وَحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، أَنَّ أَيُّوبَ، حَدَّثَهُ أَنَّ نَافِعًا حَدَّثَهُ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ حَدَّثَهُ :
أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ سَأَلَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ بِالْجِعْرَانَةِ بَعْدَ أَنْ رَجَعَ مِنَ الطَّائِفِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي نَذَرْتُ فِي الْجَاهِلِيَّةِ أَنْ أَعْتَكِفَ يَوْمًا فِي الْمَسْجِدِ الْحَرَامِ فَكَيْفَ تَرَى قَالَ “ اذْهَبْ فَاعْتَكِفْ يَوْمًا ” . قَالَ وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَدْ أَعْطَاهُ جَارِيَةً مِنَ الْخُمْسِ فَلَمَّا أَعْتَقَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم سَبَايَا النَّاسِ سَمِعَ عُمَرُ بْنُ الْخَطَّابِ أَصْوَاتَهُمْ يَقُولُونَ أَعْتَقَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم . فَقَالَ مَا هَذَا فَقَالُوا أَعْتَقَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم سَبَايَا النَّاسِ . فَقَالَ عُمَرُ يَا عَبْدَ اللَّهِ اذْهَبْ إِلَى تِلْكَ الْجَارِيَةِ فَخَلِّ سَبِيلَهَا
وَحَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ لَمَّا قَفَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم مِنْ حُنَيْنٍ سَأَلَ عُمَرُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ نَذْرٍ كَانَ نَذَرَهُ فِي الْجَاهِلِيَّةِ اعْتِكَافِ يَوْمٍ . ثُمَّ ذَكَرَ بِمَعْنَى حَدِيثِ جَرِيرِ بْنِ حَازِمٍ .
وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّيُّ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ نَافِعٍ، قَالَ ذُكِرَ عِنْدَ ابْنِ عُمَرَ عُمْرَةُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنَ الْجِعْرَانَةِ فَقَالَ لَمْ يَعْتَمِرْ مِنْهَا – قَالَ – وَكَانَ عُمَرُ نَذَرَ اعْتِكَافَ لَيْلَةٍ فِي الْجَاهِلِيَّةِ . ثُمَّ ذَكَرَ نَحْوَ حَدِيثِ جَرِيرِ بْنِ حَازِمٍ وَمَعْمَرٍ عَنْ أَيُّوبَ .
وَحَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ، حَدَّثَنَا حَجَّاجُ بْنُ الْمِنْهَالِ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، ح وَحَدَّثَنَا يَحْيَى بْنُ خَلَفٍ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، كِلاَهُمَا عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، . بِهَذَا الْحَدِيثِ فِي النَّذْرِ وَفِي حَدِيثِهِمَا جَمِيعًا اعْتِكَافُ يَوْمٍ .
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தாயிஃப் போரிலிருந்து திரும்பிய பின் ‘அல்ஜிஃரானா’ எனும் இடத்திலிருந்தபோது அவர்களிடம் (என் தந்தை) உமர் பின் அல் கத்தாப் (ரலி), “அல்லாஹ்வின் தூதரே! அறியாமைக் காலத்தில் மஸ்ஜிதுல் ஹராம் புனிதப் பள்ளிவாசலில் ஒரு நாள் இஃதிகாஃப் இருப்பதாக நான் நேர்ந்துகொண்டேன். நான் என்ன செய்யட்டும்?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீர் சென்று ஒரு நாள் இஃதி காஃப் இருப்பீராக!” என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்), உமர் (ரலி) அவர்களுக்கு (ஹுனைன் போர்ச் செல்வத்தின்) ஐந்தில் ஒரு பாகம் (கும்ஸு) பங்கிலிருந்து ஓர் அடிமைப் பெண்ணைக் கொடுத்திருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), மக்களிடமிருந்த கைதிகளை விடுதலை செய்தபோது அக்கைதிகள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்களிடமிருந்த கைதிகளை விடுதலை செய்துவிட்டார்கள்” என்று கூறிய சப்தத்தை உமர் (ரலி) செவியுற்றார்கள்.
உடனே உமர் (ரலி), “என்ன (சப்தம்) அது?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்களிடமிருந்த கைதிகளை விடுதலை செய்து விட்டார்கள்” என்று கூறினர். ஆகவே, உமர் (ரலி) (என்னிடம்), “அப்துல்லாஹ்! அந்த அடிமைப் பெண்ணை அவளது வழியில் விட்டுவிடு” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
குறிப்புகள் :
மஅமர் (ரஹ்) வழி அறிவிப்பு, “நபி (ஸல்) ஹுனைன் போரிலிருந்து திரும்பியபோது, (என் தந்தை) உமர் (ரலி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், தாம் அறியாமைக் காலத்தில் ஒரு பகல் இஃதிகாஃப் இருப்பதாக நேர்ந்துகொண்டதைப் பற்றி வினவினார்கள்” என்று ஆரம்பமாகிறது.
ஹம்மாது (ரஹ்) வழி அறிவிப்பில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அல்ஜிஃரானா எனுமிடத்திலிருந்து நிறைவேற்றிய உம்ரா பற்றி இப்னு உமர் (ரலி) முன்னிலையில் பேசப்பட்டது. அப்போது இப்னு உமர் (ரலி), (அதைப் பற்றி அறியாதிருந்த காரணத்தால்) “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அல்ஜிஃரானாவிலிருந்து உம்ரா செய்யவில்லை” என்று விடையளித்தார்கள். மேலும், “உமர் (ரலி) அறியாமைக் காலத்தில் ஓர் இரவு இஃதிகாஃப் மேற்கொள்வதாக நேர்ந்துகொண்டிருந்தார்கள்” என்று கூறினார்கள் என்று இடம்பெற்றுள்ளது.
முஹம்மது பின் இஸ்ஹாக் (ரஹ்) வழி அறிவிப்பில்,“ஒரு பகல் இஃதிகாஃப் இருப்பதாக நேர்ந்திருந்தார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.