அத்தியாயம்: 21, பாடம்: 21, ஹதீஸ் எண்: 2892

‏‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏حَمَّادُ بْنُ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرٍو ‏ ‏أَنَّ ‏ ‏مُجَاهِدًا ‏ ‏قَالَ ‏ ‏لِطَاوُسٍ ‏ ‏انْطَلِقْ بِنَا إِلَى ‏ ‏ابْنِ رَافِعِ بْنِ خَدِيجٍ ‏ ‏فَاسْمَعْ مِنْهُ الْحَدِيثَ عَنْ أَبِيهِ: ‏
عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ فَانْتَهَرَهُ قَالَ إِنِّي وَاللَّهِ لَوْ أَعْلَمُ أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَهَى عَنْهُ مَا فَعَلْتُهُ وَلَكِنْ حَدَّثَنِي مَنْ هُوَ أَعْلَمُ بِهِ مِنْهُمْ ‏ ‏يَعْنِي ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏لَأَنْ يَمْنَحَ الرَّجُلُ أَخَاهُ أَرْضَهُ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَأْخُذَ عَلَيْهَا خَرْجًا مَعْلُومًا

நான் தாவூஸ் பின் கைஸான் (ரஹ்) அவர்களிடம், “என்னை ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்களின் மகனிடம் அழைத்துச் செல்லுங்கள். அவரிடம் அவருடைய தந்தை ராஃபிஉ (ரலி), நபி (ஸல்) அவர்களிடமிருந்து (விளைநிலக் குத்தகை கூடாது என) அறிவித்த ஹதீஸைப் பற்றி நீங்கள் (அல்லது நான்) கேட்கவேண்டும்” என்றேன். இதைக் கேட்ட தாவூஸ் (ரஹ்) என்னைக் கடிந்துகொண்டார்கள்.

மேலும், கூறினார்கள்: “அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அ(வ்வாறு விளைநிலத்தைக் குத்தகைக்கு விடுவ)தை(ப்பொதுவாக)த் தடை செய்தார்கள் என நான் அறிந்திருந்தால், அதை நான் செய்திருக்க மாட்டேன். இது இவ்வாறிருக்க, இதைப் பற்றி மக்களில் நன்கு அறிந்தவர் (இப்னு அப்பாஸ்) என்னிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘ஒருவர் தமது விளைநிலத்தைக் குத்தகைக்கு விட்டு, அதிலிருந்து குறிப்பிட்ட குத்தகைத் தொகையை வாங்கிக்கொள்வதைவிட, தம் சகோதரருக்கு இரவலாக(விளைவித்துக் கொள்ளுமாறு அதை)க் கொடுத்துவிடுவது சிறந்ததாகும்’ என்று கூறினார்கள்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக முஜாஹித் (ரஹ்)

Share this Hadith: