அத்தியாயம்: 21, பாடம்: 13, ஹதீஸ் எண்: 2836

‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏وَحَرْمَلَةُ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِحَرْمَلَةَ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ ‏ ‏وَأَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏قَالَ: ‏
قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا تَبْتَاعُوا الثَّمَرَ حَتَّى يَبْدُوَ ‏ ‏صَلَاحُهُ ‏ ‏وَلَا تَبْتَاعُوا الثَّمَرَ بِالتَّمْرِ ‏


قَالَ ‏ ‏ابْنُ شِهَابٍ ‏ ‏وَحَدَّثَنِي ‏ ‏سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِثْلَهُ سَوَاءً

“உண்ணும் பக்குவ நிலையை அடையாத வரை (மரத்திலுள்ள) கனிகளை விற்காதீர்கள். (பறிக்கப்பட்ட) உலர்ந்த பழங்களுக்குப் பதிலாக (மரத்திலுள்ள) உலராத பழங்களை விற்காதீர்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர்கள் : அபூஹுரைரா (ரலி) & அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 21, பாடம்: 13, ஹதீஸ் எண்: 2835

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَاللَّفْظُ لَهُمَا ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الزُّهْرِيُّ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ: ‏
أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَهَى عَنْ بَيْعِ الثَّمَرِ حَتَّى يَبْدُوَ صَلَاحُهُ وَعَنْ بَيْعِ الثَّمَرِ بِالتَّمْرِ ‏


قَالَ ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏وَحَدَّثَنَا ‏ ‏زَيْدُ بْنُ ثَابِتٍ ‏ ‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏رَخَّصَ فِي ‏ ‏بَيْعِ الْعَرَايَا ‏ ‏زَادَ ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏فِي رِوَايَتِهِ أَنْ تُبَاعَ

நபி (ஸல்), உண்ணும் பக்குவம் அடையாத வரை (மரத்திலுள்ள) பழங்களை விற்பதற்குத் தடை விதித்தார்கள்; உலர்ந்த பேரீச்சம் பழத்திற்குப் பதிலாக (உலராத) பச்சைப் பழத்தை விற்பதற்கும் தடை விதித்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)


குறிப்புகள் :

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “அராயா$ வியாபாரத்தில் அ(வ்வாறு விற்ப)தற்கு அனுமதியளித்தார்கள்” என்று ஸைத் பின் ஸாபித் (ரலி) கூறினார்கள்.

இப்னு நுமைர் (ரஹ்) வழி அறிவிப்பில் “அராயா வியாபாரத்தில் (அவ்வாறு) விற்கப்படுவதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அனுமதியளித்தார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.

$அராயா
கொடையுள்ளம் கொண்ட தோட்ட உரிமையாளர், தன் தோட்டத்திலுள்ள ஒரு மரத்தின் பழங்களை ஓர் ஏழைக்கு அல்லது ஏழைக் குடும்பத்திற்கு அன்பளிப்பாக வழங்கி, அந்த மரத்தின் பழங்கள் பழுத்து, பறிக்கப்படுவதற்கு முன்னர் அவற்றை அந்த ஏழை, தன் தேவை கருதி ஏற்கனவே பறிக்கப்பட்ட உலர்ந்த பழங்களுக்குப் பண்டமாற்றுச் செய்துகொள்வார். இவ்வகைப் பண்டமாற்றுக்கு ‘அராயா’ என்று பெயர்.

அத்தியாயம்: 21, பாடம்: 13, ஹதீஸ் எண்: 2834

‏حَدَّثَنِي ‏ ‏أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ أَبِي نُعْمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ: ‏
قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا تَبْتَاعُوا الثِّمَارَ حَتَّى يَبْدُوَ ‏ ‏صَلَاحُهَا

“மரத்திலுள்ள கனிகளை, அவை உண்ணும் பக்குவம் அடையாத வரை விற்காதீர்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 21, பாடம்: 13, ஹதீஸ் எண்: 2833

‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ مُرَّةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْبَخْتَرِيِّ ‏ ‏قَالَ: ‏
سَأَلْتُ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏عَنْ بَيْعِ النَّخْلِ فَقَالَ ‏ ‏نَهَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ بَيْعِ النَّخْلِ حَتَّى يَأْكُلَ مِنْهُ أَوْ يُؤْكَلَ وَحَتَّى يُوزَنَ قَالَ فَقُلْتُ مَا يُوزَنُ فَقَالَ رَجُلٌ عِنْدَهُ حَتَّى يُحْزَرَ

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், பேரீச்ச மர(த்திலுள்ள பழ)ங்களை விற்பது குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், “பேரீச்ச மரத்திலுள்ள கனிகள் உண்ணப்படும் பக்குவத்தை அடைவதற்கு முன்பும், எடை போடப்படுவதற்கு முன்பும் அவற்றை விற்பதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தடை விதித்தார்கள்” என்று கூறினார்கள். நான், “எடை போடுதல் எப்படி?” என்று கேட்டேன். அப்போது அங்கிருந்த ஒருவர் “பழத்தை (பறித்த பின்னர்) எடை போடும் முன்னர் (விற்பதற்குத் தடை) என்று கூறினார்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக அபுல் பக்தரீ ஸயீத் பின் ஃபைரூஸ் (ரஹ்)

