அத்தியாயம்: 25, பாடம்: 5, ஹதீஸ் எண்: 3085

‏‏حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ، أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ مَالِكِ بْنِ مِغْوَلٍ، عَنْ طَلْحَةَ بْنِ مُصَرِّفٍ قَالَ:‏ ‏

سَأَلْتُ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي أَوْفَى هَلْ أَوْصَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ لاَ ‏.‏ قُلْتُ فَلِمَ كُتِبَ عَلَى الْمُسْلِمِينَ الْوَصِيَّةُ أَوْ فَلِمَ أُمِرُوا بِالْوَصِيَّةِ قَالَ أَوْصَى بِكِتَابِ اللَّهِ عَزَّ وَجَلَّ


وَحَدَّثَنَاهُ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، ح وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، كِلاَهُمَا عَنْ مَالِكِ بْنِ مِغْوَلٍ، بِهَذَا الإِسْنَادِ ‏.‏ مِثْلَهُ غَيْرَ أَنَّ فِي حَدِيثِ وَكِيعٍ قُلْتُ فَكَيْفَ أُمِرَ النَّاسُ بِالْوَصِيَّةِ وَفِي حَدِيثِ ابْنِ نُمَيْرٍ قُلْتُ كَيْفَ كُتِبَ عَلَى الْمُسْلِمِينَ الْوَصِيَّةُ.

நான் அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மரண சாஸனம் செய்ததுண்டா?” என்று கேட்டேன். அவர்கள் “இல்லை” என்று பதிலளித்தார்கள். “அவ்வாறாயின் மரண சாஸனம் முஸ்லிம்களுக்கு ஏன் கடமையாக்கப்பட்டது?” என்றோ “அவ்வாறாயின் மரண சாஸனம் செய்யுமாறு மக்கள் ஏன் கட்டளையிடப்பட்டனர்?” என்றோ கேட்டேன். அதற்கு அவர்கள், “வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் வேதத்தின்படி செயல்படுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அறிவுறுத்தினார்கள்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) வழியாக தல்ஹா பின் முஸர்ரிஃப் (ரஹ்)


குறிப்புகள் :

வகீஉ பின் அல்ஜர்ராஹ் (ரஹ்) வழி அறிவிப்பில் “மரண சாஸனம் செய்யும்படி மக்களுக்கு எவ்வாறு கட்டளையிடப்பட்டது?” என்று தல்ஹா பின் முஸர்ரிஃப் (ரஹ்) கேட்டார்கள் என இடம்பெற்றுள்ளது.

முஹம்மது பின் அப்தில்லாஹ் பின் நுமைர் (ரஹ்) வழி அறிவிப்பில், “மரண சாஸனம் செய்வது முஸ்லிம்கள்மீது எப்படிக் கடமையாக்கப்பட்டது?” என்று கேட்டார்கள் என இடம்பெற்றுள்ளது.