங்கள் மகரந்தச் சேர்க்கை செய்வதை விட்டுவிட்டோம். அதனால் இந்த நிலை ஏற்பட்டுவிட்டது)” என்று கூறினர்.

நபி (ஸல்), “உங்கள் உலக விவகாரங்கள் பற்றி (என்னைவிட) நீங்களே நன்கு அறிந்தவர்கள்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 43, பாடம்: 38, ஹதீஸ் எண்: 4343

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الرُّومِيِّ الْيَمَامِيُّ، وَعَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ الْعَنْبَرِيُّ، وَأَحْمَدُ بْنُ جَعْفَرٍ الْمَعْقِرِيُّ قَالُوا حَدَّثَنَا النَّضْرُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عِكْرِمَةُ، – وَهُوَ ابْنُ عَمَّارٍ – حَدَّثَنَا أَبُو النَّجَاشِيِّ، حَدَّثَنِي رَافِعُ بْنُ خَدِيجٍ قَالَ :‏

قَدِمَ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم الْمَدِينَةَ وَهُمْ يَأْبُرُونَ النَّخْلَ يَقُولُونَ يُلَقِّحُونَ النَّخْلَ فَقَالَ ‏”‏ مَا تَصْنَعُونَ ؟‏”‏ ‏.‏ قَالُوا كُنَّا نَصْنَعُهُ قَالَ ‏”‏ لَعَلَّكُمْ لَوْ لَمْ تَفْعَلُوا كَانَ خَيْرًا ‏”‏ ‏.‏ فَتَرَكُوهُ فَنَفَضَتْ أَوْ فَنَقَصَتْ – قَالَ – فَذَكَرُوا ذَلِكَ لَهُ فَقَالَ ‏”‏ إِنَّمَا أَنَا بَشَرٌ إِذَا أَمَرْتُكُمْ بِشَىْءٍ مِنْ دِينِكُمْ فَخُذُوا بِهِ وَإِذَا أَمَرْتُكُمْ بِشَىْءٍ مِنْ رَأْىٍ فَإِنَّمَا أَنَا بَشَرٌ ‏”‏ 


قَالَ عِكْرِمَةُ أَوْ نَحْوَ هَذَا ‏.‏ قَالَ الْمَعْقِرِيُّ فَنَفَضَتْ ‏.‏ وَلَمْ يَشُكَّ ‏

நபி (ஸல்) மதீனாவுக்கு வந்தபோது மதீனாவாசிகள் பேரீச்ச மரங்களை மகரந்தச் சேர்க்கை செய்துகொண்டிருந்தனர். தாங்கள் பேரீச்ச மரங்களை, சூல் கொள்ள (அவ்வாறு) செய்வதாக அவர்கள் கூறினர்.

நபி (ஸல்), “நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கின்றீர்கள்?” என்று கேட்டார்கள். மக்கள் “இவ்வாறுதான் (வழக்கமாக) நாங்கள் செய்துவருகின்றோம்” என்று கூறினர். நபி (ஸல்), “நீங்கள் இவ்வாறு செய்யாதிருந்தால் நன்றாயிருக்கக் கூடும்” என்று சொன்னார்கள். ஆகவே, அவர்கள் அ(வ்வாறு செய்வ)தை விட்டுவிட்டனர். அந்த வருடத்தில் கனிகள் (வெம்பி) உதிர்ந்துவிட்டன அல்லது குறைந்துவிட்டன.

அதைப் பற்றி மக்கள் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது அவர்கள், “நானும் மனிதன் தான்; உங்கள் மார்க்க விஷயத்தில் நான் உங்களுக்கு ஏதேனும் கட்டளையிட்டால் அதை நீங்கள் கடைப்பிடியுங்கள். (உலக விவகாரத்தில்) சொந்தக் கருத்தாக உங்களுக்கு நான் ஏதேனும் கட்டளையிட்டால் நானும் மனிதனே” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : ராஃபிஉ பின் கதீஜ் (ரலி)


குறிப்புகள் :

“இவ்வாறோ இதைப் போன்றோ சொன்னார்கள்” என அறிவிப்பாளர் இக்ரிமா (ரஹ்) அறிவித்தார்.

அஹ்மது பின் ஜஅஃபர் அல்மஅகரீ (ரஹ்) வழி அறிவிப்பில், “… ஆகவே, கனிகள் (அந்த ஆண்டில் வெம்பி) உதிர்ந்துவிட்டன” என்று ஐயப்பாடின்றி உறுதியாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 43, பாடம்: 38, ஹதீஸ் எண்: 4342

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ الثَّقَفِيُّ، وَأَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ – وَتَقَارَبَا فِي اللَّفْظِ وَهَذَا حَدِيثُ قُتَيْبَةَ – قَالاَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ سِمَاكٍ عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ عَنْ أَبِيهِ قَالَ :‏

مَرَرْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِقَوْمٍ عَلَى رُءُوسِ النَّخْلِ فَقَالَ ‏”‏ مَا يَصْنَعُ هَؤُلاَءِ ‏”‏ ‏.‏ فَقَالُوا يُلَقِّحُونَهُ يَجْعَلُونَ الذَّكَرَ فِي الأُنْثَى فَيَلْقَحُ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ مَا أَظُنُّ يُغْنِي ذَلِكَ شَيْئًا ‏”‏ ‏.‏ قَالَ فَأُخْبِرُوا بِذَلِكَ فَتَرَكُوهُ فَأُخْبِرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِذَلِكَ فَقَالَ ‏”‏ إِنْ كَانَ يَنْفَعُهُمْ ذَلِكَ فَلْيَصْنَعُوهُ فَإِنِّي إِنَّمَا ظَنَنْتُ ظَنًّا فَلاَ تُؤَاخِذُونِي بِالظَّنِّ وَلَكِنْ إِذَا حَدَّثْتُكُمْ عَنِ اللَّهِ شَيْئًا فَخُذُوا بِهِ فَإِنِّي لَنْ أَكْذِبَ عَلَى اللَّهِ عَزَّ وَجَلَّ ‏”‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), பேரீச்ச மரங்களின் உச்சியிலிருந்து கொண்டிருந்த (மதீனாவாசிகள்) சிலரைக் கடந்து சென்றபோது அவர்களுடன் நானும் சென்றேன். அப்போது, “இவர்கள் என்ன செய்துகொண்டிருக்கின்றார்கள்?” என்று கேட்டார்கள்.

அதற்கு மக்கள், “பெண் மரங்களுடன் ஆண் மரங்களை இணைத்து மகரந்தச் சேர்க்கை செய்து (பெண் மரங்களை) சூல் கொள்ளச் செய்கின்றனர்” என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இதனால் பயன் விளையும் என்று நான் கருதவில்லை” என்று சொன்னார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இவ்வாறு கூறியதைப் பற்றி (மதீனா விவசாயிகளிடம்) தெரிவிக்கப்பட்டபோது, அவர்கள் மகரந்தச் சேர்க்கை செய்வதை விட்டுவிட்டனர். (அந்த ஆண்டில் அவர்களுக்கு மகசூல் பாதிக்கப்பட்டது).

இது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது, “அ(வ்வாறு செய்வ)தனால் அவர்களுக்குப் பயன் ஏற்படுமானால் அவ்வாறு செய்துகொள்ளட்டும். நான் எனது ஊகத்தையே தெரிவித்தேன். அதைவைத்து என்மீது குற்றம் சாட்டாதீர்கள். ஆயினும், நான் உங்களிடம் அல்லாஹ்வைப் பற்றி ஏதேனும் சொன்னால் அதை நீங்கள் கடைப்பிடியுங்கள். ஏனெனில், நான் வல்லமையும் மாண்புமுள்ள அல்லாஹ்வைப் பற்றி பொய்யுரைக்கமாட்டேன்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி)