அத்தியாயம்: 29, பாடம்: 6, ஹதீஸ் எண்: 3215

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ الْقَعْنَبِيُّ، حَدَّثَنَا مَالِكٌ، ح وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، – وَاللَّفْظُ لَهُ – قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَبِي هُرَيْرَةَ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم سُئِلَ عَنِ الأَمَةِ إِذَا زَنَتْ وَلَمْ تُحْصِنْ قَالَ ‏ “‏ إِنْ زَنَتْ فَاجْلِدُوهَا ثُمَّ إِنْ زَنَتْ فَاجْلِدُوهَا ثُمَّ إِنْ زَنَتْ فَاجْلِدُوهَا ثُمَّ بِيعُوهَا وَلَوْ بِضَفِيرٍ ‏”‏ ‏.‏ قَالَ ابْنُ شِهَابٍ لاَ أَدْرِي أَبَعْدَ الثَّالِثَةِ أَوِ الرَّابِعَةِ ‏.‏ وَقَالَ الْقَعْنَبِيُّ فِي رِوَايَتِهِ قَالَ ابْنُ شِهَابٍ وَالضَّفِيرُ الْحَبْلُ ‏.‏


وَحَدَّثَنَا أَبُو الطَّاهِرِ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، قَالَ سَمِعْتُ مَالِكًا، يَقُولُ حَدَّثَنِي ابْنُ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، وَزَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم سُئِلَ عَنِ الأَمَةِ ‏.‏ بِمِثْلِ حَدِيثِهِمَا وَلَمْ يَذْكُرْ قَوْلَ ابْنِ شِهَابٍ وَالضَّفِيرُ الْحَبْلُ ‏.‏

حَدَّثَنِي عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ صَالِحٍ، ح وَحَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، كِلاَهُمَا عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ عَنْ أَبِي هُرَيْرَةَ، وَزَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏.‏ بِمِثْلِ حَدِيثِ مَالِكٍ وَالشَّكُّ فِي حَدِيثِهِمَا جَمِيعًا فِي بَيْعِهَا فِي الثَّالِثَةِ أَوِ الرَّابِعَةِ ‏.‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “கணவனில்லாத ஓர் அடிமைப் பெண் விபச்சாரம் செய்துவிட்டால் (அவளுக்கு என்ன தண்டனை வழங்க வேண்டும்)?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “அவள் விபச்சாரம் செய்தால் அவளைச் சாட்டையால் அடியுங்கள். பின்னரும் விபச்சாரம் செய்தால் மீண்டும் சாட்டையால் அடியுங்கள். பின்னரும் விபச்சாரம் செய்தால் மறுபடியும் சாட்டையால் அடியுங்கள். அதன் பின்னர் (அவள் விபச்சாரம் செய்தால்) அவளை ஒரு கயிற்றுக்காவது விற்றுவிடுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்புகள் :

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) கூறுகிறார்கள்: (அவளை விற்றுவிட வேண்டும் என்பது) மூன்றாவது தடவைக்குப் பிறகா அல்லது நான்காவது தடவைக்குப் பிறகா என்பது எனக்குத் தெரியவில்லை” என்று கூறினார்கள்.

அப்துல்லாஹ் பின் மஸ்லமா அல்கஅனபீ (ரஹ்) கூறுகிறார்கள்:
இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள ‘ளஃபீர்’ எனும் சொல்லுக்குக் ‘கயிறு’ என்பது பொருள் என இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) பொருள் கூறினார்கள்.

ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) வழி இரு அறிவிப்பாளர் தொடர்களில், “ஓர் அடிமைப் பெண் விபச்சாரம் செய்துவிட்டால் (அவளுக்கு என்ன தண்டனை வழங்க வேண்டும்)? என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது …” என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. அவற்றில். ‘ளஃபீர்’ என்பதற்கு ‘கயிறு’ என்பது பொருள் என இப்னு ஷிஹாப் (ரஹ்) கூறிய சொற்பொருள் இடம்பெறவில்லை.

மேலும், “அவளை விற்றுவிட வேண்டும் என்பது, மூன்றாவது தடவை விபச்சாரத்திற்குப் பிறகா, நான்காவது தடவைக்குப் பிறகா” என்பதில் ஐயம் எழுப்பப்பட்டுள்ளது.

Share this Hadith: