حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ – وَاللَّفْظُ لِعَبْدٍ – قَالاَ أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ جَابِرٍ قَالَ :
إِنَّمَا الْعُمْرَى الَّتِي أَجَازَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يَقُولَ هِيَ لَكَ وَلِعَقِبِكَ . فَأَمَّا إِذَا قَالَ هِيَ لَكَ مَا عِشْتَ فَإِنَّهَا تَرْجِعُ إِلَى صَاحِبِهَا .
قَالَ مَعْمَرٌ وَكَانَ الزُّهْرِيُّ يُفْتِي بِهِ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இது உனக்கும் உன் சந்ததிக்கும் உரியதாகும்” என்று கூறி வழங்கப்படும் ஆயுட்கால அன்பளிப்புக்கே அனுமதியளித்தார்கள். “உன் ஆயுள் முழுவதும் இது உனக்குரியதாகும்” என்று (மட்டும்) கூறினால், அது (அன்பளிப்பு பெற்றவரின் இறப்பிற்குப் பின்) அன்பளிப்பு வழங்கியவருக்குத் திரும்பிவிடும்.
அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
குறிப்பு :
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களுள் ஒருவரான மஅமர் (ரஹ்), “இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) இவ்வாறே தீர்ப்பளித்துவந்தார்கள்” என்று கூறினார்.