حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا شُعْبَةُ عَنْ أَبِي التَّيَّاحِ سَمِعَ مُطَرِّفَ بْنَ عَبْدِ اللَّهِ عَنْ ابْنِ الْمُغَفَّلِ قَالَ:
أَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَتْلِ الْكِلَابِ ثُمَّ قَالَ مَا بَالُهُمْ وَبَالُ الْكِلَابِ ثُمَّ رَخَّصَ فِي كَلْبِ الصَّيْدِ وَكَلْبِ الْغَنَمِ
و حَدَّثَنِيهِ يَحْيَى بْنُ حَبِيبٍ حَدَّثَنَا خَالِدٌ يَعْنِي ابْنَ الْحَارِثِ ح و حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ ح و حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْوَلِيدِ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ح و حَدَّثَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ أَخْبَرَنَا النَّضْرُ ح و حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ كُلُّهُمْ عَنْ شُعْبَةَ بِهَذَا الْإِسْنَادِ و قَالَ ابْنُ حَاتِمٍ فِي حَدِيثِهِ عَنْ يَحْيَى وَرَخَّصَ فِي كَلْبِ الْغَنَمِ وَالصَّيْدِ وَالزَّرْعِ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஆரம்பத்தில்) நாய்களைக் கொல்லும்படி உத்தரவிட்டிருந்தார்கள். பின்பு, “அவர்களுக்கும் (எல்லா) நாய்களுக்கும் என்ன நேர்ந்தது (எல்லா நாய்களையும் கொல்கிறார்களே)?” என்று கேட்டார்கள். பின்னர் வேட்டை நாய்களுக்கும் ஆடுகளைக் காவல் காக்கும் நாய்களுக்கும் விலக்கு அளித்தார்கள்.
அறிவிப்பாளார் : அப்துல்லாஹ் பின் அல்முஃகஃப்பல் (ரலி)
குறிப்பு :
யஹ்யா பின் ஸயீத் (ரலி) வழியாக முஹம்மது பின் ஹாத்திம் (ரஹ்) அறிவிப்பில், “ஆடுகளைக் காவல் காக்கும் நாய்களுக்கும் வேட்டை நாய்களுக்கும் விவசாயப் பண்ணைகளைக் காவல் காக்கும் நாய்களுக்கும் அனுமதியளித்தார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.