حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا غُنْدَرٌ عَنْ شُعْبَةَ ح و حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى وَابْنُ بَشَّارٍ قَالَا حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ الْحَكَمِ عَنْ ذَكْوَانَ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ :
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ عَلَى رَجُلٍ مِنْ الْأَنْصَارِ فَأَرْسَلَ إِلَيْهِ فَخَرَجَ وَرَأْسُهُ يَقْطُرُ فَقَالَ لَعَلَّنَا أَعْجَلْنَاكَ قَالَ نَعَمْ يَا رَسُولَ اللَّهِ قَالَ إِذَا أُعْجِلْتَ أَوْ أَقْحَطْتَ فَلَا غُسْلَ عَلَيْكَ وَعَلَيْكَ الْوُضُوءُ
و قَالَ ابْنُ بَشَّارٍ إِذَا أُعْجِلْتَ أَوْ أُقْحِطْتَ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அன்ஸாரித் தோழர்களில் ஒருவரது இல்லத்தைக் கடந்து சென்றபோது அவரை அழைத்து வருமாறு ஒருவரை அனுப்பினார்கள். அந்த அன்ஸாரித் தோழர் (குளித்து விட்டுத்) தமது தலையிலிருந்து தண்ணீர் வழியும் நிலையில் (விரைந்து) வந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நாம் உங்களை அவசரப் படுத்தி விட்டோம் போலும்” என்றார்கள். அதற்கு அவர், “ஆம், அல்லாஹ்வின் தூதரே!” என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீங்கள் (உடலுறவின்போது) அவசரப்பட்டு எழ நேர்ந்தாலோ விந்தை வெளிப்படுத்தாமல் இருந்தாலோ குளிக்க வேண்டியதில்லை; நீங்கள் உளூச் செய்து கொள்வது போதுமானது” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி)
குறிப்பு :
இப்னு பஷ்ஷார் (ரஹ்) வழி அறிவிப்பில், “…. அவசரப்பட்டு அல்லது (விந்தை) வெளிப்படுத்தாமல் …” என இடம்பெற்றுள்ளது.