அத்தியாயம்: 22, பாடம்: 10, ஹதீஸ் எண்: 2951

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏يَزِيدَ بْنِ خُصَيْفَةَ ‏ ‏أَنَّ ‏ ‏السَّائِبَ بْنَ يَزِيدَ ‏ ‏أَخْبَرَهُ أَنَّهُ سَمِعَ ‏ ‏سُفْيَانَ بْنَ أَبِي زُهَيْرٍ ‏ ‏وَهُوَ رَجُلٌ مِنْ ‏ ‏شَنُوءَةَ ‏ ‏مِنْ ‏ ‏أَصْحَابِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ: ‏
سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏مَنْ اقْتَنَى كَلْبًا ‏ ‏لَا يُغْنِي عَنْهُ ‏ ‏زَرْعًا وَلَا ضَرْعًا نَقَصَ مِنْ عَمَلِهِ كُلَّ يَوْمٍ ‏ ‏قِيرَاطٌ

قَالَ ‏ ‏آنْتَ سَمِعْتَ هَذَا مِنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ إِي وَرَبِّ هَذَا الْمَسْجِدِ ‏ ‏ ‏


حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏وَقُتَيْبَةُ ‏ ‏وَابْنُ حُجْرٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ ‏ ‏عَنْ ‏ ‏يَزِيدَ بْنِ خُصَيْفَةَ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏السَّائِبُ بْنُ يَزِيدَ ‏ ‏أَنَّهُ وَفَدَ عَلَيْهِمْ ‏ ‏سُفْيَانُ بْنُ أَبِي زُهَيْرٍ الشَّنَئِيُّ ‏ ‏فَقَالَ قَالَ ‏ ‏رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِهِ

ஷனூஆ குலத்தைச் சேர்ந்த நபித் தோழர்களில் ஒருவரான ஸுஃப்யான் பின் அபீஸுஹைர் (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘விளைநிலங்கள் மற்றும் கால்நடைகளைக் காவல் காக்கும் தேவையேதுமின்றி நாய் வளர்ப்பவருடைய நற்செயல்களி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு கீராத் (கணிசமான) அளவுக்குக் குறைந்துவிடும்’ என்று கூறியதை நான் கேட்டேன்” என்றார்கள்.

நான், “இதை நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம்; இந்தப் பள்ளிவாசலின் அதிபதி மீதாணையாக!” என்றார்கள்.

அறிவிப்பாளர் : ஸுஃப்யான் பின் அபீஸுஹைர் (ரலி) வழியாக ஸாயிப் பின் யஸீத் (ரஹ்)


குறிப்பு :

இஸ்மாயீல் (ரஹ்) வழி அறிவிப்பில், {எங்களிடம் ஷனூஆ குலத்தைச் சேர்ந்த ஸுஃப்யான் பின் அபீஸுஹைர் (ரலி) ஒரு தூதுக் குழுவினரோடு வந்திருந்தபோது, “ … அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்…” என (மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்று) அறிவித்தார்கள் என்று இடம்பெற்றுள்ளது}.

Share this Hadith: