و حَدَّثَنِي إِسْحَقُ بْنُ مَنْصُورٍ وَأَبُو بَكْرِ بْنُ إِسْحَقَ عَنْ عَمْرِو بْنِ الرَّبِيعِ أَخْبَرَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ عَنْ جَعْفَرِ بْنِ رَبِيعَةَ عَنْ أَبِي الْخَيْرِ حَدَّثَهُ قَالَ حَدَّثَنِي ابْنُ وَعْلَةَ السَّبَإِيُّ قَالَ سَأَلْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ قُلْتُ :
إِنَّا نَكُونُ بِالْمَغْرِبِ فَيَأْتِينَا الْمَجُوسُ بِالْأَسْقِيَةِ فِيهَا الْمَاءُ وَالْوَدَكُ فَقَالَ اشْرَبْ فَقُلْتُ أَرَأْيٌ تَرَاهُ فَقَالَ ابْنُ عَبَّاسٍ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ دِبَاغُهُ طَهُورُهُ
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “நாங்கள் மேற்கே வசிக்கின்றோம். (தீவணங்கிகளான) மஜூஸிகள் தோல் பைகளில் தண்ணீரையும் கொழுப்பையும் எங்களிடம் கொண்டு வருகின்றனர். (நாங்கள் அந்தத் தோல்பைகளிலிருந்து அருந்தலாமா?)” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அருந்தலாம்” என்றார்கள். நான், “இது உங்களது சொந்தக் கருத்தா?” என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘அதைப் பதப்படுத்துவதே அதைத் தூய்மையாக்கிவிடும்’ என்று கூறுவதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக அப்துர் ரஹ்மான் பின் வஅலா அஸ்ஸபஇய்யீ (ரஹ்)