அத்தியாயம்: 32, பாடம்: 16, ஹதீஸ் எண்: 3304

وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَبِي ح، وَحَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَالْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ قَالاَ حَدَّثَنَا يَعْقُوبُ، – وَهُوَ ابْنُ إِبْرَاهِيمَ –    حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ، زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم أَخْبَرَتْهُ :‏

أَنَّ فَاطِمَةَ بِنْتَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم سَأَلَتْ أَبَا بَكْرٍ بَعْدَ وَفَاةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يَقْسِمَ لَهَا مِيرَاثَهَا مِمَّا تَرَكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِمَّا أَفَاءَ اللَّهُ عَلَيْهِ ‏.‏ فَقَالَ لَهَا أَبُو بَكْرٍ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ لاَ نُورَثُ مَا تَرَكْنَا صَدَقَةٌ ‏”‏ ‏.‏ قَالَ وَعَاشَتْ بَعْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم سِتَّةَ أَشْهُرٍ وَكَانَتْ فَاطِمَةُ تَسْأَلُ أَبَا بَكْرٍ نَصِيبَهَا مِمَّا تَرَكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ خَيْبَرَ وَفَدَكٍ وَصَدَقَتِهِ بِالْمَدِينَةِ فَأَبَى أَبُو بَكْرٍ عَلَيْهَا ذَلِكَ وَقَالَ لَسْتُ تَارِكًا شَيْئًا كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَعْمَلُ بِهِ إِلاَّ عَمِلْتُ بِهِ إِنِّي أَخْشَى إِنْ تَرَكْتُ شَيْئًا مِنْ أَمْرِهِ أَنْ أَزِيغَ فَأَمَّا صَدَقَتُهُ بِالْمَدِينَةِ فَدَفَعَهَا عُمَرُ إِلَى عَلِيٍّ وَعَبَّاسٍ فَغَلَبَهُ عَلَيْهَا عَلِيٌّ وَأَمَّا خَيْبَرُ وَفَدَكُ فَأَمْسَكَهُمَا عُمَرُ وَقَالَ هُمَا صَدَقَةُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم كَانَتَا لِحُقُوقِهِ الَّتِي تَعْرُوهُ وَنَوَائِبِهِ وَأَمْرُهُمَا إِلَى مَنْ وَلِيَ الأَمْرَ


قَالَ فَهُمَا عَلَى ذَلِكَ إِلَى الْيَوْمِ ‏.‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இறந்துவிட்ட பிறகு, அவர்களின் மகள் ஃபாத்திமா (ரலி), அல்லாஹ், தன் தூதருக்கு ஒதுக்கித் தந்திருந்த (‘ஃபைஉ’ச்) செல்வத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) விட்டுச்சென்றதிலிருந்து தமக்குச் சேர வேண்டிய வாரிசுச் சொத்தைப் பங்கிட்டுத் தருமாறு (கலீஃபா) அபூபக்ரு (ரலி) அவர்களிடம் கேட்டார்கள்.

அப்போது ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் அபூபக்ரு (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘(இறைத்தூதர்களான) எங்களுக்கு யாரும் (சொத்தில்) வாரிசாக முடியாது. நாங்கள் விட்டுச்செல்பவை எல்லாம் தர்மம் ஆகும்’ என்று சொல்லியிருக்கிறார்கள்” எனக் கூறி(அதிலிருந்து பங்கு தர மறுத்து)விட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பிறகு ஃபாத்திமா (ரலி) ஆறு மாதங்களே உயிர் வாழ்ந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (தமது தனி நிதியாக) விட்டுச் சென்ற கைபர், ஃபதக் ஆகிய பகுதிகளின் சொத்துகளிலிருந்தும் மதீனாவில் அவர்கள் தர்மமாக விட்டுச்சென்ற சொத்திலிருந்தும் தமக்குப் பங்கு தரும்படி அபூபக்ரு (ரலி) அவர்களிடம் ஃபாத்திமா (ரலி) கேட்டுக்கொண்டே இருந்தார்கள்.

அபூபக்ரு (ரலி) ஃபாத்திமாவின் கோரிக்கையை ஏற்க மறுத்து, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) செய்துவந்த எந்த ஒன்றையும் நான் செய்யாமல் விடமாட்டேன். அதை நான் செய்தே தீருவேன். அவர்களுடைய செயல்களில் எதையேனும் நான் விட்டுவிட்டால் நான் வழி தவறிவிடுவேனோ என அஞ்சுகிறேன்” என்று சொன்னார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மதீனாவில் தர்மமாக விட்டுச் சென்ற சொத்தை (அபூபக்ரு (ரலி) மறைவுக்குப் பின்) (கலீஃபா) உமர் (ரலி), அலீ (ரலி) அவர்களிடமும் அப்பாஸ் (ரலி) அவர்களிடமும் ஒப்படைத்தார்கள். அந்தச் சொத்தி(ன் பராமரிப்பி)ல் அப்பாஸ் (ரலி) அவர்களை அலீ (ரலி) மிகைத்து (ஓரங்கட்டி)விட்டார்கள்.

கைபர் மற்றும் ஃபதக் பகுதிகளில் இருந்த சொத்துகளை (கலீஃபா) உமர் (ரலி) (யாரிடமும் ஒப்படைக்காமல்) தமது பொறுப்பிலேயே வைத்துக்கொண்டார்கள். மேலும், “இவ்விரண்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தர்மமாக விட்டுச்சென்றவை. அவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட கடமைகளையும் அவசரத் தேவைகளையும் நிறைவேற்றுவதற்காக (ஒதுக்கப்பட்டு) இருந்தன. அவ்விரண்டின் அதிகாரமும் ஆட்சிக்குப் பொறுப்பேற்பவரிடம் இருக்க வேண்டும்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) (இந்த ஹதீஸை அறிவித்தபோது), “அந்த இரு சொத்துகளும் இன்றுவரை அவ்வாறே (ஆட்சியாளரின் பொறுப்பிலேயே) இருந்து வருகின்றன” என்று சொன்னார்கள்.

Share this Hadith: