அத்தியாயம்: 28, பாடம்: 11, ஹதீஸ் எண்: 3183

وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنِ ابْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّهُ قَالَ:‏

قَضَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي جَنِينِ امْرَأَةٍ مِنْ بَنِي لِحْيَانَ سَقَطَ مَيِّتًا بِغُرَّةٍ عَبْدٍ أَوْ أَمَةٍ ثُمَّ إِنَّ الْمَرْأَةَ الَّتِي قُضِيَ عَلَيْهَا بِالْغُرَّةِ تُوُفِّيَتْ فَقَضَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِأَنَّ مِيرَاثَهَا لِبَنِيهَا وَزَوْجِهَا وَأَنَّ الْعَقْلَ عَلَى عَصَبَتِهَا ‏.‏

பனூ லஹ்யான் (ஹுதைல்) குலத்தைச் சேர்ந்த (கர்ப்பிணி) பெண் ஒருத்தியின் சிசு, (மற்றொரு பெண் அடித்ததால்) இறந்து பிறந்தது. அது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ஓர் ஆண் அடிமையை, அல்லது ஓர் அடிமைப் பெண்ணை (இழப்பீடாக) வழங்க வேண்டுமென்று தீர்ப்பளித்தார்கள். பின்னர், தீர்ப்பளிக்கப்பட்ட அ(ந்தக் குற்றவாளி)ப் பெண் இறந்துவிட்டாள். ஆகவே, (அவள் சார்பாக) அவளுடைய தந்தைவழி உறவினர்கள் (அஸபா) இழப்பீடு வழங்க வேண்டுமென்றும், அவளது சொத்து, அவளுடைய ஆண் மக்களுக்கும் கணவருக்கும் உரியதென்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தீர்ப்பளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)