அத்தியாயம்: 25, பாடம்: 0, ஹதீஸ் எண்: 3073

حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، زُهَيْرُ بْنُ حَرْبٍ وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى الْعَنَزِيُّ – وَاللَّفْظُ لاِبْنِ الْمُثَنَّى – قَالاَ حَدَّثَنَا يَحْيَى – وَهُوَ ابْنُ سَعِيدٍ الْقَطَّانُ – عَنْ عُبَيْدِ اللَّهِ، أَخْبَرَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ:‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ مَا حَقُّ امْرِئٍ مُسْلِمٍ لَهُ شَىْءٌ يُرِيدُ أَنْ يُوصِيَ فِيهِ يَبِيتُ لَيْلَتَيْنِ إِلاَّ وَوَصِيَّتُهُ مَكْتُوبَةٌ عِنْدَهُ ‏”‏


وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، وَعَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، ح وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنِي أَبِي كِلاَهُمَا، عَنْ عُبَيْدِ اللَّهِ، بِهَذَا الإِسْنَادِ غَيْرَ أَنَّهُمَا قَالاَ ‏”‏ وَلَهُ شَىْءٌ يُوصِي فِيهِ ‏”‏ ‏.‏ وَلَمْ يَقُولاَ ‏”‏ يُرِيدُ أَنْ يُوصِيَ فِيهِ ‏”‏

وَحَدَّثَنَا أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ، حَدَّثَنَا حَمَّادٌ يَعْنِي ابْنَ زَيْدٍ، ح وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا إِسْمَاعِيلُ – يَعْنِي ابْنَ عُلَيَّةَ – كِلاَهُمَا عَنْ أَيُّوبَ، ح وَحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، ح وَحَدَّثَنِي هَارُونُ بْنُ سَعِيدٍ الأَيْلِيُّ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي أُسَامَةُ بْنُ زَيْدٍ اللَّيْثِيُّ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، أَخْبَرَنَا هِشَامٌ – يَعْنِي ابْنَ سَعْدٍ – كُلُّهُمْ عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏ بِمِثْلِ حَدِيثِ عُبَيْدِ اللَّهِ وَقَالُوا جَمِيعًا ‏”‏ لَهُ شَىْءٌ يُوصِي فِيهِ ‏”‏ ‏.‏ إِلاَّ فِي حَدِيثِ أَيُّوبَ فَإِنَّهُ قَالَ ‏”‏ يُرِيدُ أَنْ يُوصِيَ فِيهِ ‏”‏ ‏.‏ كَرِوَايَةِ يَحْيَى عَنْ عُبَيْدِ اللَّهِ ‏

ஒரு முஸ்லிம், தமது செல்வம் ஒன்றில் வஸிய்யத் (மரண சாஸனம்) செய்ய விரும்பினால், அவர் தமது மரண சாஸனத்தை எழுதித் தம்மிடம் (தயாராக) வைத்துக் கொள்ளாமல் இரண்டு இரவுகளைக்கூட கழிப்பதற்கு அனுமதியில்லை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)


குறிப்புகள் :

அப்துல்லாஹ் பின் நுமைர் (ரஹ்) மற்றும் முஹம்மது பின் நுமைர் (ரஹ்) ஆகிய இருவரது அறிவிப்பில், “… மரண சாஸனம் செய்வதற்கு ஏதேனும் செல்வத்தைப் பெற்றிருந்தால்…” என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. “… மரண சாஸனம் செய்ய விரும்பினால்…” என இடம்பெறவில்லை.

அய்யூப் (ரஹ்) வழி அறிவிப்பைத் தவிர மற்ற அனைவரது அறிவிப்பிலும் “மரண சாஸனம் செய்ய ஏதேனும் ஒரு செல்வத்தைப் பெற்றிருந்தால் …“ என்று இடம்பெற்றுள்ளது. அய்யூப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் மட்டும் “… மரண சாஸனம் செய்ய விரும்பினால்…” என்று இடம்பெற்றுள்ளது.

Share this Hadith: