அத்தியாயம்: 27, பாடம்: 3, ஹதீஸ் எண்: 3118

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ تَمِيمِ بْنِ طَرَفَةَ قَالَ :‏

سَمِعْتُ عَدِيَّ بْنَ حَاتِمٍ، وَأَتَاهُ رَجُلٌ يَسْأَلُهُ مِائَةَ دِرْهَمٍ ‏.‏ فَقَالَ تَسْأَلُنِي مِائَةَ دِرْهَمٍ وَأَنَا ابْنُ حَاتِمٍ وَاللَّهِ لاَ أُعْطِيكَ ‏.‏ ثُمَّ قَالَ لَوْلاَ أَنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ “‏ مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ ثُمَّ رَأَى خَيْرًا مِنْهَا فَلْيَأْتِ الَّذِي هُوَ خَيْرٌ ‏”‏ ‏


حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا بَهْزٌ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا سِمَاكُ بْنُ حَرْبٍ، قَالَ سَمِعْتُ تَمِيمَ بْنَ طَرَفَةَ، قَالَ سَمِعْتُ عَدِيَّ بْنَ حَاتِمٍ، أَنَّ رَجُلاً، سَأَلَهُ فَذَكَرَ مِثْلَهُ وَزَادَ وَلَكَ أَرْبَعُمِائَةٍ فِي عَطَائِي ‏

அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்களிடம் ஒருவர் நூறு திர்ஹங்கள் கேட்டார். அப்போது அதீ பின் ஹாத்திம் (ரலி) “ஹாத்திம் அத்தாயீயின் மகனான என்னிடம் (மிகக் குறைந்த தொகையான) நூறு திர்ஹங்கள் கேட்கிறாயே! அல்லாஹ் வின் மீதாணையாக! உமக்கு நான் தரமாட்டேன்” என்று கூறிவிட்டார்கள். பிறகு (சத்தியத்தை முறித்து அவர் கேட்டதைக் கொடுத்துவிட்டு) “ஒருவர் ஒரு சத்தியம் செய்துவிட்டு, அஃதல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாக அவர் கருதினால் அந்தச் சிறந்ததையே அவர் செய்யட்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதை நான் கேட்டிராவிட்டால், எனது சத்தியத்தை முறித்திருக்கமாட்டேன்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அதீ பின் ஹாத்திம் (ரலி) வழியாக தமீம் பின் தரஃபா அத்தாயீ (ரஹ்)


குறிப்பு :

பஹ்ஸு (ரஹ்) வழி அறிவிப்பில், “உமக்கு எனது நன்கொடையில் நானூறு திர்ஹங்கள் கிடைக்கும்” என்று அதீ பின் ஹாத்திம் (ரலி) கூறினார்கள் எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

Share this Hadith: