அத்தியாயம்: 22, பாடம்: 18, ஹதீஸ் எண்: 2990

‏حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبَّادٍ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏وَابْنُ أَبِي عُمَرَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ بْنِ عُيَيْنَةَ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِابْنِ عَبَّادٍ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرٍو ‏ ‏عَنْ ‏ ‏أَبِي صَالِحٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ ‏ ‏يَقُولُ: ‏
الدِّينَارُ بِالدِّينَارِ وَالدِّرْهَمُ بِالدِّرْهَمِ مِثْلًا بِمِثْلٍ مَنْ زَادَ أَوْ ازْدَادَ فَقَدْ ‏ ‏أَرْبَى ‏ ‏فَقُلْتُ لَهُ إِنَّ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏يَقُولُ غَيْرَ هَذَا فَقَالَ لَقَدْ لَقِيتُ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏فَقُلْتُ أَرَأَيْتَ هَذَا الَّذِي تَقُولُ أَشَيْءٌ سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَوْ وَجَدْتَهُ فِي كِتَابِ اللَّهِ عَزَّ وَجَلَّ فَقَالَ لَمْ أَسْمَعْهُ مِنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَلَمْ أَجِدْهُ فِي كِتَابِ اللَّهِ وَلَكِنْ حَدَّثَنِي ‏ ‏أُسَامَةُ بْنُ زَيْدٍ ‏ ‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏الرِّبَا فِي ‏ ‏النَّسِيئَةِ

அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), “தங்க நாணயத்திற்குத் தங்க நாணயத்தையும் வெள்ளி நாணயத்திற்கு வெள்ளி நாணயத்தையும் சரிக்குச் சமமாக விற்கலாம். கூடுதலாகக் கொடுத்தாலோ, கூடுதலாகக் கேட்டாலோ அவர் வட்டி வாங்கிவிட்டார்” என்று கூறியதை நான் செவியுற்றபோது நான், “இப்னு அப்பாஸ் (ரலி) வேறு விதமாகக் கூறுகிறார்களே?” என்று கேட்டேன். அதற்கு அபூஸயீத் (ரலி) “நான் இப்னு அப்பாஸ் அவர்களைச் சந்தித்த போது, நீங்கள் கூறுவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா, அல்லது இறைவேதத்தில் கண்டீர்களா?” என்று கேட்டேன்.

அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அவ்வாறு நான் செவியுறவுமில்லை; இறைவேதத்தில் அதை நான் காணவுமில்லை. மாறாக, ‘வட்டி என்பது கடனுக்கு(நாணயமாற்று செய்யும்போது)தான்’ என்று நபி (ஸல்) கூறியதாக உஸாமா பின் ஸைத் (ரலி) என்னிடம் கூறினார்கள்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல் குத்ரீ (ரலி) வழியாக அபூஸாலிஹ் அஸ்ஸய்யாத் (ரஹ்)

Share this Hadith: