அத்தியாயம்: 27, பாடம்: 11, ஹதீஸ் எண்: 3143

حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالاَ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ سَمِعْتُ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ، يَقُولُ قَالَ أَبُو هُرَيْرَةَ :‏ 

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ لِلْعَبْدِ الْمَمْلُوكِ الْمُصْلِحِ أَجْرَانِ ‏”‏ ‏‏ وَالَّذِي نَفْسُ أَبِي هُرَيْرَةَ بِيَدِهِ لَوْلاَ الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ وَالْحَجُّ وَبِرُّ أُمِّي لأَحْبَبْتُ أَنْ أَمُوتَ وَأَنَا مَمْلُوكٌ‏ قَالَ وَبَلَغَنَا أَنَّ أَبَا هُرَيْرَةَ لَمْ يَكُنْ يَحُجُّ حَتَّى مَاتَتْ أُمُّهُ لِصُحْبَتِهَا‏ قَالَ أَبُو الطَّاهِرِ فِي حَدِيثِهِ ‏”لِلْعَبْدِ الْمُصْلِحِ”‏‏ وَلَمْ يَذْكُرِ الْمَمْلُوكَ


وَحَدَّثَنِيهِ زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا أَبُو صَفْوَانَ الأُمَوِيُّ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، بِهَذَا الإِسْنَادِ وَلَمْ يَذْكُرْ بَلَغَنَا وَمَا بَعْدَهُ

“ஒருவருக்குச் சொந்தமான நற்குணமுள்ள அடிமைக்கு இரண்டு நன்மைகள் உண்டு” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.


குறிப்புகள் :

இதன் அறிவிப்பாளரான அபூஹுரைரா (ரலி) இந்த ஹதீஸை அறிவித்துவிட்டு, “அபூஹுரைராவின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவதும் ஹஜ்ஜும் என் தாய்க்குச் செய்ய வேண்டிய கடமையும் இல்லாமலிருந்தால் நான் (ஒருவரின்) அடிமையாக இருக்கும் நிலையில் இறப்பதையே விரும்பியிருப்பேன்” என்றார்கள்.

“தம் தாயாரு(க்குச் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்ற அவரு)டனேயே இருந்ததால், தாயார் இறக்கும்வரை அபூஹுரைரா (ரலி) (கூடுதலான) ஹஜ்ஜுக்குக்கூடச் செல்லவில்லை என நமக்குத் தகவல் கிடைத்துள்ளது” என்று ஸயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்) கூறினார்.

அபுத்தாஹிர் அஹ்மத் பின் அம்ரு (ரஹ்) வழி அறிவிப்பில், “ஒருவருக்குச் சொந்தமான …” எனும் குறிப்பு இன்றி, “ …நல்ல அடிமைக்கு …” என்று இடம்பெற்றுள்ளது.

அபூஸஃப்வான் அல் அமவீ (ரஹ்) வழி அறிவிப்பில்.  ஸயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்) குறிப்பிட்ட அபூஹுரைரா (ரலி) பற்றிய குறிப்பும் அதற்குப் பின்னுள்ளவையும் இடம்பெறவில்லை.

Share this Hadith: