و حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى وَيَحْيَى بْنُ أَيُّوبَ وَقُتَيْبَةُ وَابْنُ حُجْرٍ قَالَ يَحْيَى بْنُ يَحْيَى أَخْبَرَنَا وَقَالَ الْآخَرُونَ حَدَّثَنَا إِسْمَعِيلُ وَهُوَ ابْنُ جَعْفَرٍ عَنْ شَرِيكٍ يَعْنِي ابْنَ أَبِي نَمِرٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ عَنْ أَبِيهِ قَالَ :
خَرَجْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الِاثْنَيْنِ إِلَى قُبَاءَ حَتَّى إِذَا كُنَّا فِي بَنِي سَالِمٍ وَقَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى بَابِ عِتْبَانَ فَصَرَخَ بِهِ فَخَرَجَ يَجُرُّ إِزَارَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْجَلْنَا الرَّجُلَ فَقَالَ عِتْبَانُ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ الرَّجُلَ يُعْجَلُ عَنْ امْرَأَتِهِ وَلَمْ يُمْنِ مَاذَا عَلَيْهِ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّمَا الْمَاءُ مِنْ الْمَاءِ
நான் ஒரு திங்கட்கிழமையன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் குபா எனும் இடத்திற்குச் சென்றேன். நாங்கள் பனூ ஸாலிம் கோத்திரத்தார் வசிக்குமிடத்திற்கு வந்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), இத்பான் பின் மாலிக் (ரலி) வீட்டு வாசலுக்குச் சென்று நின்று அவர்களை உரத்து அழைத்தார்கள். உடனே இத்பான் (ரலி) தமது கீழாடையை இழுத்தபடி (அவசரமாக) வெளியே வந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நாம் இவரை அவசரப் படுத்தி விட்டோமே!” என்று கூறினார்கள்.
அப்போது இத்பான் (ரலி), “அல்லாஹ்வின் தூதரே! (உடலுறவின்போது) விந்து வெளிவருவதற்கு முன்பே தம் மனைவியை விட்டகல அவசரப் படுத்தப்பட்ட ஒருவருக்கான சட்டம் என்னவென்று கூறுங்கள்” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “(விந்து)நீர் வெளிப்பட்டாலே (குளியல்)நீர் கடமையாகும்” என்றார்கள்.
அறிவிப்பாளர் : அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி)