அத்தியாயம்: 21, பாடம்: 2, ஹதீஸ் எண்: 2783

‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ ‏ ‏وَيَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏وَأَبُو أُسَامَةَ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبُو الزِّنَادِ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْرَجِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ: ‏

‏نَهَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ ‏ ‏بَيْعِ الْحَصَاةِ ‏ ‏وَعَنْ ‏ ‏بَيْعِ الْغَرَرِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கல்லெறி வியாபாரத்திற்கும் மோசடி வியாபாரத்திற்கும் தடை விதித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்புகள் :

நில வியாபாரத்தில், நிலத்தின் உரிமையாளர் தன் நிலத்தில் நின்றுகொண்டு ஒரு கல்லெடுத்து எறிவார். அந்தக் கல் போய்விழும் இடம் வரை வாங்குபவருக்கு விற்கப்பட்டது எனப்படும் வியாபாரமும்; துணி வியாபாரத்தில், வியாபாரி எறியும் கல் எந்தத் துணி மீது விழுந்ததோ அந்தத் துணி விற்கப்பட்டது என்பதும் ‘கல்லெறி (பைஉல் ஹஸாத்) வியாபாரம்’ எனப்பட்டது.

தனக்கு உரிமையற்ற பொருளை விற்பது, தன்னிடமிருந்து தப்பிச் சென்றுவிட்ட அடிமையை விற்பது, குளத்துத் தண்ணீரில் உள்ள மீன்களை விற்பது, கால்நடைகளின் மடுவிலிருக்கும் பாலை விற்பது, கால்நடைகளின் சூலிலுள்ள கன்றை விற்பது ஆகியன ‘மோசடி (பைஉல் கரர்) வியாபாரம்’ எனப்பட்டது.

அறியாமைக் காலத்தில் வழக்கிலிருந்த இவ்விரு வியாபாரங்களையும் நபி (ஸல்) தடை செய்தார்கள்.

Share this Hadith: