அத்தியாயம்: 22, பாடம்: 12, ஹதீஸ் எண்: 2956

‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْأَعْلَى بْنُ عَبْدِ الْأَعْلَى أَبُو هَمَّامٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سَعِيدٌ الْجُرَيْرِيُّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي نَضْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏قَالَ: ‏
سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَخْطُبُ ‏ ‏بِالْمَدِينَةِ ‏ ‏قَالَ يَا أَيُّهَا النَّاسُ ‏ ‏إِنَّ اللَّهَ تَعَالَى ‏ ‏يُعَرِّضُ بِالْخَمْرِ ‏ ‏وَلَعَلَّ اللَّهَ سَيُنْزِلُ فِيهَا أَمْرًا فَمَنْ كَانَ عِنْدَهُ مِنْهَا شَيْءٌ فَلْيَبِعْهُ وَلْيَنْتَفِعْ بِهِ قَالَ فَمَا لَبِثْنَا إِلَّا يَسِيرًا حَتَّى قَالَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّ اللَّهَ تَعَالَى حَرَّمَ الْخَمْرَ فَمَنْ أَدْرَكَتْهُ هَذِهِ الْآيَةُ وَعِنْدَهُ مِنْهَا شَيْءٌ فَلَا يَشْرَبْ وَلَا يَبِعْ قَالَ فَاسْتَقْبَلَ النَّاسُ بِمَا كَانَ عِنْدَهُ مِنْهَا فِي طَرِيقِ ‏ ‏الْمَدِينَةِ ‏ ‏فَسَفَكُوهَا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மதீனாவில் (முழு மதுவிலக்கு வருவதற்கு முன்பு, மக்களுக்கு ஒரு நாள்) உரை யாற்றினார்கள். அப்போது “மக்களே! அல்லாஹ் மது(விலக்குப்) பற்றி, குறிப்புக் காட்டியுள்ளான். விரைவில் அது தொடர்பாக (தீர்க்கமான) ஓர் ஆணையை அல்லாஹ் அருளக்கூடும். எனவே, தம்மிடம் மதுவில் மீதம் வைத்திருப்பவர் அதை (இப்போதே) விற்று, அதன் மூலம் பயனடைந்துகொள்ளட்டும்!” என்று கூறினார்கள்.

நாங்கள் சிறிதே காலத்தைக் கடந்தபோது, நபி (ஸல்), “அல்லாஹ் மதுவை(முற்றாக)த் தடை செய்துவிட்டான். எனவே, தம்மிடம் மதுவில் மீதம் வைத்திருப்பவரை இந்த வசனம் அடைந்தால், மதுவை அவர் அருந்தவும் வேண்டாம்; விற்கவும் வேண்டாம்” என்று சொன்னார்கள். உடனே, மக்கள் தங்களிடமிருந்த மதுவை மதீனாவின் தெருக்களில் கொட்டிவிட்டனர்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

Share this Hadith: