அத்தியாயம்: 3, பாடம்: 06, ஹதீஸ் எண்: 465

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏عَنْ ‏ ‏مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَيْسٍ ‏ ‏قَالَ سَأَلْتُ ‏ ‏عَائِشَةَ ‏
‏عَنْ وِتْرِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَذَكَرَ الْحَدِيثَ قُلْتُ كَيْفَ كَانَ يَصْنَعُ فِي الْجَنَابَةِ أَكَانَ يَغْتَسِلُ قَبْلَ أَنْ يَنَامَ أَمْ يَنَامُ قَبْلَ أَنْ يَغْتَسِلَ قَالَتْ كُلُّ ذَلِكَ قَدْ كَانَ يَفْعَلُ ‏ ‏رُبَّمَا اغْتَسَلَ فَنَامَ وَرُبَّمَا تَوَضَّأَ فَنَامَ قُلْتُ الْحَمْدُ لِلَّهِ الَّذِي جَعَلَ فِي الْأَمْرِ سَعَةً ‏
‏و حَدَّثَنِيهِ ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِيهِ ‏ ‏هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ ‏

நான் (அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம்), “பெருந்துடக்கான நிலையில் நபி (ஸல்) அவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள்? உறங்குவதற்கு முன் குளிப்பார்களா? குளித்து விட்டு உறங்குவார்களா?” என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “இரண்டு முறைகளையும் கையாண்டு வந்தார்கள். சில நேரங்களில் குளித்து விட்டுப் பின்னர் உறங்கினார்கள். சில நேரங்களில் (குளிக்காமல்) அங்கத் தூய்மை (உளூ) செய்து விட்டு உறங்கினார்கள்” என்று பதிலளித்தார்கள். நான், “(மார்க்க) நடைமுறைகளில் தாராள நெகிழ்வை ஏற்படுத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்” என்று கூறினேன்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக அப்துல்லாஹ் பின் அபீகைஸ் (ரஹ்).

குறிப்பு:

“நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வித்ருத் தொழுகையைப் பற்றிக் கேட்டேன். அன்னை ஆயிஷா (ரலி) அது தொடர்பான ஹதீஸையும் அறிவித்து விட்டு, தொடர்ந்த எனது கேள்விகளுக்கு மேற்கண்டவாறு விளக்கமும் கூறினார்கள்” என்று அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் அபீகைஸ் (ரஹ்) தமக்கு அறிவித்ததாக முஆவியா பின் ஸாலிஹ் (ரஹ்) குறிப்பிடுகிறார்.

Share this Hadith:

Leave a Comment