அத்தியாயம்: 21, பாடம்: 13, ஹதீஸ் எண்: 2832

‏حَدَّثَنَا ‏ ‏أَحْمَدُ بْنُ عُثْمَانَ النَّوْفَلِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَاصِمٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏رَوْحٌ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏زَكَرِيَّاءُ بْنُ إِسْحَقَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَمْرُو بْنُ دِينَارٍ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏يَقُولُ: ‏
نَهَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ بَيْعِ الثَّمَرِ حَتَّى يَبْدُوَ ‏ ‏صَلَاحُهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), (மரத்திலுள்ள) கனிகள், பக்குவப்படும் வரை அவற்றை விற்பதற்குத் தடை விதித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 21, பாடம்: 13, ஹதீஸ் எண்: 2831

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو خَيْثَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَحْمَدُ بْنُ يُونُسَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏قَالَ: ‏ ‏نَهَى أَوْ ‏
‏نَهَانَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ بَيْعِ الثَّمَرِ حَتَّى يَطِيبَ

“(மரத்திலுள்ள) பழங்கள், கனியாத வரை அவற்றை விற்க வேண்டாம்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தடை விதித்தார்கள் / எங்களுக்குத் தடை விதித்தார்கள்.

அறிவிப்பாளர் : . ஜாபிர் (ரலி)

அத்தியாயம்: 21, பாடம்: 13, ஹதீஸ் எண்: 2830

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَيَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏وَقُتَيْبَةُ ‏ ‏وَابْنُ حُجْرٍ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏و قَالَ ‏ ‏الْآخَرُونَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ وَهُوَ ابْنُ جَعْفَرٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏قَالَ: ‏
قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا تَبِيعُوا الثَّمَرَ حَتَّى يَبْدُوَ صَلَاحُهُ ‏


و حَدَّثَنِيهِ ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَزَادَ فِي حَدِيثِ ‏ ‏شُعْبَةَ ‏ ‏فَقِيلَ ‏ ‏لِابْنِ عُمَرَ ‏ ‏مَا صَلَاحُهُ قَالَ تَذْهَبُ ‏ ‏عَاهَتُهُ

”உண்ணும் பக்குவத்தை அடையாத வரை (மரத்திலுள்ள) கனிகளை விற்காதீர்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

குறிப்பு :

ஷுஅபா (ரஹ்) வழி அறிவிப்பில், “இப்னு உமர் (ரலி) அவர்களிடம் ‘உண்ணும் பக்குவம் என்றால் என்ன?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “(அப்பழங்கள்) அழுகும் நிலையை அடையாதிருப்பது”’ என விடையளித்தார்கள்” என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 21, பாடம்: 13, ஹதீஸ் எண்: 2829

‏حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏قَالَ: ‏
قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا تَبْتَاعُوا الثَّمَرَ حَتَّى يَبْدُوَ ‏ ‏صَلَاحُهُ ‏ ‏وَتَذْهَبَ عَنْهُ الْآفَةُ قَالَ يَبْدُوَ ‏ ‏صَلَاحُهُ ‏ ‏حُمْرَتُهُ وَصُفْرَتُهُ ‏


و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ أَبِي عُمَرَ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَهَّابِ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏حَتَّى يَبْدُوَ صَلَاحُهُ لَمْ يَذْكُرْ مَا بَعْدَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي فُدَيْكٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏الضَّحَّاكُ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏عَبْدِ الْوَهَّابِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُوَيْدُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَفْصُ بْنُ مَيْسَرَةَ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏مُوسَى بْنُ عُقْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏مَالِكٍ ‏ ‏وَعُبَيْدِ اللَّهِ

“உண்ணும் பக்குவம் தெளிவாகாத வரை, (அழுகிப்) பாழாகும் நிலையிலிருந்து பாதுகாப்புப் பெறாத வரை கனிகளை விற்காதீர்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)


குறிப்புகள் :

“பக்குவம் என்பது, (உண்பதற்கு ஏற்றவாறு) சிவப்பாகவோ மஞ்சளாகவோ மாறுவதைக் குறிக்கும்” என்று  இதன் அறிவிப்பாளரான இப்னு உமர் (ரலி) கூறுகிறார்கள்.

யஹ்யா (ரஹ்) வழி அறிவிப்பில், மேற்காணும் இப்னு உமர் அவர்களின் விளக்கக் குறிப்பு இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 21, பாடம்: 13, ஹதீஸ் எண்: 2828

‏و حَدَّثَنِي ‏ ‏عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ: ‏
أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَهَى عَنْ بَيْعِ النَّخْلِ حَتَّى ‏ ‏يَزْهُوَ ‏ ‏وَعَنْ السُّنْبُلِ حَتَّى يَبْيَضَّ وَيَأْمَنَ الْعَاهَةَ نَهَى الْبَائِعَ وَالْمُشْتَرِيَ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), பேரீச்ச மரத்திலுள்ள கனிகள் சிவக்காத வரை அவற்றை விற்பதற்குத் தடை விதித்தார்கள்; (தானியக்) கதிர்கள் (முற்றி) வெண்ணிறமாகி, அவை கருகல் நோயிலிருந்து பாதுகாப்புப் பெறும் வரை அவற்றை விற்பதற்கும் தடை விதித்தார்கள். விற்பவர் வாங்குபவர் ஆகிய இருவருக்கும் (இவ்வாறு) தடை விதித்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி).

அத்தியாயம்: 21, பாடம்: 13, ஹதீஸ் எண்: 2827

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ: ‏
أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَهَى عَنْ بَيْعِ الثَّمَرِ حَتَّى يَبْدُوَ صَلَاحُهَا نَهَى الْبَائِعَ وَالْمُبْتَاعَ ‏


حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِهِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மரத்திலுள்ள கனிகள் முற்றாத வரை அவற்றை விற்பதற்குத் தடை விதித்தார்கள்; விற்பவர் வாங்குபவர் ஆகிய இருவருக்கும் (இவ்வாறு) தடை விதித்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி).