அத்தியாயம்: 31, பாடம்: 0, ஹதீஸ் எண்: 3248

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ، – يَعْنِي ابْنَ بِلاَلٍ – عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ يَزِيدَ، مَوْلَى الْمُنْبَعِثِ أَنَّهُ سَمِعَ زَيْدَ بْنَ خَالِدٍ الْجُهَنِيَّ صَاحِبَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ :‏

سُئِلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ اللُّقَطَةِ الذَّهَبِ أَوِ الْوَرِقِ فَقَالَ ‏”‏ اعْرِفْ وِكَاءَهَا وَعِفَاصَهَا ثُمَّ عَرِّفْهَا سَنَةً فَإِنْ لَمْ تَعْرِفْ فَاسْتَنْفِقْهَا وَلْتَكُنْ وَدِيعَةً عِنْدَكَ فَإِنْ جَاءَ طَالِبُهَا يَوْمًا مِنَ الدَّهْرِ فَأَدِّهَا إِلَيْهِ ‏”‏ ‏.‏ وَسَأَلَهُ عَنْ ضَالَّةِ الإِبِلِ فَقَالَ ‏”‏ مَا لَكَ وَلَهَا دَعْهَا فَإِنَّ مَعَهَا حِذَاءَهَا وَسِقَاءَهَا تَرِدُ الْمَاءَ وَتَأْكُلُ الشَّجَرَ حَتَّى يَجِدَهَا رَبُّهَا ‏”‏ ‏.‏ وَسَأَلَهُ عَنِ الشَّاةِ فَقَالَ ‏”‏ خُذْهَا فَإِنَّمَا هِيَ لَكَ أَوْ لأَخِيكَ أَوْ لِلذِّئْبِ ‏”‏ ‏.‏


وَحَدَّثَنِي إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا حَبَّانُ بْنُ هِلاَلٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، حَدَّثَنِي يَحْيَى بْنُ سَعِيدٍ، وَرَبِيعَةُ الرَّأْىِ بْنُ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ يَزِيدَ، مَوْلَى الْمُنْبَعِثِ عَنْ زَيْدِ بْنِ، خَالِدٍ الْجُهَنِيِّ أَنَّ رَجُلاً، سَأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم عَنْ ضَالَّةِ الإِبِلِ ‏.‏ زَادَ رَبِيعَةُ فَغَضِبَ حَتَّى احْمَرَّتْ وَجْنَتَاهُ ‏.‏ وَاقْتَصَّ الْحَدِيثَ بِنَحْوِ حَدِيثِهِمْ وَزَادَ ‏ “‏ فَإِنْ جَاءَ صَاحِبُهَا فَعَرَفَ عِفَاصَهَا وَعَدَدَهَا وَوِكَاءَهَا فَأَعْطِهَا إِيَّاهُ وَإِلاَّ فَهْىَ لَكَ ‏”‏ ‏.‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், கண்டெடுக்கப்பட்ட தங்கம், வெள்ளி ஆகியவை பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “அதன் பையையும் முடிச்சையும் அடையாளம் பார்த்து வைத்துக்கொள். பிறகு ஓராண்டுக் காலத்திற்கு அதைப் பற்றி அறிவிப்புச் செய்துகொண்டேயிரு. அது உன்னிடம் அடைக்கலமாகவே இருக்கட்டும். அதைத் தேடிக்கொண்டு யாரும் என்றைக்காவது ஒருநாள் வந்தால் அவரிடம் அதை ஒப்படைத்துவிடு. (அதற்கு உரியவரை) நீ கண்டுடிபிடிக்க முடியாவிட்டால் நீயே அதைச் செலவிட்டுக்கொள்” என்று கூறினார்கள்.

அவர்களிடம் கேள்வி கேட்டவர், வழி தவறி வந்த ஒட்டகத்தைப் பற்றி கேட்டதற்கு, “உனக்கு அதைப் பற்றிக் கவலைப்பட என்ன இருக்கிறது? (அதன் வழியில்) அதை விட்டுவிடு. ஏனெனில், அதனுடன் (நடப்பதற்குக்) கால்குளம்பும், (நீர் நிரப்பிக்கொள்ள) அதன் திமிலும் உள்ளன. அதை அதன் உரிமையாளர் கண்டுபிடிக்கும்வரை அது நீர் நிலைக்குச் செல்லும்; மரங்களிலுருந்து (இலைகளைத்) தின்னும். (அதைப் பற்றி நீ ஏன் கவலைப்படவேண்டும்?)“ என்று கூறினார்கள்.

அவர்களிடம் (வழிதவறி வந்த) ஆட்டைப் பற்றி அவர் கேட்டபோது, “நீ அதைப் பிடித்துக்கொள். ஏனெனில், அது உனக்குரியது அல்லது உன் சகோதரனுக்குரியது அல்லது ஓநாய்க்குரியது” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி)


குறிப்புகள் :

யஹ்யா பின் ஸயீத் (ரஹ்) வழி அறிவிப்பு, “ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வழிதவறி வந்த ஒட்டகத்தை பற்றிக் கேட்டார் …” என்று ஆரம்பமாகிறது. ரபீஆ பின் அபீஅப்திர் ரஹ்மான் அர்ரஃயு (ரஹ்) வழி அறிவிப்பில் “இதைக் கேட்டதும் நபி(ஸல்)  தம் கன்னங்கள் சிவக்குமளவுக்குக் கோபப்பட்டார்கள்” என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸ்களில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.

மேலும், “… அதன் உரிமையாளர் (அதைத் தேடிக்கொண்டு) வந்து, அவர் அதன் பையையும் எண்ணிக்கையையும் முடிச்சையும் (சரியாக) அறிந்திருந்தால் அவரிடம் அதைக் கொடுத்துவிடு. இல்லையேல், அது உனக்கே உரியது“ என்று கூறினார்கள் எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.