حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ نَافِعٍ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ:
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَبِيعُوا الذَّهَبَ بِالذَّهَبِ إِلَّا مِثْلًا بِمِثْلٍ وَلَا تُشِفُّوا بَعْضَهَا عَلَى بَعْضٍ وَلَا تَبِيعُوا الْوَرِقَ بِالْوَرِقِ إِلَّا مِثْلًا بِمِثْلٍ وَلَا تُشِفُّوا بَعْضَهَا عَلَى بَعْضٍ وَلَا تَبِيعُوا مِنْهَا غَائِبًا بِنَاجِزٍ
“சரிக்குச் சரியான எடையில் இல்லாமல், தங்கத்திற்குத் தங்கத்தை விற்காதீர்கள். அவற்றில் ஒன்றைவிட மற்றொன்றைக் கூட்டி(யோ, குறைத்தோ)விடாதீர்கள். சரிக்குச் சரியாகவே தவிர, வெள்ளிக்கு வெள்ளியை விற்காதீர்கள். அவற்றில் ஒன்றைவிட மற்றொன்றைக் கூட்டி(யோ குறைத்தோ)விடாதீர்கள். அவற்றில் ஒன்றை ரொக்க விலைக்கென்றும் மற்றொன்றை தவணை விலைக்கென்றும் விற்காதீர்கள்” என்று . அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
குறிப்பு :
இந்த ஹதீஸிலும் இதுபோன்ற ஹதீஸ்களிலும் ‘விற்பது’, ‘வாங்குவது’ போன்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் அவை பெரும்பாலும் அக்காலத்தில் நடைமுறையிலிருந்த பண்டமாற்று வணிகத்தையே குறிக்கும். காட்டாக, சில சிறிய நகைகளை எடைபோட்டுக் கொடுத்துவிட்டு, அவற்றின் எடைக்குச் சரியான எடையுள்ள ஒட்டியாணம் போன்ற பெரிய நகையைப் பெற்றுக்கொள்வது; அல்லது ஒரு பெரிய நகையைக் கொடுத்துவிட்டு, விரும்புகின்ற சில சிறிய நகைகளைப் பெற்றுக்கொள்வது என்பதைக் குறிக்கும்.